Published:Updated:

இனி காப்பீட்டு திட்டத்தில் மனநோய்களுக்கும் கவரேஜ்!

இன்ஷூரன்ஸ் கவரேஜ்

கொரோனா பேரிடருக்கு முன்னால் மனநோய் என்பது பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் கொரோனா பேரிடருக்கு பின்பு, மக்கள் மனநோய்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இனி காப்பீட்டு திட்டத்தில் மனநோய்களுக்கும் கவரேஜ்!

கொரோனா பேரிடருக்கு முன்னால் மனநோய் என்பது பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் கொரோனா பேரிடருக்கு பின்பு, மக்கள் மனநோய்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

Published:Updated:
இன்ஷூரன்ஸ் கவரேஜ்

அக்டோபர் 31-ம் தேதி முதல் அனைத்து மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும் மனநோய்களை கவரேஜில் சேர்க்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டுத் துறையை நெறிப்படுத்தும் ஐஆர்டிஏஐ அமைப்பு உத்தரவிட்டிருந்தது.

ஐஆர்டிஏஐ
ஐஆர்டிஏஐ

மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017-ன்படி, அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களிலும் பிற நோய்களுடன் மனநோய்களுக்கும் கவரேஜ் தரவேண்டும் என்று இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை கடந்த அக்டோபர் 18-ம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இந்த காப்பீட்டில் என்னென்ன மனநோய்கள் உள்ளடக்கப்படும்?

  • மனச்சோர்வு

  • மனச்சி தைவு நோய் (Schizophrenia)

  • பீதி தாக்குதல் (Panic Disorder)

  • அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு (Hyperactivity/Attention deficit disorder)

  • அதீத மன உளைச்சல் (Post-traumatic stress disorder)

  • ஆளுமைச் சிதைவு (Personality disorders)

  • உண்ணுதல் கோளாறு (Eating disorders)

  • பல்வகை ஆளுமை நோய் கோளாறு (Dissociative disorders)

மனஅழுத்தம்
மனஅழுத்தம்

இந்த காப்பீட்டில் என்னென்ன மனநோய்கள் உள்ளடக்கப்படாது?

  • மனவளர்ச்சிக் குறைபாடு

  • சுயமாக ஏற்படுத்திய மனக்காயம்

  • தற்கொலை முயற்சியால் ஏற்பட்ட மன உளைச்சல்

  • போதை பழக்கத்தால் ஏற்பட்ட மன நோய்கள்

இந்த அறிக்கை குறித்து வெல்த் லீடர் நிறுவனர் ஸ்ரீதரன் கூறியதாவது, "இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 31-ம் தேதி முதல், அனைத்து காப்பீட்டு திட்டங்களிலும் மனநோய்களையும் கவரேஜில் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு முன்பு, காப்பீட்டு நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் பொறுத்தே கவரேஜ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wealth Ladder நிறுவனர் ஸ்ரீதரன்
Wealth Ladder நிறுவனர் ஸ்ரீதரன்

கொரோனா பேரிடருக்கு முன்னால் மனநோய் என்பது பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் கொரோனா பேரிடருக்கு பின்பு, மக்கள் மனநோய்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கவலை, பீதி போன்ற சிறு சிறு மனக்கோளாறுகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் கவரேஜ் வழங்க அறிக்கை உத்தரவிட்டுள்ளது. ஆனால், மனவளர்ச்சி குறைபாடு போன்ற நோய்களுக்கு அதற்கான காப்பீடு திட்டங்கள் மட்டுமே கவரேஜ் வழங்கும்.

இந்த அறிக்கை தற்போதைய சூழலில் மிக முக்கியத்துவமானது ஆகும். இன்றைய தேதிகளில் மனநோய் என்பது அதிகரித்து வருகிறது. அதனால் மனநோய்க்கு கவரேஜ் தருவது மிக முக்கியம் ஆகும்.

Representational Image
Representational Image

ஏற்கனவே காப்பீடு எடுத்திருப்பவர்களும் இந்த கவரேஜில் இடம்பெறுவர். காப்பீட்டு திட்டத்தில் புதிதாக இந்த நடைமுறை மட்டும் கூடுமே தவிர, வேற எந்த மாற்றங்களும் நிகழாது. இந்த காப்பீட்டின் கவரேஜ் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த முழு விவரங்கள் இந்த அறிக்கை நடைமுறைக்கு வந்தபிறகு தான் தெளிவாக தெரியும்" என்றார்.