Published:Updated:

மோட்டார் இன்ஷூரன்ஸ்... முக்கியமான 5 அம்சங்கள்..!

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் இன்ஷூரன்ஸ்... முக்கியமான 5 அம்சங்கள்..!

மோட்டார் இன்ஷூரன்ஸ்

Published:Updated:
மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

ராகேஷ் ஜெயின், சி.இ.ஓ, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட்.

உங்களின் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகன மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பது நீங்கள் கட்டும் பிரீமியம் தொகையைச் சார்ந்தே இருக்கிறது. வாகன உதிரிபாகங்கள் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உங்களது புதுப்பிக்கப்பட்ட மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி அனைத்து வகையான சேதங்கள் மற்றும் பிற ரிஸ்க்குகளுக்கும் போதுமான அளவுக்கு இழப்பீடு பெற்றுத் தரும் என்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியமாகும்.

ராகேஷ் ஜெயின் 
சி.இ.ஓ, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட்.
ராகேஷ் ஜெயின் சி.இ.ஓ, ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட்.

மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி புதுப் பித்தலின்போது அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்வது அவசியம். சில கூடுதல் கவர்களை அடிப்படை பாலிசியில் சேர்க்கும் போது பிரீமியம் தொகை சற்று அதிகரிக்கும். ஆனால், பல்வேறு விதமான சேதங்களுக்கும் இழப்பீடு கிடைக்கும். இதனால், நீங்கள் கையிலிருந்து போடும் தொகை குறைவாக இருக்கும். மோட்டார் பாலிசியைப் புதுப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

1. பாலிசி காலாவதியாகும்முன் புதுப்பித்தல்...

இந்தியச் சாலைகளில் ஓட்டப்படும் அனைத்து வாகனங்களும் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன்படி கட்டாயமாக மூன்றாம் தரப்புக் காப்பீட்டைப் (Third-Party Insurance) பெற்றிருக்க வேண்டும். விபத்து ஏதாவது ஏற்பட்டால், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க, பாலிசிக் காலம் முடிவதற்குள் மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டைப் புதுப்பிப்பது மிக முக்கியம் ஆகும்.

அதேநேரத்தில், சொந்த சேதப் பாதுகாப்பு (Own Damage Cover), வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் அவர்களின் சொந்த வாகனத்துக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிப் பாதுகாக்கிறது. தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் சொந்த வாகனத்துக்கான பாதுகாப்பைப் பெற உரிய நேரத்தில் ஓன் டேமேஜ் கவர் பாலிசியைப் புதுப்பித்து உறுதி செய்வது.

2. அறிவிக்கப்பட்ட காப்பீடு மதிப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது...

அறிவிக்கப்பட்ட காப்பீடு மதிப்பு (Insured Declared Value-IDV) என்பது மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முக்கியமான அம்சம் ஆகும். பொதுவாக, வாகனம் திருடு போனால் அல்லது வாகனம் முழுமையாக சேதம் அடைந்தால், எந்தத் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதோ, அதன் அதிகபட்ச மதிப்பு இழப்பீடாக வழங்கப்படும். ஆனால், பலரும் காப்பீட்டு பிரீமியத்தைக் குறைக்க நினைத்து, வாகனத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, குறைவான தொகைக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள்.

இதுபோன்ற நேரங்களில் வாகனத்துக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் அல்லது திருடு போனால், குறைவான தொகையே கிடைக்கும். இதைக் கொண்டு நீங்கள் அதேபோன்ற வாகனத்தை வாங்குவது எனில், கையிலிருந்து அதிக தொகை போட வேண்டியிருக்கும். கையில் பணம் இல்லையெனில், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அல்லது பணம் சேரும் வரைக்கும் வாகனம் எதுவும் இல்லாமல் வழக்கமான பயணத்துக்கு சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே, வாகனத்தின் சரியான மற்றும் நியாயமான மதிப்புக்கு காப்பீடு எடுப்பது அவசியமாகும்.

மோட்டார் இன்ஷூரன்ஸ்... 
முக்கியமான 5 அம்சங்கள்..!

