Published:Updated:

மோட்டார் இன்ஷூரன்ஸ்... நோ-க்ளெய்ம் போனஸ் பற்றி தெரியுமா?

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்... நோ-க்ளெய்ம் போனஸ் பற்றி தெரியுமா?

மோட்டார் இன்ஷூரன்ஸ்

Published:Updated:
மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

வாகனம் வைத்திருக்கும் அனைவரும் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் நோ-க்ளெய்ம் போனஸ் (No-Claim Bonus - NCB) என்கிற சலுகையை அளிக்கின்றன.

எஸ்.கார்த்திகேயன் 
நிதி ஆலோசகர், 
Winworthwealth.com
எஸ்.கார்த்திகேயன் நிதி ஆலோசகர், Winworthwealth.com

அது என்னென்ன என்.சி.பி?

மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் வாகன உரிமையாளர் பாலிசி காலத்தில் இழப்பீடு எதுவும் பெறவில்லை என்றால், காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பிரீமியத் தள்ளுபடிதான் என்.சி.பி ஆகும். இந்தச் சலுகை சட்டப்படியான மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்கு (Third Policy Insurance) கிடையாது. ஓன் டேமேஜ் (Own Damage) பாலிசிக்குத்தான் கிடைக்கும்.

நோ-க்ளெய்ம் போனஸ் என்பது வாகனத்தை விவேகமாகவும் பாதுகாப்பாகவும் பயன் படுத்தியதுக்கு வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும் வெகுமதி என்றுகூட சொல்ல லாம். உதாரணமாக, ஒருவர், 8 ஆண்டு பழைய கார் ஒன்றை விற்கிறார். இந்தக் காருக்கு எடுக்கப்பட்ட மோட்டார் பாலிசி மூலம் ஒருமுறை கூட இழப்பீடு பெறவில்லை. இந்த நிலையில் வேறு புது காரை வாங்கினால், ஏற்கெனவே சேர்ந்திருக்கும் நோ-க்ளெய்ம் போனஸை புது காருக்கு எடுக்கும் மோட்டார் பாலிசிக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால், பாலிசி பிரீமியம் கணிசமாக குறையும்.

இந்த நோ-க்ளெய்ம் போனஸை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். முந்தைய காப்பீட்டு நிறுவனம் அல்லது அதே நிறுவனத் தில் வேறு பாலிசி எடுக்கும்பட்சத்தில் ஏற்கெனவே காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கும் என்.சி.பி சான்றிதழைப் பயன்படுத்தும்பட்சத்தில் பிரீமியம் குறையும்.

மோட்டார் இன்ஷூரன்ஸ்... 
நோ-க்ளெய்ம் போனஸ் பற்றி தெரியுமா?

பிரீமியத் தள்ளுபடி

பொதுவாக, இந்த பிரீமிய தள்ளுபடி இரண்டாம் ஆண்டிலிருந்து தொடங்கும். அந்த ஆண்டில் 20%, மூன்றாம் ஆண்டில் 25%, நான்காம் ஆண்டில் 35%, ஐந்தாம் ஆண்டில் 45% மற்றும் ஆறாவது ஆண்டில் 50% என அதிகரித்து வரும். குறைந்தபட்சம் 20%, அதிகபட்சம் 50%தான் பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.

நோ-க்ளெய்ம் போனஸ் எந்த அளவுக்கு வாகன உரிமையாளருக்கு பிரீமியத்தைச் சேமித்துக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக, சங்கர் என்பவர் ஓன் டேமேஜ் பாலிசிக்கு ஆண்டு பிரீமிய மாக அவரது காருக்கு ரூ.16,000 கட்டி வந்தார். அவர் தொடர்ந்து 5 ஆண்டு களாக எந்த இழப்பீடும் பெறவில்லை. அவருக்கு ஆறாவது ஆண்டில் நோ- க்ளெய்ம் போனஸ் 50% கிடைக்கிறது. அதாவது, அவர் ஆறாவது ஆண்டில் ரூ.8,000 பிரீமியம் கட்டினால் போதும். ரூ.8,000 மிச்சமாகும்.

நோ-க்ளெய்ம் போனஸ் வாகனத்துக்கா, உரிமையாளருக்கா?

பலரும் இந்த நோ-க்ளெய்ம் போனஸ் என்பது இரு சக்கர வாகனம் அல்லது காருக்கு வழங்கப்படுகிறது எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். இந்தச் சலுகை வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படுகிறது; வாகனத்துக்கு அல்ல.

அந்த வகையில் ஒருவர் தனது பழைய காரை விற்றுவிட்டு, புதிய கார் வாங்கும்போது அதற்கு எடுக்கும் மோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசிக் கான பிரீமியத்தில் நோ-க்ளெய்ம் போனஸைப் பயன்படுத்தி பிரீமியச் செலவை வெகுவாகவும் சுலபமாகவும் குறைக்க முடியும்.

அதாவது, ஒருவர் அவரின் காரை விற்றாலும், அவரின் நோ-க்ளெய்ம் போனஸை அவருடன் இருக்கும் மற்றும் அவர் வாங்கும் அடுத்த காருக்கு அதைப் பயன்படுத்தி பிரீமியச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

ஒருவர் வாகனக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார். முதல் ஆண்டில் க்ளெய்ம் பெற்றிருக்கிறார் என்றால், அடுத்த ஆண்டில் நோ-க்ளெய்ம் போனஸ் எதுவும் கிடைக்காது. அதற்கும் அடுத்து ஆண்டில் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை என்றால், நான்காம் ஆண்டில் பிரீமியத்தில் 20% தள்ளுப்படி கிடைக்கும். ஐந்தாம் ஆண்டில் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை என்றால் பிரீமியத் தள்ளுபடி விகிதம் 25% ஆக அதிகரிக்கும். ஆறாம் ஆண்டில் க்ளெய்ம் செய்யப்பட்டால், ஏழாம் ஆண்டில் நோ-க்ளெய்ம் போனஸ் கிடைக்காது.

அடுத்து வரும் ஆண்டில் க்ளெய்ம் செய்யப்படவில்லை என்றால் அதற்கும் அடுத்த ஆண்டில் 20% பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒருவர் க்ளெய்ம் செய்யவில்லை என்றால் ஆறாவது ஆண்டில் பிரீமியத்தில் 50% தள்ளுபடி கிடைக்கும். இவர் ஆறாவது ஆண்டில் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை என்றால், ஏழாவது ஆண்டிலும் 50 சதவிகித தள்ளுபடி கிடைக்கும்.

விபத்து க்ளெய்ம் ஏதும் பெறாமல் இருக்கும் நிலையில் பழைய காரை நீங்கள் விற்றுவிட்டு, வேறு புதிய கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப்போகும் காருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்திடம் என்.சி.பி சான்றிதழ் (NCB certificate) வேண்டும் எனக் கேளுங்கள். இதை எழுத்துபூர்வமாகக் கேட்க வேண்டும். காப்பீடு நிறுவனத்தின் அந்தச் சான்றிதழைப் பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பாலிசிக்கான பிரீமியத் தில் நோ-க்ளெய்ம் போனஸ் தள்ளுபடியைப் பெறுங்கள்.

இந்தச் சான்றிதழை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருந்து கூட பயன்படுத்த முடியும். ஆனால், என்.சி.பி காலாவதி தேதியிலிருந்து 90 நாள்களுக்குள் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இந்த விவரம் தெரியாமல் புதிய காருக்கு புதிய பாலிசியை எடுத்தால் இழப்பு உங்களுக்குத் தான். ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்கும்போதும், இந்த நோ-க்ளெய்ம் போனஸ் சலுகையைப் பெற முடியும்.

மேலும், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறிய க்ளெய்ம்களைத் தவிர்ப்பதன் மூலம் அடுத்துவரும் ஆண்டு களில் அதிக பிரீமியத் தள்ளுபடியைப் பெற முடியும். இது பெரிய லாபமாக இருக்கும்.

நிறைவாக, நோ-க்ளெய்ம் போனஸை அறிவு சார்ந்த, திறமை சார்ந்த சொத்து என்று சொல்லலாம். வாகனம் ஓட்டும் ஒருவரின் திறமையும் கவனமும் எந்த அளவுக்கு இருக்கிறதோ அது பணமாக மாறுகிறது; அவருக்கு அது ஒரு வெகுமதி யாகவும் ஊக்கமாகவும் விளங்குகிறது.

வேறு ஒருவருக்கு மாற்ற முடியுமா?

பொதுவாக, நோ-க்ளெய்ம் போனஸ் சலுகையை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்ற முடியாது. அதேநேரத்தில் கார் வைத்திருக்கும் நபர் இறந்து விடும் நிலையில், அவரின் சட்டப்படியான வாரிசுக்கு கார் மாற்றப்படும்போது, அவருக்கு நோ-க்ளெய்ம் போனஸ் சலுகை கிடைக்கும். பாலிசியை புதுப்பிக்கும்போது அதே நிறுவனத்தில் பாலிசி எடுத்தாலோ, வேறு நிறுவனத்தில் பாலிசி எடுத்தாலோ நோ-க்ளெய்ம் போனஸைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism