Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி... அனைவரும் அவசியம் எடுக்க வேண்டியது ஏன்?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி... அனைவரும் அவசியம் எடுக்க வேண்டியது ஏன்?

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் எதிர்பாராத சூழ்நிலையில் இந்த உலகில் இல்லாமல் போகும்பட்சத்தில் குடும்பத்தைப் பாதுகாக்கும் கவசமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. முதிர்வுப் பலன் எதுவும் இல்லாத, முழுக்க முழுக்க காப்பீடு பலன் மட்டுமே வழங்கும் காப்பீட்டுத் திட்டம்தான் டேர்ம் பிளான். இந்தத் திட்டம் குறைவான பிரீமியத் தில் அதிக ஆயுள் கவரேஜ் அளிக்கிறது.

சிவகாசி மணிகண்டன்,   
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

கடன்களுக்கும் காப்பீடு...

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைக் குடும்பத் தின் தனிநபர் கடன், கார் கடன், சொத்து அடமானக் கடன், வீட்டுக் கடன் ஆகிய வற்றையும் கவர் செய்யும் அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் சுமார் ரூ.40,000. அவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம். அவர் தனது ஆண்டு சம்பளத்தைப்போல, 15 - 20 மடங்கு தொகைக்கு (சுமார் ரூ.1 கோடிக்கு) ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டும். 30 வயதுள்ள ஒருவர் அவரின் 60 வயது வரை அதாவது, 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடிக்கு டேர்ம் பிளான் எடுக்கிறார் எனில், ஆண்டு பிரீமியம் கிட்டத்தட்ட 15,000 ரூபாய்தான். அதாவது, மாதம் 1,250 ரூபாய்தான்.

டேர்ம் பிளானுக்கான பிரீமியத்தை மாதம், மூன்று மாதம் ஒரு முறை, ஆறு மாதம் ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என பாலிசி தாரரின் வசதிக்கு ஏற்ப கட்டி வரலாம். ஆரம்பத்தில் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்கிறோமோ, அதுதான் கடைசி வரைக்கும். பொதுவாக, மாதம் ஒரு முறை கட்டும் முறையைத் தேர்வு செய்வதை விட ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் முறையைத் தேர்வு செய்வது நல்லது. காரணம், மாதம்தோறும் ஞாபகமாக வைத்து பிரீமியம் கட்டுவது கடினம். அதற்காக மாதம்தோறும் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே பணத்தைப் போட்டு வைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை எனில், அதிகமாக பணப் பராமரிப்பு தேவை இருக்கிறது. ஒரே ஒரு முறை பிரீமியம் கட்டும் ஒற்றை பிரீமியம் முறையும் டேர்ம் பிளானில் இருக்கிறது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி...
அனைவரும் அவசியம் எடுக்க வேண்டியது ஏன்?

கைகொடுக்கும் துணை பாலிசிகள்..!

மேலும், டேர்ம் பிளானுடன் துணை பாலிசிகளை (Rider) எடுக்கும் வசதி இருக்கிறது. புற்றுநோய், இதய பாதிப்பு சிறுநீரக பாதிப்பு தீவிர நோய் பாதிப்பு (Critical Illness), விபத்து மரணம் (இரு மடங்கு இழப்பீடு), துணைவருக்கு (கணவர்/மனைவி) கவரேஜ், விபத்து பாதிப்பால் உறுப்புகள் செயல்படாமல் போதல், வருமான இழப்பை ஈடுசெய்தல், பிரீமியம் தள்ளுபடி போன்ற துணை பாலிசிகளை சற்றுக் கூடுதல் பிரீமியம் கட்டுவது மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த ரைடர்களை டேர்ம் பிளான் எடுக்கும்போதே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாகும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க குறைந்த பட்ச வயது 18-ஆக இருப்பது அவசியமாகும். அதிகபட்சம் 65 வயதில்கூட ஒருவர் டேர்ம் பிளான் எடுக்கலாம். அப்படி எடுத்தால், அந்த பாலிசியை 90 வயது வரைக்கும் தொடர முடியும்.

மேலும், பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசி, பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி எடுக்க வருமானச் சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், டேர்ம் பிளான் எடுப்பவர் நிச்சயம் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும். அந்த வகையில், வருமானத்தின் அடிப்படையில் வருமானச் சான்றிதழ் அடிப்படையில்தான் டேர்ம் பிளான் கவரேஜ் இருக்கும்.

கோவிட் 19 பரவலுக்குப் பிறகு, பெரும்பாலான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி எடுப்பவர் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கின்றன. டேர்ம் பிளானில் பாலிசி முதிர் வில் பணம் எதுவும் கிடைக்காது என ஏற்கெனவே பார்த்தோம். பாலிசி முடிவில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் கட்டிய பிரீமியத்தை திருப்பித் தரும் விதமாக (Return of Premium) பாலிசி இருக்கிறது. ஆனால், இந்த பாலிசிக்கான பிரீமியம் அதிகம். டேர்ம் பிளான் பிரீமியத் துடன் ஒப்பிடும்போது இந்த பாலிசியின் பிரீமியம் இரு மடங்காக உள்ளதால், அதைத் தவிர்ப்பது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி...
அனைவரும் அவசியம் எடுக்க வேண்டியது ஏன்?

பாலிசி காலம்...

டேர்ம் பிளானைப் பொறுத்த வரை, குறைந்தபட்ச பாலிசிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். அதிகபட்சம் எத்தனை ஆண்டு களுக்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். பொதுவாக, ரூ.50,000 மற்றும் அதன் மடங்குகளில் கவரேஜ் தொகை இருக்கும்.

விபத்து மூலமான இறப்புக்கு இந்த பாலிசியில் காத்திருப்புக் காலம் கிடையாது. இதர இறப்பு களுக்கு பாலிசி எடுத்து அதிக பட்சம் 90 நாள்களுக்குப் பிறகு தான் கவரேஜ் ஆரம்பிக்கும். இந்தக் காத்திருப்புக் காலத்தில் விபத்து மூலம் இறப்பு ஏற்பட் டால் முழு கவரேஜ் தொகை யும் இழப்பீடாக வழங்கப்படும். வேறு வழிகளில் இழப்பீடு வழங் கப்பட்டால் கட்டிய பிரீமியம் 100% திருப்பித் தரப்படும்.

பாலிசி முதிர்வில் பிரீமியம் எதுவும் திரும்பக் கிடைக்காத டேர்ம் பிளானில் சரண்டர் மதிப்பு எதுவும் கிடையாது என்பது முக்கியமான விஷயம்!