Published:Updated:

பண இழப்பைத் தவிர்க்க கைகொடுக்கும் லேப்டாப் இன்ஷூரன்ஸ்..!

லேப்டாப் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
லேப்டாப் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

முனைவர் க.பாலசந்தர், ஆலங்குளம்

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள், அலுவலர்கள், தொழில்முனைவோர்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் பணிகளுக்கு லேப்டாப் அத்தியாவசியமாக உள்ளது. கொரோனா சூழலில் கல்வி, பயிற்சி, தொழில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு லேப்டாப் மிக உதவியாக இருக்கிறது. லேப்டாப் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலைமை தற்போது உள்ளது.

முனைவர் க.பாலசந்தர்
முனைவர் க.பாலசந்தர்

லேப்டாப் எடை மிகக் குறைவாக இருப்ப தால், அதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடிகிறது. அதே சமயம், கவனக்குறைவால் கீழே விழுந்து உடைந்துபோக வாய்ப்பிருக்கிறது. மேலும், லேப்டாப்பில் தண்ணீர் பட்டு இயங்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.

லேப்டாப்பில் முக்கியமான பல தகவல் களைப் பலர் வைத்திருக்கலாம். லேப்டாப்பை சரி செய்து, அந்தத் தகவல்களைப் பெற பல மணி நேரம் ஆகலாம். சில சமயம், லேப்டாப் திருடு போகவும் வாய்ப்பு உண்டு. அப்போது முக்கியமான தகவல்களை வேறு யாராவது தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. அதே போல, மின் கசிவாலும் லேப்டாப் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பிருக்கிறது.

இப்படி பல்வேறுவிதமான சிக்கல்களை லேப்டாப் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இன்ஷூரன்ஸ் துறையில் பல்வேறு புதுமை களைப் புகுத்திவரும் நிறுவனங்கள், லேப்டாப் பயனாளிகள் சந்திக்கும் விசித்திரமான சிக்கல்களை உணர்ந்து, அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு லேப்டாப் இன்ஷூரன்ஸ் பாலிசியை உருவாக்கியுள்ளனர். லேப்டாப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் நிதிச் சிக்கலைத் தவிர்க்க இந்த பாலிசி பயன்படும்.

பண இழப்பைத் தவிர்க்க கைகொடுக்கும் லேப்டாப் இன்ஷூரன்ஸ்..!

லேப்டாப்பை புதிதாக வாங்கும்போது, அதன் உற்பத்தியாளர் வழங்கும் ‘வாரன்டி (warranty)’ கிடைக்கும். வாரன்டி காலத்துக்குள் ஏற்படும் பிரச்னைகளை உற்பத்தி செய்த நிறுவனமே சரிசெய்து கொடுத்துவிடும். வாரன்டி காலம் முடிந்த பிறகு ஏற்படும் பிரச்னைகளை, லேப்டாப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கி நிதிப் பாதுகாப்பு பெறலாம்.

லேப்டாப் இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுக் காலம் ஒரு வருடம் ஆகும். அதன் பிறகு தேவையிருப்பின், இந்த பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலே கூறிய காரணங்களால் லேப்டாப் பழுதடைந்தால், அதைச் சரிசெய்ய ஆகும் செலவை இந்த பாலிசி மூலம் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். பாலிசிதாரர் பாலிசி வாங்கிய தேதியில் இருந்து, லேப்டாப் பழுதடைந்த தேதி இடை வெளியை வைத்து தேய்மானம் எவ்வளவு என்பதைக் கணக்கீடு செய்யப் படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு க்ளெய்ம் தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படுகிறது.

இந்த பாலிசியில் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும் என்ற நிபந்தனையை சில நிறுவனங்கள் விதிக்கின்றன. வேறு சில நிறுவனங்கள் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை வாங்கி, ஓர் ஆண்டில் எத்தனை முறை லேப்டாப் பாதிப்பு அடைந்தாலும், க்ளெய்ம் தருகின்றன. லேப்டாப் உற்பத்தி செய்த கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற உள்ளூர் சர்வீஸ் சென்டரில் பழுதை சரிசெய்ய கொடுத்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.