Published:Updated:

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி... ஏன் அவசியம் எடுக்க வேண்டும்?

தனிநபர் விபத்துக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
தனிநபர் விபத்துக் காப்பீடு

காப்பீடு

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி... ஏன் அவசியம் எடுக்க வேண்டும்?

காப்பீடு

Published:Updated:
தனிநபர் விபத்துக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
தனிநபர் விபத்துக் காப்பீடு

இன்றைய வாழ்க்கை என்பது நிலையற்றதாக இருக்கிறது. சாலையில் செல்வது, வேலைக்காகப் பயணம் மேற்கொள்வது, அவ்வளவு ஏன், வீட்டுக்குள் இருப்பதுகூட ஆபத்தாக இருக்கிறது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி

எதிர்பாராத விபத்து என்பது ஒருவருக்கு மற்றும் அவரின் குடும்பத்துக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்திவிடுகிறது. இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதற்குத் தனிநபர் விபத்துக் காப்பீடு எடுப்பது மிக அவசியமாகும்.

நம்மில் பெரும்பாலானோர் பலவகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்்கிறார்கள். உதாரணமாக, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் அசம்பாவிதத்துக்கு உள்ளானால் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். ஏதாவது, ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செலவு செய்யும் நிலையில் இழப்பீடு தரும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்திருக்கிறார்கள்.

ஆனால், ஒருவர் தற்காலிகமாகவோ, நிரந்தர மாகவோ வேலை செய்யும் சூழ்நிலை இல்லை எனில், அதன் மூலம் ஏற்படும் வருமான இழப்பை மேற்கண்ட இரு பாலிசிகளும் ஈடு கட்ட உதவாது. அந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் பாலிசிதான் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி (Personal accident insurance policy) ஆகும்.

என்னென்ன பலன்கள்?

இந்த பாலிசி எடுத்தவருக்கு விபத்து மூலம் மரணம் ஏற்படுவது, உடல் உறுப்புகள் முழுமை யாக அல்லது பகுதி அளவில் நிரந்தரமாகச் செயல்படாமல் போவது அல்லது தற்காலிமாக முழுமையாகச் செயல்படாமல் போவது போன்ற பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும்.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். முருகன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அதிகாரி. அவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு வீட்டுக் கடன் இருக்கிறது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இவர் ஒருவர்தான். அவர் தனக்கு டேர்ம் பிளான் மற்றும் குடும்பத்துக்கு ஹெல்த் பாலிசி எடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்கிறார். படுகாயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். அவருக்கு பெரிய அறுவைசிகிச்சை ஒன்று நடக்கிறது. இதற்கான செலவு சில லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. அந்தத் தொகை அவரின் ஹெல்த் பாலிசி மூலம் ஈடு கட்டப்படுகிறது.

எனினும், அவரால் உடனடியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால், அடுத்து வரும் மாதங்களில் குடும்பச் செலவுகள், கடன் மாதத் தவணை, தபால் அலுவலக ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு போன்றவை தொடர்ந்து கட்ட முடியவில்லை.

அவருடைய மருத்துவச் செலவுகள் ஹெல்த் பாலிசிகள் மூலம் ஈடுகட்டப்பட்டாலும் விபத்து மூலம் ஏற்பட்ட பாதிப்பால் அவருக்கு ஏற்பட்ட நிதி இழப்பை சரிக்கட்ட முடிய வில்லை. இங்கேயேதான் தனிநபர் விபத்துக் காப்பீடு முருகனுக்கு உதவி செய்வதாக இருக்கிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்த முருகன், ரூ.10 லட்சத்துக்குத் தனிநபர் விபத்துக் காப்பீடு எடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான ஆண்டு பிரீமியம் சுமார் 1,500 – 2,000 ரூபாயாக இருந்திருக்கும். அவருக்கு காப்பீட்டு நிறுவனம் வாரத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 1% தொகை இழப்பீடாக அதாவது, வாரத்துக்கு ரூ.10,000 வழங்கும். இதன்படி பார்த்தால், மாதத்துக்கு அவருக்கு ரூ.40,000 இழப்பீடு கிடைக்கும். இந்தத் தொகையைக் கொண்டு அவரவரின் குடும்பச் செலவுகள் மற்றும் கடன் தவணைகளை அடைக்க முடியும்; ஆர்.டி மற்றும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்தும் செய்ய முடியும்.

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி... ஏன் அவசியம் எடுக்க வேண்டும்?

யார் கட்டாயம் எடுக்க வேண்டும்?

அலுவலகத்துக்குப் பொது வாகனங்களைத் தவிர்த்து, சொந்த கார், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் இந்தத் தனிநபர் விபத்து பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாலிசியில் விபத்து காரணமான இறப்பு (Death), நிரந்தர முழுமையான ஊனம் (Permanent Total Disablement), நிரந்தர பகுதி ஊனம் (Permanent Partial Disablement), தற்காலிக முழுமையான ஊனம் (Temporary Total Disablement) ஆகியவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.

விபத்து மூலமான இறப்புக்கு மட்டுமே இழப்பீடு வழங்கும் பாலிசிகளும் இருக்கின்றன. எனவே, இந்த அனைத்து அம்சங்களுக்கும் இழப்பீடு வழங்கும் விதமாக இந்தத் தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

விபத்து மூலமான இறப்பு

தனிநபர் விபத்து பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் பாலிசி தாரருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

நிரந்தர முழுமையான ஊனம்

விபத்தின் காரணமாக நிரந்தரமாக முழுமையாகச் செயல்பட முடியாமல்போனால், இழப்பீடாக முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். சில காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையின் 110% முதல் 125% தொகையை இழப்பீடாக வழங்கும்.

மேலும், இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்களும் ஊனம் அல்லது ஒரு கை ஒரு கால் ஊனம், மூட்டு (கை அல்லது கால்) மற்றும் ஒரு கண் பார்வை பாதிப்பு, இரு கண் பார்வையும் இல்லாமல்போவது, முழுமையாகப் பேச மற்றும் கேட்க முடியாமல்போவது போன்றவற்றுக்கும் இந்த பாலிசியில் இழப்பீடு கிடைக்கும்.

பகுதி ஊனம் நிரந்தரமாக ஏற்படுதல்...

உடலில் ஏதாவது பகுதி நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் இந்த பாலிசி மூலம் இழப்பீடு கிடைக்கும். எந்தெந்தப் பாதிப்புக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பதை ஒவ்வொரு காப்பீட்டு நிறுவன மும் பாலிசி ஆவணத்தில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கும். பாலிசி எடுத்திருப்பவரின் வயது மற்றும் பாலிசி கவரேஜுக்கு ஏற்ப இந்த இழப்பீடு இருக்கும்.

ஆள்காட்டி விரல் இழப்பு, ஏதாவது ஒரு கை இழப்பு, ஒரு பக்க காதின் கேட்கும் தன்மை இழப்பு, ஒரு கண் பார்வை பாதிப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.

தற்காலிகமாக முழுமையான ஊனம் ஏற்படுதல்

விபத்தில் படுகாயம் அடைந் திருக்கும் நிலையில், மாதக் கணக்கில் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டிவரும். இந்த நிலையில், காப்பீட்டுத் தொகையில் 1% வாரத்துக்கு வழங்கப்படும்.

இவ்விதம் காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து அதிகபட்சம் 100 வாரங்களுக்கு வழங்கப்படும். இந்தத் தொகை பாதிக்கப்பட்டிருக்கும் பாலிசி தாரரின் சம்பளம் அல்லது வருமானத்தைச் சார்ந்திருக்கும் என்பது முக்கியமான விஷய மாகும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

1. இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. இந்தப் பாலிசியை வேலை செய்யும் யாரும் எளிதில் எடுத்துக்கொள்ளலாம்.

2. உலகம் முழுக்க இந்த பாலிசி செல்லுபடி ஆகும் என்பது முக்கியமான விஷயம்.

3. ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரைக்கும் தேவைக்கேற்ப இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

4. ஒருவரின் வேலை எந்த அளவுக்கு ரிஸ்க்கானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும், பாலிசிதாரரின் வயதைப் பொறுத்தும் பிரீமியம் மாறுபடும். அலுவலகப் பணியில் இருப்பவர் களைவிட களப்பணியில் இருக்கும் பணியாளர்களுக்குக் கூடுதல் பிரீமியம் நிர்ணயம் செய்யப்படும்.

5. தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இந்த பாலிசி மூலம் இழப்பீடு கிடைக்கும்.

6. இந்த பாலிசியை எடுத்த பிறகு பிடிக்கவில்லை எனில், 15 நாள்களுக்குள் திரும்ப அளிக்கும் வசதியும் இருக்கிறது.

7. இழப்பீடு எதுவும் செய்யவில்லை எனில், பிரீமியத்தில் 5% ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து இழப்பீடு செய்யவில்லை எனில், அதிகபட்சம் 50% வரை பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.

இந்த பாலிசியை இதுவரை எடுக்காதவர்கள் உடனே எடுக்கலாமே!

எவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்காது?

தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியில் சுயமாக விபத்தை ஏற்படுத்திக்கொண்டு காயம் அடைதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், தற்கொலை ஆகியவற்றுக்கு இழப்பீடு தர மாட்டார்கள். மேலும், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் மது குடித்திருக்கும்போது விபத்தால் ஏற்படும் பாதிப்பு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும்போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் இழப்பீடு கிடைக்காது.

வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மலிவு பாலிசி..!

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது மத்திய அரசின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். 18 முதல் 70 வயது நிரம்பிய, வங்கிக் கணக்கு வைத்துள்ள, இந்தியாவில் வசிக்கும் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஓர் ஆண்டுக்கு ரூ.12 பிரீமியம் கட்ட வேண்டும். இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே ஆதார் எண் அடிப்படையில் இந்த பாலிசியை எடுக்க வேண்டும். இரண்டு, மூன்று வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இந்த பாலிசிக்கான பிரீமியம் கட்டினால், ஏதாவது ஒரு பாலிசி மூலம்தான் க்ளெய்ம் பெற முடியும்.

விபத்தால் உயிரிழப்பு அல்லது முழு உடற்பாகம் செயலிழப்பு ஏற்பட்டால், ரூ.2 லட்சமும் பகுதி உடல் பாகம் செயலிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது. முழு உடற்பாகம் செயலிழப்பு என்பது இரண்டு கண்களும் அல்லது கைகளும் அல்லது கால்களும் செயல்பட முடியாமல் போவதாகும்.

பகுதி நிரந்தர உடல்பாகச் செயலிழப்பு என்பது ஒரு கண், கை அல்லது கால் பயன்படுத்தப் பட முடியாமல் போதல் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்கொலை, குடிப்பழக்கத்தால் ஏற்படும் இறப்பு அல்லது போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism