Published:Updated:

வரப்போகிறது மழைக்காலம்... வாகனத்தைப் பாதுகாக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ்!

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்

வரப்போகிறது மழைக்காலம்... வாகனத்தைப் பாதுகாக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ்!

மோட்டார் இன்ஷூரன்ஸ்

Published:Updated:
மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

பங்கஜ் வர்மா, ஹெட் - அண்டர்ரைட்டிங், எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

மழைக்காலம் தொடங்குவதால், வெள்ளம், தண்ணீரால் தொற்றுநோய் பரவுதல், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைதல் போன்ற ஆபத்துகளை அடிக்கடி சந்திக்கிறோம். உடல்நலம், வீடு, வாகனங்களை மழை சேதங்களிலிருந்து பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்தாலும், மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காப்பீடு எடுப்பது நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருக்க உதவும்.

பங்கஜ் வர்மா, 
ஹெட் - அண்டர்ரைட்டிங்,  
எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்
பங்கஜ் வர்மா, ஹெட் - அண்டர்ரைட்டிங், எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் பல விதமான சேதங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

மழைக்காலம் தொடங்கும்முன் வாகனங் களுக்கு காப்பீடு செய்திருக்கிறோமா என்பதை சரிபார்ப்பது அவசியமாகும். ஒருவரின் பைக், கார் போன்ற வாகனங்கள் ஒரு விரிவான காப்பீட்டுடன் (Comprehensive Insurance) கவர் செய்யப்பட்டிருந்தால், அது சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு (Own Damage and Third-party Liability) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதனால் வாகன விபத்து ஏற்படும்போது நிதி அழுத்தத்தைத் தவிர்க்க முடியும்.

காப்பீட்டு கவரேஜ் மற்றும் கூடுதல் கவரேஜ் (Add-ons) எடுத்திருப்பது பழுதுபார்ப்புச் செலவுகள் மற்றும் காருக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றுக்கு இழப்பீட்டை வழங்கும்.

வரப்போகிறது மழைக்காலம்... வாகனத்தைப் பாதுகாக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ்!

நிலையான மோட்டார் இன்ஷூரன்ஸ் (Standard Motor Insurance) பாலிசியானது, இக்கட்டான சூழ்நிலைகளின்போது ஏற்படும் பெரிய இழப்புகளை ஈடுசெய்யும். அதே நேரத்தில், அனைத்து முன்னணி காப்பீட்டு நிறுவனங்களிலும் எளிதாகக் கிடைக்கும். தேவையான கூடுதல் கவரேஜ் அம்சங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வாகனத் துக்கு ஏற்படும் செலவுகளை மேலும் குறைக்கலாம்.

ஒரு நிலையான நான்கு சக்கர வாகன பாலிசியில் பொதுவாக, குறிப்பிடப்படாத இழப்புகளுக்குப் பணம் பெற, சரியான மற்றும் போதுமான தொகைக்குத் துணை கவரேஜ்களை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் கவரேஜ்கள், சற்றுக் குறைந்த பிரீமியத்தில் மோட்டார் பாலிசியுடன் இணைக்கப்பட்டு வருகிறது. அது வாகன உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. ஒருவர் காருக்குத் தேர்வு செய்யக்கூடிய சில துணை கவரேஜ்களைப் பார்ப்போம்.

1. ஜீரோ தேய்மான கவரேஜ் / பம்பர் முதல் பம்பர் வரை கவரேஜ்...

வாகனக் காப்பீடு எடுத்தவர், உரிமைகோரலின்போது வாகனத்தின் தேய்மான மதிப்பை செலுத்த வேண்டியதில்லை. தற்செயலான சேதம் ஏற்பட்டால், வாகனத்துக்குப் பகுதியளவு இழப்பு ஏற்பட்டால், தேய்மானத் தொகையைப் பெறலாம். மொத்த இழப்பு ஏற்படும் சூழ்நிலையில் இந்தத் தேய்மான கவரேஜ் பொருந்தாது.

2. நோ க்ளெய்ம் போனஸின் பாதுகாப்பு...

