Published:Updated:

பிரசவ செலவுக்கான மருத்துவக் காப்பீடு... எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்?

மருத்துவக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

பிரசவ செலவுக்கான மருத்துவக் காப்பீடு... எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்?

மருத்துவக் காப்பீடு

Published:Updated:
மருத்துவக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு

மகப்பேறு அல்லது கர்ப்பம் என்பது குடும்ப வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். பிரசவச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இந்தச் செலவுகள் கிராமப்புறங்களைவிட நகரங்களில் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அந்தச் செலவுகளை ஈடுகட்ட அதற்கான காப்பீட்டு பாலிசியை எடுப்பது அவசியமாகி இருக்கிறது.

ஆர்.வெங்கடேஷ், 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

மகப்பேறு காப்பீடு

பொதுவாக, பிரதான மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் ஒரு பகுதியாக பிரசவச் செலவு களுக்கு க்ளெய்ம் வழங்கப்படுகிறது. பிரதான மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் மகப்பேறு செலவுகளுக்கு கவரேஜ் இல்லை எனில், துணை பாலிசியாக (Rider) மகப்பேறு காப்பீட்டு பாலிசி வழங்கப்படுகிறது.

இந்தக் காப்பீடு, சாதாரண பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு தொடர்பான செலவுகளை உள்ளடக்கியது.

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் மகப்பேறு காப்பீட்டின் பலனையும் சேர்த்து வழங்குகின்றன. பெரும்பான்மையான கார்ப்பரேட் குழு பாலிசிகளில், மகப்பேறு என்பது ஒரு ரைடர் பாலிசியாக சுமார் ரூ.30,000 - ரூ.50,000 வரை கவரேஜ் கொண்டதாக இருக்கும்.

எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?

மகப்பேறு காப்பீட்டில் எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும், எவற்றுக்கெல்லாம் கிடைக்காது என்பது பற்றிய முழுமையான புரிந்துகொள்ளல் இருந்தால் மட்டுமே சிறந்த காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க முடியும்.

மகப்பேறு காப்பீட்டில், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய, மருத்துவமனை அனுமதி மற்றும் மருத்துவமனைக்குப் பிந்தைய செலவுகளுக்கு கவரேஜ் இருக்கிறது. இதில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு 30 நாள்களுக்கு முந்தைய செலவுகள், பரிசோதனை செலவுகள், நர்சிங் கட்டணம், அறை வாடகை, பிரசவச் செலவுகள், புதிதாகப் பிறந்த குழந்தை களுக்கான செலவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சைக் கட்டணம், மருத்துவர் ஆலோசனை கட்டணம், மற்றும் மயக்க மருந்து ஆலோசனை மற்றும் செலவு போன்றவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.

கருவுறாமல் இருந்தால் அதைச் சரிசெய்ய ஆகும் செலவுகள், குழந்தை பிறப்பில் சிக்கல் இருந்து, மருத்துவ ரீதியாக கர்ப்பத்தைக் கலைத்தல் ஆகிய செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

பொதுவாக, பாலிசிக் காலத்தின்போது அதிக பட்சம் இரண்டு பிரசவங்களுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது. சில பாலிசிகளில் குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தடுப்பூசி கட்டணங் களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான சிகிச்சை செலவுகளுக்கு 90 நாள்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இவை பாலிசியின் தன்மை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும் என்ப தால், இந்த பாலிசி எடுக்கும்முன் எல்லா விஷயங் களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்!

பிரசவ செலவுக்கான மருத்துவக் காப்பீடு... எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்?

எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடையாது?

மகப்பேறு காப்பீட்டு பாலிசி களில் பின்வரும் செலவுகளுக்கு இழப்பீடு கிடைக்காது.

 இடம் மாறிய கர்ப்பம் (Ectopic Pregnancy).

 ஆய்வுக்கூட சோதனை முறையில் கருத்தரித்தல் (In vitro fertilization - IVF) சிகிச்சை.

 ஸ்டெம் செல் அறுவடை.

 பிரசவத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை.

 வழக்கமான சோதனை.

 வாடகைத் தாய்.

 மருத்துவமனை பணப் பலன் (Hospital cash benefit).

மகப்பேறு செலவுகளுக்கு கவரேஜ் அளிக்கும் நிறுவனங்கள்

மகப்பேறு செலவுகளுக்கான கவரேஜுடன்கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூ ரன்ஸ், கேர் ஹெல்த், டிஜிட் ஹெல்த், பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ், எடெல்வைஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மேக்ஸ் புபா ஹெல்த் இன்ஷூரன்ஸ், ராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ், கோட்டக் மஹிந்திரா ஹெல்த் இன்ஷூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ், நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ், சோழ மண்டலம் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்ஷூரன்ஸ், எஸ்.பி.ஐ ஹெல்த் இன்ஷூரன்ஸ், பார்தி ஆக்‌ஷா ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், டாடா ஏ.ஐ.ஜி ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனரல் ஹெல்த் இன்ஷூரன்ஸ், யுனிவர்சல் சோம்போ ஹெல்த்கேர் இன்ஷூ ரன்ஸ் உள்ளிட்ட மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மகப்பேறு கவரேஜ் எவ்வளவு?

மகப்பேறு தொடர்பான மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் புதிதாகப் பிறந்த குழந்தை செலவு களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பாலிசியில் ஒதுக்கப்படும். இது ரூ.20,000, ரூ.25,000, ரூ.50,000 என இருக்கும்.

பிரதான காப்பீட்டு பாலிசியில் கவரேஜ் தொகை மிக அதிகமாக ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என்பது போல் இருக்கும்பட்சத்தில், ரூ.75,000 - ரூ.1 லட்சம் என்பது போல் மகப்பேறு செலவுக்கான கவரேஜ் இருக்கும்.

சில பாலிசிகளில் மகப்பேறு செலவுகளுக்கான கவரேஜ் ரூ.35,000, புதிதாகப் பிறந்த குழந்தைக்கான கவரேஜ் ரூ.25,000 எனப் பிரிக்கப் பட்டிருக்கும். மேலும், சிசேரியன் பிரசவத்துக்கு ரூ.25,000 அல்லது ரூ.40,000 என்பது போல் கவரேஜ் இருக்கிறது.

காத்திருப்புக் காலம் எவ்வளவு?

பாலிசியின் வகை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து மகப்பேறு சலுகை களைப் பெற காத்திருப்புக் காலம் 9 மாதங்கள் தொடங்கி 6 ஆண்டுகள் வரையில் உள்ளன.

குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசிகளில் பொது வாக, 4 - 5 வருட காத்திருப்புக் காலத்துக்குப் பிறகு, மகப்பேறு செலவுகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும்.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும்?

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவச் செலவு சுமார் ரூ.50,000-ஆக உள்ளது. இதுவே அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறக்கிறது எனில், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் செலவாகும். இந்தச் செலவு கிராமப்புறங்களில் 60% - 75% அளவுக்கு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. எனவே, ரூ.50,000 முதல் ரூ.70,000 வரைக்கும் கவரேஜ் உள்ளதுபோல் மகப்பேறு பலன் உள்ள பாலிசியை எடுப்பது நல்லது.

பிரசவ செலவுக்கான மருத்துவக் காப்பீடு... எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்?

பொதுவாக, பிரதான மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள், மகப்பேறு கவரேஜ் நடைமுறைக்கு வருவதற்கு 9 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருக்கும் காலத்தைக் கொண்டுள்ளன. எனவே, பாலிசியை முன்கூட்டியே எடுத்திருப்பது அவசியமாகும்.

மேலும், நீங்கள் எடுக்கும் மருத்துவக் காப்பீட்டில் மகப்பேறு கவரேஜ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, பிரீமியம் செலுத்துவதற்கு முன் பாலிசியின் கவரேஜ் மற்றும் விதிமுறைகள், நிபந்தனைகளைத் தெளிவாகப் படிப்பது அவசியமாகும்.

திருமணமாகும் தம்பதிகளுக்கு மகப்பேறுக்கான செலவு என்பது தவிர்க்க முடியாதது. இதற்கெனவே சில லட்சம் ரூபாய்களைச் சேர்த்து வைப்பதைவிட, இதற்கென இருக்கும் காப்பீட்டு பாலிசியை எடுத்துவிட்டால், செலவு குறித்த கவலை இல்லாமல், தாயின் நலனையும் குழந்தையும் வருகையும் நினைத்து, மகிழ்ச்சியாக இருக்கலாம்!

கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கவரேஜ்..!

பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ செலவுகளுக்கான காப்பீட்டை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. ‘ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்கிற அந்த பாலிசியில் கர்ப்பப்பையில் கரு அறுவை சிகிச்சைகள், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், பிறவிக் குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவு மற்றும் தடுப்பூசி செலவுகள் ஆகியவை அடங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism