பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மழை வெள்ள பாதிப்பு... கைகொடுக்கும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம்!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ராகேஷ் ஜெயின், முதன்மை செயல் அதிகாரி, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

இந்தியாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் எதிர்பாராத மழை வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் பாதிக்கப்படுகின்றன.

ராகேஷ் ஜெயின், முதன்மை செயல் அதிகாரி, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ராகேஷ் ஜெயின், முதன்மை செயல் அதிகாரி, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

2005 & 2015 வெள்ள பாதிப்பு...

சென்னையில் 2005 மற்றும் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய வெள்ள பாதிப்பால் ஏராள மான வீடுகளில் முதல் தளம் வரைக்கும் தண்ணீர் வந்தது. இதனால், லட்சக்கணக் கானவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதைச் சரி செய்ய லட்சக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியிருந்தது.

இந்தியாவில் சுமார் 12 சதவிகித பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. 2021-ம் ஆண்டில் வெள்ளத்தால் சுமார் ரூ.18,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஸ்விஸ் சிக்மா இயற்கைப் பேரழிவு அறிக்கை (Swiss SIGMA Natural Catastrophe Report) தெரிவித்துள்ளது.

வீட்டுக் காப்பீட்டு பாலிசி...

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். மேலும், தொடர்ந்து கனமழை பெய்யும் சூழலில் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடும். இதுபோன்ற சூழலில் வெள்ளத்தால் ஏற்படும் நிதி பாதிப்புகளுக்கு எதிராக வீட்டு உரிமையாளர்கள் குறைந்தபட்சம் வீட்டுக் காப்பீட்டு பாலிசி எடுத்து பாதுகாத்துக்கொள்ள முடியும். வீட்டுக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைத்திருப்பது, இயற்கைப் பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, பாதுகாப்பை உறுதி செய்கிறது. பாலிசி மூலம் கிடைக்கும் இழப்பீடு பாதிப்பை ஈடு செய்வதாக இருக்கும்.

மழை வெள்ள பாதிப்பு... கைகொடுக்கும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம்!

வெள்ள கவரேஜ் பாலிசி...

பெரும்பாலான பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வீட்டுக் காப்பீட்டுத் (Home Insurance) திட்டங்களை வழங்கி வருகின்றன. இது வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை மற்றும் மனிதர் களால் உருவாக்கப்படும் பேரழிவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்குவதாக இருக்கிறது.

பாரத் க்ரிஹா ரக்‌ஷா (Bharat Griha Raksha -BGR) பாலிசி, ஹவுஸ் ஹோல்டர்ஸ் பேக்கேஜ் (Householder’s Package) பாலிசி ஆகிய இரண்டு வெள்ளத்துக்கான கவரேஜ் பாலிசிகள் கிடைக்கின்றன. இரண்டு பாலிசிகளும் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது பங்களா உரிமையாளர்களுக்கு வெள்ளம், சூறாவளி, புயல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குகின்றன. இந்த பாலிசிகள் வீட்டின் கட்டமைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு (Structures and Contents) ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி நிதி ரீதியாகப் பாதுகாக்கின்றன. ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சேதங்களுக்கும் இந்த இரண்டு வகையான பாலிசிகளிலும் இழப்பீடு வழங்கப்படுகிறது.

சிறிய பிரீமிய தொகை...

வெள்ளம் தொடர்பான சேதம் உட்பட எந்தவொரு சேதத்துக்கும் எதிராக வீட்டை நிதி ரீதியாக பாதுகாக்க சிறிய தொகையை பிரீமியமாகச் செலுத்தினாலே போதுமானது. வீட்டுக் காப்பீட்டுக்கான ஓர் அடிப்படை பாலிசிக்கான பிரீமியம் மிகவும் குறைவானதே. அதாவது, ரூ.20 லட்சம் கவரேஜுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை பிரீமியம் செலுத்தினால் போதும். அதாவது, ரூ.20 லட்சம் பாலிசிக்கு ஓராண்டுக்கான பிரீமியம் சுமார் ரூ.1,825 முதல் ரூ.2,555-ஆக இருக்கிறது.

இயற்கை மற்றும் மனிதர் களால் உருவாக்கப்படும் பாதிப்பு களுக்கு எதிராக ஒரு தொகுப்பான கவரேஜை பேக்கேஜ் பாலிசி வழங்குகிறது. அடிப்படை பாலிசியுடன் ஒப்பிடும்போது இந்த பேக்கேஜ் பாலிசிக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். இருந்தாலும், பாலிசி தாரர்கள் நீண்ட கால பாலிசியாக 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கள் என பாலிசி காலத்தைத் தேர்வு செய்தால், இரு பாலிசி களிலும் ஆண்டு பிரீமியம் இன்னும் குறையும். அதாவது, நீண்ட கால பாலிசியாக எடுக்கும் போது பிரீமியத்தில் சுமார் 10 - 15 சதவிகிதம் தள்ளுபடி கிடைப்ப தால் பிரீமியம் குறைகிறது.

மழை வெள்ள பாதிப்பு... கைகொடுக்கும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம்!

இழப்பீடு கோரும் நடைமுறை...

இழப்பீடு ஏதாவது கோரும் பட்சத்தில், பாலிசி எடுத்திருப்பவர் அது குறித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு உடனடியாகத் தகவல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தின் சர்வேயர், ஆய்வாளர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரக்கூடும். மேலும், சரியான ஆவணங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் தான் இழப்பீடு விரைவாகக் கிடைக்கும். பாலிசி எடுக்கும் போதே இழப்பீடு கோருவதற் கான க்ளெய்ம் நடைமுறைகளை கேட்டு அறிந்து குறித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வீட்டுக் காப்பீட்டு பாலிசி எடுத்து பாதுகாப்பதன் மூலம் சிக்கலான நேரத்தில் நிதி ரீதியான கஷ்டங்களைக் குறைக்க முடியும்.