Published:Updated:

ஆன்லைன், ஆஃப்லைன் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ஆன்லைன், ஆஃப்லைன் இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்றைய நிலையில், டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்திருக் கிறது. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸும், சம்பளதாரர்களுக்கு அவர்களின் ஆண்டு சம்பளத்தைப்போல 10 - 15 மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸும் இருக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் தெளிவாகச் சொல்லி வருவதால், பெரும் பாலானவர்கள் இந்த இரண்டு இன்ஷூரன்ஸ்களையும் அதிக அளவில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி களை ஆன்லைனில் எடுப்பதா, ஆஃப்லைனில் எடுப்பதா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இதைத் தெளிவுபடுத்துகிறார் வெல்த்லேடர் நிறுவனத்தின் தலைவரும் இன்ஷூரன்ஸ் துறை நிபுணருமான எஸ்.ஶ்ரீதரன்.

“முன்பெல்லாம் நிதி ஆலோசனை பெற நிதி ஆலோசகர் களை மக்கள் அணுகும்போது, இன்ஷூரன்ஸ் குறித்த விஷயங்களை அவர்களுக்குப் புரியவைத்து அதை எடுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், இன்று அவர்களே எதிர்கால தேவைகளுக்காக முதலீட்டை ஆரம்பிக்கும் முன் இன்ஷூரன்ஸை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமான போக்குதான்.

எதைச் செய்தாலும் அதிலுள்ள நிறை குறைகளைத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். இன்ஷூரன்ஸை ஆன்லைன்/ஆஃப்லைன் இவற்றில் எதில் எடுக்கலாம் என்பதை நன்கு தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது.

ஆன்லைன், ஆஃப்லைன் இன்ஷூரன்ஸ்...  கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வேகமாகவும் எளிதாகவும் எடுக்கலாம்...

ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுப்பது மிகவும் எளிமை யானது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் வலைதளத்துக்குச் சென்று, தேட ஆரம்பித்தால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏதாவது ஒரு ஏஜென்ட் உங்களைப் போனில் தொடர்புகொண்டு, பாலிசிக்கான செயல்பாடுகளை மேற்கொண்டு இன்றைய தினத்துக்குள்ளாகவே உங்களுக்கு வேண்டிய பாலிசிகளை வழங்கிவிடுவார். அந்த அளவுக்கு வேகமாகவும், எளிதாக வும் ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.

ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது இப்படி பல செளகர்யங்கள் இருந்தாலும், கவனிக்க வேண்டிய பல விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் உள்ள நெகட்டிவ் விஷயங்களை முதலில் பார்ப்போம்.

ஏன் எடுக்கக் கூடாது?

ஆன்லைனில் பாலிசி எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும் என மக்கள் நினைக் கிறார்கள். இன்றைய நிலையில், ஆன்லைனில் எடுத்தாலும் ஆஃப்லைனில் எடுத்தாலும் ஒரே பிரீமியம்தான். இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் நிறுவனத் தின் வெப்சைட்டுகளில் பாலிசி களை எடுத்தால், சில நிறுவனங் கள் பிரீமியத்தில் ஆஃபர் தருகின்றன. எனவே, பிரீமியம் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் ஆன் லைனில் பாலிசி எடுக்கலாம்.

ஆன்லைனில் பாலிசி எடுப்பதில் இருக்கும் பெரும் சிக்கல், பாலிசி குறித்த முழு விவரங்கள் தெரியாமல் எடுப்பது. ‘நான் எடுக்கும் பாலிசி குறித்த முழு விவரங்களையும் படித்துத் தெரிந்துகொண்டுதான் எடுக் கிறேன்’ என்பவர்கள், தாராள மாக ஆன்லைனில் பாலிசி எடுக்கலாம். அப்படி இல்லாத வர்கள், ஆன்லைனில் பாலிசி எடுக்காமல் இருப்பதே நல்லது.

ஆன்லைனில் ஒரு பாலிசியை எடுக்கும்போது, அவர்கள் பாலிசிதாரர்களை நேரடியாகச் சந்தித்து, பாலிசிகள் பற்றிய விவரங்களைச் சொல்லி, அதற்கான ஆவணங்களை வாங்கிக் கொண்டு போவதில்லை. அனைத்துமே டிஜிட்டல் வழியாகவே நடக்கும். நாளைக்கு க்ளெய்ம் செட்டில்மென்ட்டில் ஏதாவது பிரச்னை எனில், நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன்தான் பாலிசிதாரர் போராடியாக வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.மேலும், ஒவ்வோர் ஆண்டும் இன்ஷூரன்ஸை புதுப்பிப்பது உங்களின் கடமையாகும். மறந்துவிட்டால், அந்த பாலிசியில் இருக்கும் சலுகைகள் கிடைக்காமல் போக வாய்ப்புகள் அதிகம்.

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

ஆஃப்லைனில் ஏன் எடுக்க வேண்டும்?

ஒரு நிறுவனத்தை நேரடியாக அணுகி, உங்களுக்கு என்ன மாதிரியான இன்ஷூரன்ஸ் பாலிசி தேவை, பல்வேறு இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு இடையே இருக்கும் வித்தியாசம், இழப்பீடு எவ்வளவு தேவை என்பதை எல்லாம் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்டிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, நமக்கேற்ற இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். இன்ஷூரன்ஸ் எடுப்பதே நமக்குப் பிறகு நம் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதிதான். நாளைக்கு பாலிசியை க்ளெய்ம் செய்வதில் ஏதாவது பிரச்னை என்றால், அது உடனே சரிசெய்யும் விதமாக இருக்க வேண்டும். ஏஜென்ட் அல்லது புரோக்கர் நமக்கு நேரடித் தொடர்பில் இருப்பதால், அவர்களை நாம் தொடர்பு கொண்டு பிரச்னைக்கான தீர்வை உடனடியாகப் பெற முடியும். பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டுவதில் இருந்து ஆரம்பித்து, பணத்தை கட்டி இன்ஷூரன்ஸை தொடர நினைவுபடுத்துவார் என்பதால், பாலிசிதாரர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

ஆனால், ஏஜென்டுகள் சரியான பாலிசிகளைத்தான் நமக்குத் தருகிறார்களா என்பதை பாலிசிதாரர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கமிஷன் அதிகம் கிடைக்கும் என்பதற்காக சில ஏஜென்டுகள், தவறான பாலிசிகளை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. எந்த ஏஜென்ட் என்ன சொன்னாலும் அது சரியானதுதானா என்பதை ஆராய்ந்து பார்த்து விட்டு, வாங்குவதே சரி.

தனியாரா, பொதுத்துறையா?

பொதுத்துறை / தனியார் நிறுவனங்கள் இவற்றில் எதில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என்கிற சந்தேகமும் மக்களிடம் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் தன்மைதான் முக்கியமே தவிர, தனியார் நிறுவனமா அல்லது பொதுத்துறை நிறுவனமா என்பது அடுத்தபட்சம்தான். நல்ல இன்ஷூரன்ஸ் பாலிசியை எங்கு கிடைத்தாலும் எடுக்கலாம்.

இன்றைய நிலையில் கேன்சர், மகப்பேறு, தைராய்டு போன்ற பல்வேறு நோய்களுக்கான பிரத்யேக பாலிசிகளைத் தனியார் நிறுவனங்கள் தான் வழங்குகின்றன. மேலும், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சேவை பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் சேவையைவிட பல மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோவும் தனியார் இன் ஷூரன்ஸ் நிறுவனங்களில் அதிகம்.

பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள் பேசிக் பாலிசிகளை மட்டுமே தந்துவருகின்றன. ஒரு பாலிசியில் க்ளெய்ம் செட்டில்மென்ட் அதிக அளவில் இருந்தால், பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அந்த பாலிசிகளை ஒரு சில ஆண்டுகளில் நிறுத்திவிடுகின்றன’’ என்றார்.

இனி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது தெளிவாக யோசித்து முடிவெடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism