Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்..! - பாலிசிதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஹெல்த் 
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருபவர்களுக்கே இது பொருந்தும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்..! - பாலிசிதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருபவர்களுக்கே இது பொருந்தும்.

Published:Updated:
ஹெல்த் 
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவொரு க்ளெய்மையும் நிராகரிக்கக் கூடாது’ என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடியாக அறிவித்திருக்கிறது.

அதாவது, பாலிசி எடுத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஏதாவது க்ளெய்ம் செய்யும்போது ‘இந்தப் பிரச்னையை பாலிசி எடுக்கும்போது சொல்லவில்லை’ என்று குறிப்பிட்டு, எந்தவொரு இழப்பீட்டுக் கோரிக்கையையும் நிராகரிக்கக் கூடாது என்று அது தெரிவித்திருக்கிறது.

`2020, அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் புதிய பாலிசிகளில் இந்த விதிமுறையைச் சேர்க்க வேண்டும்’ என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போதுள்ள பாலிசிகளில் இந்த விதிமுறை 2021, ஏப்ரல் வரை செல்லுபடியாகும்.

பாலிசி எடுத்து எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலிசியைப் புதுப்பித்து வருபவர்களுக்கே இது பொருந்தும். அதே நேரத்தில் பாலிசியில் கடைப்பிடிக்கப்படும் வரம்பு, துணை வரம்பு, கோ-க்ளெய்ம் தொகை செலுத்துதல் போன்றவை பாலிசி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி நிச்சயம் சந்தோஷமானதுதான். இனி உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் மறுக்கப்பட்டால், ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆணையைத் தாராளமாகக் காட்டலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism