Published:Updated:

மழைக்காலம் வரப்போகுது... சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

மழைக்காலம் வரப்போகுது... சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

பங்கஜ் வர்மா, ஹெட் - அண்டர்ரைட்டிங், எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

மழைக்காலத்தை எதிர்நோக்கி இருக்கிறோம் நாம். மலேரியா, டெங்கு, காலரா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் பருவ மழைக் காலத்தில் ஏற்படும் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்னைகள். இந்த நோய்கள் ஏற்படுத்தும் உடல் பிரச்னைகளையும் கஷ்டங்களையும் தவிர, கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது பருவ மழை ஏற்படுத்தும் நோய்களுக்கான சிகிச்சை செலவாகும். அது உங்கள் சேமிப்பில் மிகப் பெரிய ஓட்டையை ஏற்படுத்திவிடும்.

பங்கஜ் வர்மா 
ஹெட் - அண்டர்ரைட்டிங், 
எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்
பங்கஜ் வர்மா ஹெட் - அண்டர்ரைட்டிங், எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்

மழைக்காலம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வீடு, பொருள்கள் மற்றும் வாகனங்கள் போன்ற உங்கள் மதிப்புமிக்க சொத்துகளைச் சேதப்படுத்துவதாக இருக்கிறது. பெரு வெள்ளம், நீர் தேங்கி இருப்பது மற்றும் சுவர்களில் கசிவு போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் இழப்பு அல்லது சேதம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், ‘பருவமழை - பாதுகாப்பு’ என்பதை உறுதிப்படுத்த உங்களால் முடிந்ததைச் செய்வது அவசியம். மழைக்காலத்தில் உங்கள் உடல்நலம் மற்றும் வாகனத்தைப் பராமரிக்க சில முக்கிய குறிப்புகளைக் கீழே தந்துள்ளோம்.

மருத்துவக் காப்பீடு...

மருத்துவக் காப்பீடு என்பது துரதிர்ஷ்ட வசமான ஒரு நிகழ்வை நிதி ரீதியாகச் சமாளிக்க உதவுகிறது. இந்த எதிர்பாராத துயர நிகழ்வு எங்கும், எந்த நேரத்திலும் நடக்கலாம். மருத்துவக் காப்பீடு இருக்கும்பட்சத்தில் மருத்துவ அவசரநிலைகளுக்கு நிதி ரீதியாகப் பாதுகாப்பு கிடைக்கிறது. ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய உதவும் சில குறிப்புகள் இனி...

1. விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...

உங்கள் மருத்துவத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம் மற்றும் அவசியமாகும். உங்களிடம் ஏற்கெனவே காப்பீட்டுத் திட்டம் இருந்தால், அதை டெங்கு / பருவமழை மூலம் ஏற்படும் குறிப்பிட்ட நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும்படி மேலும் மேம்படுத்தவும்.

உங்கள் நிறுவனம் உங்களுக்கு வழங்கக்கூடிய குரூப் பாலிசி அல்லது அடிப்படை பாலிசி யுடன் கூடுதலாக டாப்-அப் (top-up) பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது மற்றும் கட்டாயம்.

ஒரே பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டமும் (Family floater plan) பலன் அளிக்கக்கூடிய திட்டம் தான். தனிநபர் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது இந்தக் குடும்ப பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும்.

2. பணமில்லா சிகிச்சை பாலிசி...

நீங்கள் பணமில்லா (Cashless) சிகிச்சையின் நன்மைகளைப் பெறக்கூடிய மருத்துவமனை களின் பரந்த வலையமைப்பைக் (Network of Hospitals) கொண்ட காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வது நல்லது. பணிமில்லா சிகிச்சை என்கிற போது காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கான தொகையை நேரடியாக வழங்கிவிடும். அதாவது, பாலிசிதாரர் பாக்கெட்டிலிருந்து சிகிச்சைக் கான பணம் செலுத்தி, அதைத் திரும்பக் கோரும் நடைமுறை சிக்கலை இந்த பாலிசியில் நீங்கள் சந்திக்க வேண்டிய தில்லை.

3. க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம்

அதிக க்ளெய்ம் செட்டில் மென்ட் விகிதத்தை (Claim Settlement Ratio) கொண்டிருக்கும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தைத்தான் எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். எனவே, அதிக க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம், அதிக வெற்றிகரமான கோரிக்கை தீர்வுக்கான வாய்ப்புகளை வழங்கும்.

மழைக்காலம் வரப்போகுது... சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?

மழைக்கால உடல்நலக் குறிப்புகள்...

 மழைக்காலங்களில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், குடிக்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகளை நன்கு சமைத்து உண்பது நல்லது. நீங்கள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் ஜங் உணவு (Junk food) மற்றும் ஆரோக்கியமில்லாத தெரு ஓரக் கடைகளில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெளியில் கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை மேற்கொள்வது மூலம் கிருமிகள் மற்றும் வைரஸ்களால் ஏற்படக்கூடிய நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். கூடவே, உடல்நலத்தைக் காப்பதுடன், மருத்துவச் செலவையும் தவிர்க்க முடியும்.

 மழைக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். உடைகள் மற்றும் காலணிகளை (shoes) உலர்த்தி வைக்க முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் கூடுதலாக ஒரு ஜோடி ஆடைகள் அல்லது காலணிகளை வைத்திருப்பது நல்லது.

 ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துங்கள். உங்கள் உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் புதிய பழங்களைச் சேர்ப்பது மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

 நீங்கள் மழையில் நனைந்தால், காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களைத் தவிர்க்க வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

 மழைக்காலங்களில் நீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும். இதைத் தவிர்க்க வீட்டுக்குள் மற்றும் வீட்டைச் சுற்றி எங்கும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாகனக் காப்பீடு...

மழைக்காலத்தில் வாகனங்கள் பிரேக்டவுன் ஏற்பட்டு பழுதாகி ஆங்காங்கே நிற்பது பரவலாக நடக்கிறது. இதனால் பெரிய அளவில் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. மூன்றாம் தரப்பு பொறுப்பேற்கும் மோட்டார் காப்பீடானது சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரீமிய செலவுக்கு பயந்து பலரும் இந்த சட்டப்படியான பாலிசியை மட்டுமே எடுத்திருக்கிறார்கள். இது சிக்கலில் கொண்டு வந்துவிடும்.

தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் என்பது நம் வாகனம் பிறருக்கு ஏற்படுத்தும் சேதத்துக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கும். நம் வாகனத்துக்கு உண்டாகும் சேதத்துக்கான இழப்பீட்டை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்காது. அந்த இழப்பீட்டை நாம்தான் செலவு செய்து சமாளிக்க வேண்டும். எனவே, விரிவான பாலிசியை (comprehensive policy) எடுத்துக் கொண்டால், சட்டப்படியான பாதுகாப்பு மற்றும் சுயமாக ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு க்ளெய்ம் பெற முடியும். அதாவது, இந்த விரிவான பாலிசி யானது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் பொறுப்பை சட்டப்படி ஏற்பதுடன், வெள்ளம் அல்லது திருட்டு காரணமாக உங்கள் வாகனத்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்துக்கும் இழப்பீடு பெற்றுத் தருவதாக உள்ளது.

வாகனக் காப்பீட்டை எடுக்கும் முன்...

குறைந்த பிரீமிய காப்பீட்டுத் திட்டத்துடன் உங்கள் வாகனத் தைப் பாதுகாக்க உதவும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கவரேஜ் தேவையை உணர்ந்து பாலிசி எடுங்கள்: உங்கள் வாகனத்துக்கான கவரேஜ் தேவையை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய அம்சங்களுடன் பிரத்யேக பாலிசியை எடுக்கவும். வாகனத்தின் பயன்பாட்டைப் பொறுத்து விரிவான பாலிசியை எடுக்கவும். மேலும், உங்களுக்குத் தேவைப்படும் இதர கவரேஜ் களுக்கேற்ப பூஜ்ய தேய்மானம், இன்ஜின் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் ஆட்-ஆன் (add-on) பாலிசியை எடுக்கவும்.

