Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் சிக்கலின்றி வேகமாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் சிக்கலின்றி வேகமாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

முனைவர்.க.பாலசந்தர், திருநெல்வேலி

இன்றைக்கு மருத்துவ மனையில் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கு அதிகம் செலவா கிறது. அந்தச் செலவை ஈடுசெய்வதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உதவுகிறது. விபத்து, நோய் பாதிப்பு, விஷ ஜந்து கடித்த நிலையில் ஒருவருக்கு சிகிச்சை கொடுப் பதற்கு ஆகும் மருத்துவச் செலவை ஈடு செய்வதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது.

முனைவர்.க.பாலசந்தர் 
திருநெல்வேலி
முனைவர்.க.பாலசந்தர் திருநெல்வேலி

விண்ணப்பப் படிவத்தை பாலிசி வாங்க விரும்பும் நபரே கவனமாக சிரத்தை யுடன் நிரப்ப வேண்டும். அதில் உடல்நலம், இதற்கு முன் மேற்கொண்ட மருத்து வச் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தர வேண்டும்.

உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் பாதி உண்மையான தகவல்களைக் கொடுத்து இன்ஷூ ரன்ஸ் கம்பெனியிடம் க்ளெய்ம் கோரும் சமயத்தில், க்ளெய்ம் கிடைப்பது கால தாமதம் ஆகலாம் அல்லது க்ளெய்ம் முற்றிலும் மறுக்கப்படலாம். இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் க்ளெய்மை சிக்க லின்றி வேகமாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் சிக்கலின்றி வேகமாகக் கிடைக்க
என்ன செய்ய வேண்டும்?

முன்கூட்டியே முடிவு செய்யப் பட்ட சிகிச்சை...

பாலிசிதாரர் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தால், இன்ஷூ ரன்ஸ் கம்பெனி அல்லது டி.பி.ஏ-விடம் (TPA-Third Party Administrator) முன் அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படலாம். இதன்மூலம் க்ளெய்ம் கிடைப் பது சுலபமாக இருக்கும்.

பாலிசிதாரர் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் விபத் தைச் சந்தித்து மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார் அல்லது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படு கிறார் எனில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் இன்ஷூ ரன்ஸ் கம்பெனி அல்லது டி.பி.ஏ-விடம் தகவலைத் தெரிவித்து க்ளெய்ம் பெறுவது குறித்த அனைத்து வழிமுறை களையும் கேட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விரைவில் க்ளெய்ம் பெறத் தேவைப்படும் ஆவணங்கள்...

விரைவில் க்ளெய்ம் பெற மருத்துவமனையிலிருந்து உரிய ஆவணங்களைப் பெற்று டி.பி.ஏ-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

 நோய் கண்டறிந்த அறிக்கை.

 மருத்துவ சிகிச்சை அறிக்கை.

 அறை வாடகை ரசீது.

 மருந்து செலவு ரசீது.

 எக்ஸ்-ரே / இசிஜி / ஸ்கேன் அறிக்கை.

 மருத்துவமனை அனுமதி மற்றும் வெளியேற்ற அறிக்கைகள்.

 சிகிச்சை சார்ந்த பிற செலவு ரசீதுகள்.

 நிரப்பப்பட்ட க்ளெய்ம் கோரும் விண்ணப்பம்.

 பாலிசிதாரரின் அடையாள அட்டை.

 டிபிஏ அட்டை போன்ற ஆவணங்களை விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.

க்ளெய்ம் பெறும் முறைகள்...

கேஷ்லெஸ் முறை (Cashless Option)

இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மருத்துவமனையில் பாலிசிதாரர் சிகிச்சை செய்ய விரும்பினால், உரிய காப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் கம்பெனி நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவிடும். அவசியம் இருந்தால் மட்டும் மீதமுள்ள சிறு தொகையை பாலிசிதாரர் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டி யிருக்கும்.

கேஷ் ரீஇம்பர்ஸ்மென்ட் முறை...

பாலிசிதாரரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவரின் நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்து அதை முழுமையாகக் குணப்படுத்து வதற்கேற்ற எந்த மருத்துமனையுடனும் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், பாலிசிதாரர் தான் விரும்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம்.

சிகிச்சை பெற்றதற்கான அனைத்து செலவுகளையும் பாலிசிதாரர் முதலில் மருத்துவமனைக்கு செலுத்தி விட வேண்டும். அவர் குணமடைந்தபிறகோ, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன 15 நாள் களுக்குள்ளோ, சிகிச்சை சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களுடன் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பி க்ளெய்ம் பெறலாம்.