Published:Updated:

ஆயுள் காப்பீடு... தேர்வு செய்யும் வழிமுறைகள்! - கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்..!

ஆயுள் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் அம்சங்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதா என மதிப்பீடு செய்ய வேண்டும்

‘‘லக்ஷ்யா என்ற எண்டோவ்மென்ட் பாலிசியை ஐ.சி.ஐ.சி.ஐ புரூ நிறுவனம் வெளியிட்டிருக் கிறது. வாடிக்கையாளர்களின் பல்வேறு வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த பாலிசியில் முதிர்வுத் தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தொடர் வருமானமாகப் பெறும் வாய்ப்பை வழங்குகிறது’’ என்ற தகவலுடன் பேச ஆரம்பித்தார் ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை விநியோக அதிகாரியான அமித் பால்தா (Amit Palta). அவர் நமக்களித்த பேட்டி இனி...

கொரோனா தொற்றுநோய் பரவலுக்குப்பின், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முக்கியத்துவம் என்ன?

அமித் பால்தா
அமித் பால்தா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது பாலிசிதாருக்கு எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். கோவிட் 19 தொற்று நோய், சம்பாதிக்கும் ஒவ்வொரு நபருக்கும், அவரை சார்ந்திருப்பவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேவையை அதிகரித்துள்ளது. அதற்கு டேர்ம் பிளான் கைகொடுக்கிறது.

இந்த பாலிசி மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை, பாலிசிதாரரைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையைத் தொடர தேவையான நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தும். டேர்ம் பிளான்கள் குடும்பத்துக்கு வருமான மாற்றுக் கருவியாகச் செயல்படுகின்றன.’’

ஆயுள் காப்பீட்டு பாலிசியைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எவை?

‘‘பாலிசி எடுக்கும் முன் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் அம்சங்கள் உங்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதா என மதிப்பீடு செய்ய வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆயுள் காப்பீடு என்பது காப்பீட்டாளருக்கும் பாலிசிதாரருக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தம் ஆகும். ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசியைத் தேர்வு செய்யும்போது முக்கியமாக 5 விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. பிரீமியத்தை மட்டுமே கவனிக்கக் கூடாது. கூடவே, அதன் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு கவனிக்க வேண்டும்.

2. எவ்வளவு காலத்தில் இழப்பீடு வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பாலிசிதாரர் இல்லாதபட்சத்தில் குடும்பத்தினருக்கு விரைந்து இழப்பீடு தொகை கிடைத்து, அவர்களின் வழக்கமான வாழ்க்கையைத் தொடர முடியும்.

3. பாலிசிதாரர்களின் புகார்களுக்கு எவ்வளவு விரைவாகத் தீர்வு அளித்திருக் கிறார்கள் எனக் கவனிப்பது மிக முக்கியம். இல்லையென்றால் புகார்களைச் சரிசெய்ய பாலிசிதாரர் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

4. வலுவான டிஜிட்டல் தளம். அப்போதுதான் கோவிட்–19 பரவல் போன்ற காலத்தில்கூட அவர்களால் பாலிசிதாரர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்க முடியும்.

5. பிராண்ட் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும். பொதுமக்களிடம் பிராண்ட் பற்றி நல்ல பெயர் இருக்கும்பட்சத்தில் அதன் சேவையும் சிறப்பாக இருக்கும்.

இந்த ஐந்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்-19-க்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத்துறை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் எவை, இந்தச் சவால்களை எதிர்கொள்ள நீங்கள் பின்பற்றும் உத்திகள் என்னென்ன?

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

‘‘சமூக இடைவெளி தொடர்பான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முற்றிலும் அவசியம் என்பதால், டிஜிட்டல் வாழ்க்கைமுறை புதிய இயல்பு வாழ்க்கையாக மாறியது. வலுவான தொழில்நுட்பங்கள். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை விரைவாக மாற்றியமைக்க உதவுகிறது.

டிஜிட்டல் உலகில் எப்படிச் செயல்பட வேண்டும் எங்கள் விற்பனைப் பிரிவினர் மற்றும் விநியோகப் பிரிவினருக்கு ஏற்கெனவே நாங்கள் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளோம். மேலும், பாலிசிதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் சேவை அளிக்க கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.

எங்கள் டிஜிட்டல் செயல்பாட்டாளர்கள் தடையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் இழப்பீடு கோரல் தீர்வை உறுதிசெய்துள்ளனர். எங்கள் டிஜிட்டல் தளம் வாடிக்கையாளர்களுக்கு சேவை கோரிக்கைகளைத் தாங்களாகவே தொடங்கவும் முடிக்கவும் அங்கீகாரம் அளித்துள்ளது.

எங்கள் டிஜிட்டல் தளம் வழங்கும் வசதிகள் குறித்து நாங்கள் எங்கள் பாலிசிதாரர்களுக்குத் தெரிவித்துள்ளோம். வாட்ஸ் அப், சாட்போட்லிகோ, மொபைல் ஆப் மற்றும் வலைதளம் ஆகியவை மூலம் எங்கள் சேவைகளை பாலிசிதாரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.’’

டிஜிட்டல் உலகில் எப்படிச் செயல்பட வேண்டும் எங்கள் விற்பனைப் பிரிவினர் மற்றும் விநியோகப் பிரிவினருக்கு ஏற்கெனவே நாங்கள் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

இழப்பீடுகளை விரைந்து வழங்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

‘‘தற்போதுள்ள திட்டங்கள் அனைத்திலும் கோவிட்-19 பாதிப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. எங்களின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகள் இழப்பீடு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற எங்களுக்கு உதவிவருகிறது.

2019-20 நிதியாண்டைப் பொறுத்தவரை, ஒரு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்ட சராசரி நேரம் 1.6 நாள்களுக்குக் குறைவாகவே இருந்தது. அனைத்து ஆவணங்களும் கிடைத்த ஒரே நாளில் இழப்பீடுகளை வழங்க எங்கள் ‘நிச்சயமாக இழப்பீடு’ (‘Claim for Sure’) சேவை முயற்சி உறுதியளிக்கிறது.’’

தற்போதைய சூழ்நிலையில், ஆன்லைன் மூலம் பாலிசி விற்பதில் உங்கள் அணுகுமுறை என்ன?

‘‘தற்போள்ள சூழல், பாலிசிதாரர்களை நேரில் சந்திக்கத் தடையாக உள்ளது. எங்கள் டிஜிட்டல் தளம், பாலிசிதாரர்களை அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் தொடர்புகொள்ள உதவுகின்றன.

நாட்டின் டிஜிட்டல் சூழல் அமைப்பை மேம்படுத்துவதன் மூலம், கே.ஒய்.சி (KYC) அங்கீகாரத்தை ஆன்லைன் மூலமே செய்ய முடியும்.

ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான காலத்தில் எங்கள் புதிய வணிகத்தில் ஆன்லைனின் பங்களிப்பு சுமார் 98% ஆகும். இது ஆன்லைன் மூலம் சேவை அளிப்பதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.”