காப்பீடு அறிவிக்கப்பட்ட மதிப்பைப் புரிந்து கொள்ளுங்கள்: ஐ.டி.வி (Insurance declared value - IDV) என்பது, காப்பீட்டு பாலிசியை வாங்கும்போது தீர்மானிக்கப்பட்ட வாகனத்தின் தற்போதைய சந்தை விலையாகும். வாகனக் காப்பீடு எடுக்கும்போது இது மிக முக்கியமான காரணியாகும். ஏனெனில், வாகனத்தின் வயது, தேய்மானம் அதிகரிக்கும்போது ஐ.டி.வி மதிப்பு குறையும். இதன் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளில் பிரீமியம் குறையும். சிலர் பிரீமிய செலவைக் குறைக்க வாகனத்தின் தற்போதைய மதிப்பைக் குறைத்துக்காட்டுகிறார்கள்; இன்னும் சிலர் அதிக க்ளெய்ம் கிடைக்கும் என்று வாகனத்தின் மதிப்பை அதிகரித்துக் காட்டுகிறார்கள். இந்த இரண்டும் தவறாகும். காரணம், வாகனத்துக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு க்ளெய்ம் செய்யப்பட்டால், சர்வேயர்கள் அதன் அப்போதைய மதிப்புக்கேற்பவே இழப்பீடு வழங்க பரிந்துரை செய்வார்கள்.

மழைக்காலத்தில் வாகனத்தைப் பாதுகாக்கும் வழிகள்...

 ஈரப்பதமான காலநிலைக்கேற்ப உங்கள் வாகனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக குளிர் இருக்கும்பட்சத்தில், வாகனத்தை ஈரப்பதம் பாதிக்காத வகையில் மூடி வைப்பது நல்லது. மேலும், உலோக சட்டத்தில் துரு எதிர்ப்பு பாதுகாப்பு அடுக்கு பூச்சை (Anti-rust protection layer coat) பயன்படுத்த வேண்டும்.

 திறந்த வெளியில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்கவும். மழை, வெயிலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மேற்கூரை உள்ள வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தவும். பெரிய மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும். இப்படி பொறுப்பு இல்லாமல் வாகனத்தை நிறுத்திய நிலையில் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் க்ளெய்ம் மறுக்கப்படலாம்.

 கவர்டு பார்க்கிங் இடம் கிடைக்கவில்லை எனில், பொருத்தமான நீர்ப்புகா கவர் (waterproof cover) கொண்டு வாகனத்தை மூடிவைத்துப் பாதுகாக்கவும். இந்த நீர்ப்புகா கவரை வாகனத்திலேயே எப்போதும் வைத்திருப்பது நல்லது.

 மழைநீர் உங்கள் வாகனத்தின் மின் பாகங்களை சேதப்படுத்தும் மற்றும் அது நீண்டகாலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனில், மழைக்காலத்தில் மின்சார வயரிங் மற்றும் பேட்டரியைத் தவறாமல் அடிக்கடி பரிசோதனை செய்வது அவசியம்.

 உங்கள் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் நல்ல நிலையில் செயல் படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மழை பெய்து கொண்டிருக் கும்போது, சூரிய ஒளி தடைபட்டு சாலைகள் இருட்டாகக் காட்சியளிக்கும். அப்போது எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் சாலைகளில் காணப்படும் மேடு பள்ளங்கள் சரியாகத் தெரியவில்லை எனில், விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் மழை பெய்யும்போது வாகனம் ஓட்டினால் பாதுகாப்பு கியர் அணியுங்கள்.

எனவே, உங்கள் உடல்நலத்தையும் வாகனத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையை உடனே எடுங்கள்!