இந்த துணை கவரேஜ் எடுத்திருக்கும்பட்சத்தில் பாலிசி காலத்தில் ஒரே ஒரு முறை துரதிர்ஷ்டவசமாக க்ளெய்ம் ஏற்பட்டால், நோ க்ளெய்ம் போனஸ் (No Claim Bonus – NCB) சலுகையை பாலிசிதாரர் இழக்க மாட்டார். அதாவது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு க்ளெய்முக்குப் பிறகு, பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நோ க்ளெய்ம் போனஸை நீங்கள் இழக்காமல் பாதுகாக்கப்படும்.

3. அடிப்படை சாலையோர உதவி...

இயந்திரம் / மெக்கானிக்கல் கோளாறு அல்லது டயர் வெடிப்பு ஆகிய காரணங்களால் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால், இந்தக் கூடுதல் கவரேஜ் வாகன உரிமையாளருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

4. இன்ஜின் பாதுகாப்பு...

இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்திருந்தால், கியர்பாக்ஸ் மற்றும் இன்ஜினின் உள்பகுதிகளுக்கு ஏற்படும் சேதம், வெள்ளத்தின்போது நீர் உட்புகுதல் / மசகு எண்ணெய்க்கசிவு ஆகியவற்றால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு கிடைக்கும்.

5. சிரமத்துக்கான படி...

காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தைப் பழுது பார்க்க மூன்று நாள்களுக்குமேல் ஆகும் என்றால், அதிகபட்சமாக 10 நாள்களுக்குத் தினசரி செலவுக்கு தொகை வழங்கப்படும்.உங்களின் வாகனம் இல்லாத நிலையில் உங்கள் பணியிடத்துக்கு தினசரி சென்றுவர இந்தத் தொகை உதவியாக இருக்கும்.

6. சிறிய நுகர்பொருள்கள் செலவுகளுக்கான கவரேஜ்...

நட்ஸ் & போல்ட், லூப்ரிகன்ட் கிளிப்புகள், ஏசி கேஸ், கியர்-பாக்ஸ் ஆயில் / இன்ஜின் லூப்ரிகேட்டர்/ பிரேக் ஆயில் போன்ற சிறிய நுகர்வுப் பொருள்களுக்கான சேத செலவுகளை இந்தக் கூடுதல் கவரேஜ் ஈடுசெய்கிறது.

7. இன்வாய்ஸ் மதிப்புக்கு கவரேஜ்...

பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் முதல் உரிமையாளருக்கு வாகனத்துக்கு மொத்த இழப்பு ஏற்பட்டால், காப்பீடு செய்த அறிவிக்கப்பட்ட மதிப்புக்கும் (Insured Declared Value) வாகனத்தின் விலைப் பட்டியல் மதிப்புக்கும் (Invoice Value) இடைவெளி இல்லாமல் இழப்பீடு கிடைக்கும். வாகனம் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு அதிக சேதம் அடைந்தால் அல்லது திருடப் பட்டால் இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்தக் கவரேஜ்கள் தவிர, எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து உங்கள் சேமிப்பைப் பாதுகாக்க மற்ற துணை கவரேஜ்களைத் தேர்வு செய்யலாம். இ.எம்.சி புராடக்டர், முக்கிய பாகங்களை மாற்று வதற்கான கவர்கள், கூடுதல் சாலையோர பாதுகாப்பு உதவி, தனிப்பட்ட உடைமைகளின் இழப்பு, மேம்படுத்தப்பட்ட தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு மற்றும் மருத்துவமனை பண பாதுகாப்பு ஆகியவை இதர கூடுதல் கவரேஜ்களில் அடங்கும்.

டிஜிட்டல்மயமாக்கலுடன், இன்றைய வாடிக்கையாளர் களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாறு மோட்டார் காப்பீட்டுத் துறையானது ஒரு புதிய மாற்றத் துக்கு உட்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஆட்-ஆன்களின் பட்டியலில், பெரும்பாலான கவர்கள் எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் போன்ற பொதுக் காப்பீட்டாளர்களிடம் எளி தாகக் கிடைக்கும். மேலும், இந்த நிறுவனத்தின் ஆப் மற்றும் இணையதளம் மூலமாகவும் இந்தக் கூடுதல் கவர்களை வாங்கலாம்.

மழைக்காலம் நெருங்குகிறது. உங்கள் வாகனங்களுக்கான பாலிசிகளை உடனே வாங்குங்கள்!