Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 75% வரை அதிகரித்த ஏஜென்ட் பங்களிப்பு!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 75% வரை அதிகரித்த ஏஜென்ட் பங்களிப்பு!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

கொரோனா பாதிப்புக்குப் பிறகு, மருத்துவக் காப்பீட்டுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வுக்கு முன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் போன் செய்தால், என்னவென்று கேட்காமல்கூட நம்மில் பலர் தொடர்பைத் துண்டித் திருப்போம். இப்போது திட்டங் களின் விவரங்களைப் பலரும் காது கொடுத்து கேட்கிறோம்.

நம் நாட்டில் கிட்டத்தட்ட 12 லட்சம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். இந்த ஏஜென்டுகள் மூலமான பிரீமிய வணிகம் 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.17,500 கோடியாக இருந்தது. இது 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.20,600 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை மட்டும் விநியோகிக்கும் நிறுவனங்களின் ஏஜென்டுகள் பங்களிப்பு 26% அதிகரித்து, ரூ.10,300 கோடியாக உள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 75% வரை அதிகரித்த ஏஜென்ட் பங்களிப்பு!

நம் நாட்டில் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் விநியோகத்தில் ஏஜென்டுகள் பங்களிப்பு 2014-15-ம் ஆண்டில் 70 சதவிகிதமாக இருந்தது, 2019-20-ம் ஆண்டில் 75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டு களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஏஜென்ட் எண்ணிக்கை, 2019-20-ம் நிதி ஆண்டில் 12% அதிகரித்து, 2,23,141-ஆகவும், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில் 8% அதிகரித்து, 2,92,356-ஆகவும் உள்ளது. இதுவே, மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை மட்டும் விநியோகிக்கும் நிறுவனங்களில் ஏஜென்டுகள் எண்ணிக்கை 31% அதிகரித்து, 6,81,142-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism