Published:Updated:

ரயில் பயணக் காப்பீடு... அறிந்ததும், அறியாததும்!

பயணக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
பயணக் காப்பீடு

பயணக் காப்பீடு

ரயில் பயணக் காப்பீடு... அறிந்ததும், அறியாததும்!

பயணக் காப்பீடு

Published:Updated:
பயணக் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
பயணக் காப்பீடு

ரயில் பயணிகள் ரயில்வே கவுன்டர் களுக்குச் சென்று டிக்கெட் வாங்கு வதற்குப் பதிலாக, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கெட் வாங்கு பவர்களுக்கு இலவச இன்ஷூரன்ஸ் திட்டத்தை 2017 டிசம்பர் முதல் அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே துறை. இதனால் இணையதளத்தின் மூலம் டிக்கெட் வாங்கு பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த ரயில் பயணக் காப்பீட்டின்படி, எதிர்பாராதவிதமாக நடைபெறும் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ரயில் விபத்து மூலம் நிரந்தர உடல் ஊனம் ஏற்படுபவர்களுக்கு ரூ.10 லட்சமும், நிரந்தர பகுதி ஊனத்துக்கு ரூ.7.5 லட்சம் வரையும், காயமடைந்தவர்களுக் கான மருத்துவமனை செலவுகளுக்கு அதிக பட்சம் ரூ.2 லட்சம் வரையும் மற்றும் இறந்தவர் களின் உடலை எடுத்துச் செல்வதற்கான செலவுக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இதற்காகப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை வெறும் 0.49 பைசா மட்டுமே. இது மிகக் குறைந்த தொகை என்றாலும், ரயிலில் பயணம் செய்யும் பயணிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகம்.

பயணிகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்க ரயில்வே நிர்வாகம், லிபர்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இன்ஷூரன்ஸைப் பயணிகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என ரயில்வே துறை பயணிகளைக் கட்டாயப் படுத்துவதில்லை. தேவைப்பட்டால் எடுக்கலாம் என்கிற நிலையிலேயே வைத்திருக்கிறது.

ரயில் பயணக் காப்பீடு... அறிந்ததும், அறியாததும்!

பாலிசி செயல்படும் விதம்

ரயில் முதல் ஸ்டேஷனிலிருந்து கிளம்புவதில் ஆரம்பித்து, கடைசி ஸ்டேஷனுக்கு ரயில் போய்ச் சேரும் வரை, பயணியானவர் விபத்தையோ, இடர்ப்பாட்டையோ சந்தித்து அவருக்கு இழப்பு ஏற்பட்டால், டிராவல் பாலிசி மூலம் க்ளெய்ம் பெறலாம். பயணம் செய்கிறவர் ரயிலில் ஏறும்போதோ, இறங்கும் போதோ பிரச்னைகளைச் சந்தித்தாலும் க்ளெய்ம் பெறலாம்.

இன்ஷூரன்ஸ் ஆப்ஷனுடன் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்வதிவு செய்ததும், பாலிசி எண் உட்பட பாலிசியின் டாக்குமென்ட் பயணிகளின் மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த மெயிலில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து, நாமினியின் பெயர், அவர் வசிக்கும் முகவரி மற்றும் அவரின் உறவு குறித்த விவரங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஏதேனும் அசம்பா விதம் ஏற்படும்பட்சத்தில், அவரது நாமினியால் இழப்பீட்டுத் தொகைக்கு க்ளெய்ம் செய்ய முடியும். ரயில்வே சட்டம் 1989, பிரிவுகள் 124 மற்றும் 124 ஏ-ன்படி இந்த நிவாரணம் வழங்கப்படும்.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்...

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமானது ரயிலில் பயணம் செய்பவர்களையும், இன்ஷூரன்ஸ் கம்பெனியையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. க்ளெய்ம் கோருவதற்குப் பயணியோ நாமினியோ, பாலிசியை வழங்கிய இன்ஷூரன்ஸ் கம்பெனியைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி-யை அணுக வேண்டியதில்லை.

மிகக் குறைவான பிரீமியம் தொகையில் கிடைக்கும் இந்த பாலிசியை ஆன்லைனில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் மட்டுமே வாங்க முடியும். ரயில்வே ஸ்டேஷன் சென்று பயண டிக்கெட் வாங்கும்போது, இந்த பாலிசியை வாங்க முடியாது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் கவரேஜ் கிடையாது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்துப் பிரிவு - பாசஞ்சர் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்கள் தவிர, மற்ற அனைத்து ரயில்களில் முன்பதிவு (SL, 1AC, 2AC, 3AC) செல்லும் எல்லா பயணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

பாலிசி வாங்கிய பிறகு, அதை ரத்து செய்ய முடியாது. மேலும், பாலிசி பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் இந்தியர்களுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவரேஜ் கிடையாது. ரயில் டிராவல் இன்ஷூரன்ஸ் பற்றிய சந்தேகங்களுக்கும், அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் 18002665844 என்கிற எண்ணையோ, care@libertyinsurance.in என்கிற மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

ஆக, இனி ஒவ்வொரு முறை ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதும் மறக்காமல் 0.49 பைசா பிரீமியத்துடன்கூடிய இன்ஷூரன்ஸை எடுக்க மறக்காதீர்கள்!