நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ்... புதுப்பிக்க மறுக்கும் நிறுவனங்கள்..! என்ன காரணம்...?

குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ்...

G R O U P I N S U R A N C E

கடந்த சில வாரங்களாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீதான புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. வாட்ஸ்அப்களில் இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. என்னாச்சு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு..?

எஸ்.ஶ்ரீதரன் 
நிதி ஆலோசகர், 
wealthladder.
co.in
எஸ்.ஶ்ரீதரன் நிதி ஆலோசகர், wealthladder. co.in

முதலில், இன்ஷூரன்ன்ஸ் நிறுவனங்கள் எல்லா பாலிசிகளையும் புதுப்பிக்க மறுக்கவில்லை. குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸைப் புதுப் பிப்பதில் மட்டுமே இந்த பிரச்னை உள்ளது. குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன? இது ஒரு நிறுவனம் அவர்களது ஊழியர்களுக்கு எடுத்துத் தரும் காப்பீடாகும். இந்த வகையான இன்ஷூரன்ஸில் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை செய்யும் தன்மை, ஊழியர்களின் சராசரி வயது மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து டேர்ம் இன்ஷூரன்ஸின் பிரீமியம் நிர்ணயிக்கப்படும்.

பொதுவாக, இந்த பாலிசிகளின் பிரீமியம் தனிநபர் பாலிசிகளைவிட சற்றுக் குறைவாக இருக்கும். மேலும், இந்த பாலிசிகளை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்.

இந்த வகையான பாலிசிகள் எடுப்பதற்கு ஒரு நிறுவனம் வேண்டும். பொதுவாக, முதலாளி-பணியாளர் குழுக்களுக்கு இந்த பாலிசிகள் பொருந்தும். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இந்த நிறுவனத்தைத் தாண்டி, வங்கிகளின் வாடிக்கை யாளர்கள், தன்னார்வலக் குழுக்கள், தொழில்முறை குழுக்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களுக்கும் இந்த வகையான குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களை வழங்கி வந்தன.

குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ்...
குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ்...

கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் மோசமடைந்து வரும் கோவிட்-19 சூழ்நிலையால், நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிற காரணத்தால் ஆயுள் காப்பீட்டாளர்களின் க்ளெய்ம் மிக அதிகமாக உள்ளது. ஆகவே, இந்த வருடம் குரூப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிகமாக க்ளெய்ம் செய்யும் நிறுவனங்களின் பாலிசிகளைப் புதுப்பிப்பதில் சற்று தாமதமும் ஒரு சில நிறுவனங்கள் பாலிசிகளைப் புதுப்பிக்க மறுப்பதாகவும் ஒரு சில புகார்கள் வந்துள்ளன.

ட்விட்டர் மற்றும் லிங்க்ட்-இன் போன்ற சமூகத்தளங்களில், இது போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குரூப் பாலிசிகளில் அதிக ரிஸ்க் இருப்பதால், பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸைப் புதுப்பிக்கவில்லை என்று மக்கள் புகார் கூறினர். சமீபத்தில், ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார். அதில், மூன்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அவருக்கு இன்ஷூரன்ஸ் தர மறுத்ததை விளக்கமாக எழுதியிருக்கிறார்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்...
டேர்ம் இன்ஷூரன்ஸ்...

பொதுவாக, டேர்ம் இன்ஷூ ரன்ஸின் காப்பீட்டுத் தொகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும்பட்சத்தில், இன்ஷூரனஸ் நிறுவனங்கள் மறுகாப்பீட்டாளர் களை அணுகும். மறுகாப்பீட் டாளர்கள் குரூப் டேர்ம் இன்ஷூ ரன்ஸை மறுபரிசீலனை செய்து, அவர்களால் அந்த ரிஸ்க்கை எடுக்க முடியும் என்கிறபட்சத்தில் மட்டுமே அதற்கு ஒப்புதல் தரும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்த மறுகாப்பீட்டாளர்கள் தங்கள் போர்ட் ஃபோலியோவில் உள்ள நிலையற்ற தன்மையைத் தவிர்க்க விரும்புவதால், குரூப் இன்ஷூரன்ஸை மதிப்பிடும்போது மிகவும் அதிக கவனத்துடன் செயல் படுகின்றனர்.

இதுதான் குரூப் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகளைப் புதுப்பிக்க மறுப்பதற்கு முக்கியமான காரணம் ஆகும். இதனால் பெரிதும் பாதிக்கப் படுவது, சிறிய குழுக்கள் மற்றும் குறைந்த நபர்கள் உள்ள நிறுவனங்கள் ஆகும். மேலும், தற்போது பிரீமியம் தொகையும் அதிகமாவது நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 24 லைஃப் இன்ஷூரனஸ் நிறுவனங்கள் சாதாரண உயிரிழப்புக்காக க்ளெய்ம் கொடுத்து வந்தனர். இது கோவிட்-19 காலத்தில் சாதாரண மற்றும் கோவிட்-19 சம்பந்தப் பட்ட இறப்பால் பல மடங்கு அதிகரித்தது. ஆகவே, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பல கோடி மதிப்புக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் இறப்புக்கான காப்பீட்டு தொகைகளை வழங்கி வருகின்றன. இந்த நேரத்தில் கோவிட்-19 பேரிடர் காலத்தில் காப்பீட்டு க்ளெய்ம் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

ஆயுள் காப்பீட்டு கவுன்சில் கொடுக்கும் தகவல்படி, மார்ச் 25 வரை நிலவரப்படி, 25,500 கோவிட் இறப்புக் கோரிக்கைகளுக்கு ஆயுள் காப்பீட்டாளர்கள் ரூ.1,986 கோடி செலுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில், கோவிட்டின் இரண்டாவது அலை நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் மிகவும் ஆபத்தான விகிதத்தில் உயர்ந் துள்ளன. இன்னும் அதிகமான வர்கள் இழப்பீட்டைக் கோரினால், இந்த நிறுவனங்களின் நிலைமை மோசமாகிவிடும். இதனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கடன் விகிதங்கள் பாதிப்படையாமல் இருந்தாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லாப விகிதம் நிச்சயம் பாதிப் படையும் என்பதால், இனி இதைப் பொறுத்தே குருப் பாலிசி களின் புதுப்பித்தல் அமையும் என்கிறார்கள்.

இது மாதிரியான சிக்கலைத் தவிர்க்க உங்களுக்கென தனியாக டேர்ம் பாலிசியை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி உங்களுக்குப் புதுப்பிக்கப் படாமல் போனாலும், உங்களுக் கான பாலிசி, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.