பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்

சுபாசிஷ் மசூம்தர், தேசியத் தலைவர் - பஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்ஷூரன்ஸ் (மோட்டார் பிசினஸ்)

இந்தியாவில் மட்டு மல்ல, உலகம் முழுக்கவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பசுமையைப் பாது காக்கும் வாகனங்களின் விற்பனை வேகம் பெறத் தொடங்கியிருக்கிறது. அதே சமயம், எலெக்ட்ரிக் வாகனங் களில் சவால்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு வளரும் தொழில் துறையைப் போலவோ, எலெக்ட்ரிக் வாகன தொழில் துறையிலும் அதற்கென சவால்கள் உள்ளன. அவ்வாறு உள்ள சவால்கள் என்னென்ன?

சுபாசிஷ் மசூம்தர் 
தேசியத் தலைவர் - பஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்ஷூரன்ஸ் 
(மோட்டார் பிசினஸ்)
சுபாசிஷ் மசூம்தர் தேசியத் தலைவர் - பஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்ஷூரன்ஸ் (மோட்டார் பிசினஸ்)

1. ஒருமுறை சார்ஜ் செய் தால் எத்தனை கிலோமீட்டர் வரை ஓட்ட முடியும்?

2. எலெக்ட்ரிக் வாகனங்கள் வெற்றியடைய வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பு அவசியம். இதற்கான வேலை கள் இன்னமும் செயல் பாட்டில்தான் உள்ளது. வழியில் வாகனத்தின் சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

3. எலெக்ட்ரிக் வாகனங் களின் பேட்டரி விலை வாகனத்தின் விலையில் பாதியளவு உள்ளது. எனவே, பேட்டரியின் ஆயுள், வாரன்டி மற்றும் மறு விற்பனை மதிப்பு ஆகியவை பற்றி கவலைகள் இருக்கும்.

4. அதீத சார்ஜ் காரணமாக வாகனம் தீப்பிடித்தால் என்ன செய்வது, ஒருவேளை அவ்வாறு தீ விபத்து நடந்து மூன்றாம் நபருக்கு சொத்து இழப்போ, உயிரிழப்போ நடந்தால் என்ன செய்வது?

5. வால் மவுண்ட் சார்ஜர், கார்டில் ஃபிக்ஸ் செய்யப்படா விட்டாலும் அதற்கு கவரேஜ் உண்டா?

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான
மோட்டார் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த சவால்களை எல்லாம் எப்படி மோட்டார் இன்ஷூ ரன்ஸ் மூலம் சமாளிக்கலாம்?

வழக்கமான மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி பல பத்தாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. அப்போது எலெக்ட்ரிக் வாகனம், ஹைப்ரிட் வாகனம் என்ற கான்செப்ட்கூட இல்லை. இருப்பினும், இன்ஷூரன்ஸ் துறையைக் கண்காணிக்கும் அமைப்பு, மாறிவரும் சந்தையையும் அது சார்ந்து உருவாகும் புதிய தேவைகளையும் புரிந்து கொள்ளத் தவறுவதில்லை. எனவேதான், சமகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான இன்ஷூரன்ஸ் புராடக்டு களை விதிமுறைகளுக்கு உட்பட்டு அறிமுகப்படுத்தும் சுதந்திரத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு கண் காணிப்பு அமைப்பு வழங்கு கிறது. இதன் அடிப்படையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மேலும் குறிப்பிட்டுள்ள சவால்களுக்கான தீர்வுகளைத் தரும் வகையிலான இன்ஷூரன்ஸ் வசதிகளை வடிவமைத்துள்ளன.

எலெட்க்ரிக் வாகனப் பயனாளர்கள் மோட்டார் இன்ஷூரன்ஸ் புராடக்டை வாங்கும்போது என்ன வெல்லாம் கவனிக்க வேண்டும்?

நீங்கள் வாங்கப்போகும் இன்ஷூரன்ஸ் பாலிசியில் என்னவெல்லாம் கவர் ஆக வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1. பேட்டரிக்குத் தனியாக கவரேஜ் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, சார்ஜ் செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டோ, வெள்ளம் போன்ற சம்பவங்களின்போதோ பேட்டரி இழப்பு ஏற்பட்டால் அதற்கு கவரேஜ் இருக்க வேண்டும்.

2. எலெக்ட்ரிக் வாகனத்தால் மூன்றாம் தரப் பினருக்கு சொத்து சேதம் அல்லது காயம் போன்றவை ஏற்பட்டாலோ, அதற்காக வாகன உரிமையாளரின் மீது வழக்கு தாக்கல் செய்தாலோ, அதற்கான கவரேஜ் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

3. பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி அல்லது ஃபைபர் போன்ற அனைத்துப் பாகங்களுக்கும் பூஜ்ய தேய்மானத்துக்கான கவரேஜ் இருக்க வேண்டும்.

4. வால் மவுண்ட் சார்ஜர் மற்றும் சார்ஜிங் கேபிள் ஆகியவற்றுக்குத் தனி கவர் தேவை. இவை நேரடியாக வாகனத்துடன் பொருத்தப்படவில்லை என்றாலும், மோட்டார் பாலிசியின்கீழ் பிரத்யேகக் குறிப்புடன் அவற்றுக்கு கவரேஜ் தர வேண்டும்.

5. இன்ஃபோடெயின்மென்ட் கேட்ஜெட்டுகள், மியூசிக் சிஸ்டம்கள் மற்றும் வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கும் கவரேஜ் தருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி, அதோடு சுற்றுச் சூழலுக்கு உகந்த, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன் பாடுகளை ஊக்குவிக்கும் அரசுகளின் முயற்சி போன்றவற்றால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுஜனங்களின் மத்தியில் பெரிய அளவில் சாத்தியமாவது வெகுதொலைவில் இல்லை.

எனவே, எலெக்ட்ரிக் வாகனப் பயனாளர்கள் அதற்கேற்ப கவரேஜ் உள்ள மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுத்து பயனடைவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.