3. கூடுதல் கவரேஜ் வாங்க வேண்டியதன் முக்கியத்துவம்...

இன்ஜின் கவர், கீ புராடக்ட், டயர் & ரிம் கவர், ஜீரோ டிப்ரிசியேஷன் கவர் மற்றும் ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் (RTI) போன்ற கூடுதல் கவர்களை (Add-on covers) அடிப்படை பாலிசியுடன் எடுத்துகொள்வது நல்லது. முக்கியமாக, திருட்டு, நெடுஞ்சாலை பயணத்தின்போது டயர் வெடிப்புகள், வெள்ளபாதிப்பால் இன்ஜின் தொடர்பான சேதங்கள் போன்றவற்றின்போது வாகன உரிமையாளர்கள் செய்யும் செலவை இந்தக் கூடுதல் கவர்கள் கணிசமாகக் குறைக்கின்றன. செலவுகளைக் கணக்கிடும்போது இந்தக் கூடுதல் கவர்களுக் கான பிரீமியம் குறைவாகத்தான் இருக்கிறது.

4. நோ க்ளெய்ம் போனஸ்...

முந்தைய ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் எதுவும் இழப்பீடு இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள், நோ க்ளெய்ம் போனஸ் (No Claim Bonus - NCB) வழங்குகின்றன. இதன் மூலம் ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும். வேறு ஒரு காப்பீட்டு நிறுவனத்துக்கு பாலிசியை இடையே மாற்ற முடிவு செய்தால், நோக்ளெய்ம் போனஸ் சலுகையை அந்த நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

5. இழப்பீட்டைத் தானாக முன்வந்து கழிப்பது...

வாகன உரிமையாளர்கள் இழப்பீடு தானாக முன்வந்து கழித்தல் (Voluntary Deductible) அம்சத்தைத் தேர்வு செய்வது மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும். அதாவது, வாகனத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலான சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கோராமல் இருப்பதும், இழப்பீட்டில் இந்தத் தொகையை பாலிசிதாரர் கையிலிருந்து போடுவதும் தானாக முன்வந்து கழிப்பதாகும்.

உதாரணமாக, கார் ஒன்றில் சேதம் ஏற்பட்டு ரூ.1,000 செலவாகிறது எனில், இந்த காரை பழுது பார்க்கும் மையத்துக்குக் கொண்டு செல்வது, அதன் பிறகு அங்கிருந்து எடுப்பது போன்றவற்றுக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகிவிடும்; கூடவே அலைச்சல் இருக்கிறது. சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தால், அலுவலகத்துக்கு விடுமுறை போட வேண்டியிருக்கும். இதனால் அன்றைக்கு சம்பளம் இல்லாமல் போகும். மேலும், உயர் அதிகாரி விடுமுறைக்கு அனுமதிப்பது அதைவிட முக்கியம். அந்த வகையில் சிறிய பாதிப்புகளை நாமே நம் அலுவலகம் அல்லது வீட்டின் அருகில் இருக்கும் மெக்கானிக் செட்டுகளில் சரிசெய்து கொள்வது லாபகரமாக இருக்கும். மேலும், இப்படி இழப்பீட்டில் தானாக முன்வந்து கழித்தல் அம்சத்தைத் தேர்வு செய்யும்போது பிரீமியமும் சிறிது குறையும்.

நன்கு முழுமையான காப்பீடு செய்யப்பட்ட வாகனம் உங்களுக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பையும் மன அமைதி யையும் தரும். இது உயர்நிலை மோட்டார் சைக்கிள்கள் (High-end Motorcycles) அல்லது சொகுசு கார்களுக்கு அதிக மறுவிற்பனை மதிப்பைக் (Resale Value) கொடுக்கும்.

ரத்தினச் சுருக்கமாக, வாகன உரிமையாளர்கள் தங்களுடைய மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் புதுப்பிக்கும் போது, வாகனத்தின் விலை மதிப்பு மற்றும் பிரீமியத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மேலே உள்ள அனைத்து அம்சங்களையும் எடைபோட்டு பாலிசி எடுப்பது லாபகரமாக இருக்கும்.