நடப்பு
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

என்னென்ன வழிகாட்டுதல்கள்..? - M E D I C L A I M

காப்பீட்டு நிறுவனங்கள் க்ளெய்ம்களை செட்டில் செய்யும் நடைமுறைகளை பாலிசிதாரர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் அமைத்திட இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) நடவடிக்கை எடுத்துவருகிறது.

இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கிய வாடிக்கை யாளர்கள் மருத்துவச் செலவு குறித்த விவரங்களை ஆன்லைன் அல்லது ஆப் மூலம் க்ளெய்ம் செய்யும் வசதியைக் காப்பீட்டு நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும், காப்பீடு தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது போன்ற விவரங்களை பாலிசிதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ வலியுறுத்தியுள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

காப்பீட்டு நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையை சரிபார்ப்பதற்கு மூன்றாம் தரப்பு நிறுவனங்களை நியமித்திருந்தால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களையும் பாலிசிதாரருக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, தொலைபேசி எண், நிறுவனத்தின் மின்னஞ்சல் விவரங்கள் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும். க்ளெய்ம் பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு படிநிலை பற்றிய விவரங்களையும் பாலிசிதாரர்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்றெல்லாம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவுறுத்தியுள்ளது.

இவற்றையெல்லாம் இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள் உடனடியாகச் செயல்படுத்துமா..?