க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

விபத்து மூலமாக எதிர்பாராத சிகிச்சை செலவு, நோய் பாதிப்பு மூலம் ஏற்படும் சிகிச்சை செலவு போன்ற வற்றைச் சமாளிக்க செய்யப் பட்டிருக்கும் ஏற்பாடுதான் மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்). இந்த பாலிசி, எதிர்பாராத, அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இந்த மருத்துவக் காப்பீடு குறித்து அடிக்கடி பலராலும் கேட்கப்படும் கேள்விகள் சில...

மருத்துவக் காப்பீட்டில் பிரீமியம் என்றால் என்ன?

“மருத்துவச் செலவுகளுக்கான பணத்தைக் காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்குக் கொடுக்கும். இதற்காக, பாலிசி எடுக்கும் நபரிடமிருந்து காப்பீட்டு நிறுவனம் ஒரு சிறிய தொகையை வசூலிக்கும். அந்தத் தொகைதான் பிரீமியம் எனப்படும். இப்படி லட்சக்கணக் கானவர்கள் பாலிசி எடுத்திருக்கும் போது, அதில் சில நூறு பேர்கள்தாம் மருத்துவமனை செலவுகளைச் சந்திப்பார்கள். அந்த வகையில் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டுவது மூலம் லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவமனை செலவுகளுக்குப் பெற முடியும்.”

மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்துவிட்டு, பிற்பாடு அதை வேண்டாம் என்றால் திரும்ப அளிக்க முடியுமா?

“முடியும். இதை ஃப்ரீலுக் (Free look) வசதி என்பார்கள். ஒருவர் ஒரு பாலிசி எடுத்துவிட்டு, அந்த பாலிசி அவருக்குத் தேவை இல்லை என நினைத்தால், பாலிசி எடுத்த தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் திரும்ப அளித்துவிடலாம்.”

ஹெல்த் பாலிசிகளில் சிக்கல் இல்லாமல் எப்படி க்ளெய்ம் செய்ய முடியும்?

“மருத்துவக் காப்பீடு பாலிசிகளில் இரு முறைகளில் க்ளெய்ம் செய்ய முடியும். முதல் முறையில், உங்கள் சிகிச்சைக்கு நீங்கள் முதலில் பணம் செலுத்திவிட்டு, பாலிசிக்கான கோருதலைப் பின்னர் செய்யலாம். இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது. காரணம், நீங்கள் கையிலிருந்து பணம் போட வேண்டியிருக்கும். அதற்கான வசதி உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

இரண்டாவது முறையில், காப்பீடு நிறுவனத்துடன் இணைந்திருக்கிற நெட்வொர்க் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில் சிகிச்சையின் ஆரம்பத்திலிருந்தே நீங்கள் கையிலிருந்து செலவுகளைச் செய்ய வேண்டியிருக்காது. இதை கேஷ்லஸ் வசதி என்பார்கள். அதாவது, ரொக்கமில்லா செட்டில்மென்ட் - மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்கில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும்போது நீங்கள் எந்தத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை.”

மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் முக்கிய வகைகள் என்னென்ன?

“1. தனிநபர் மருத்துவக் காப்பீட்டு பாலிசி: இதில், மொத்த காப்பீடு தொகையும் 60 வயதுக்கு உட்பட்ட தனிநபர் ஒருவருக்கு அளிக்கப்படும். 2. குடும்ப பாலிசி: இந்த பாலிசியில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோர் கொண்ட குடும்பத்தினர் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும்.

3. மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு: மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேர முடியும். இவை முதியோர்களின் மருத்துவப் பராமரிப்புடன் தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்ய உதவுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சீனியர் சிட்டிசன் பாலிசியைப் பெறுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். உடல் நலத்தின் தகுதிக்கு ஏற்ப பிரீமியம் மாறுபடும்.’’

மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் வேறு என்னென்ன வகைகள் உள்ளன?

1. தீவிர நோய் பாதிப்பு (க்ரிட்டிக்கல் இல்னஸ்) பாலிசி: சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு போன்ற தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு முழுமையான பாலிசி அல்லது ரைடரை எடுத்துக்கொள்ளலாம். பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட கொடிய நோயால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவருக்குத் தீவிரநோய் காப்பீட்டு பாலிசிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும்.

2. குழு மருத்துவக் காப்பீடு: குழு/ ஊழியர் மருத்துவக் காப்பீடு பாலிசிகள் பொதுவாக நிறுவனங்களால் வழங்கப் படும். மருத்துவச் செலவினங்களுக்கு எதிராக அந்த நிறுவனத்தின் ஊழியர்களைக் காப்பீடு செய்கின்றன. குழு மருத்துவக் காப்பீட்டில் பிரீமியம் பொதுவாக சராசரியைவிடக் குறைவாக இருக்கும்.

3. தனிநபர் விபத்துக் காப்பீடு: இந்த பாலிசி, விபத்து, இறப்பு, உடல் ஊனம், காயம் மற்றும் பிற எதிர்பாராத சூழல்களின் விளைவாக ஏற்படும் செலவுகளில் இருந்து பாலிசிதாரரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்கிறது. தனிநபர் விபத்துக் காப்பீடு தனியாக எடுக்கலாம். அல்லது ஏற்கெனவே இருக்கும் பாலிசியில் துணை பாலிசியாக (ரைடர்) எடுக்கலாம்.

4. மகப்பேறு மருத்துவக் காப்பீடு: மகப்பேறு மருத்துவக் காப்பீடு கர்ப்பிணி பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக காப்பீடாகும். இதைத் தனியாகயும் வாங்கலாம் அல்லது தற்போதைய மருத்துவ பாலிசியில் ரைடராக வாங்கலாம். மகப்பேறு மருத்துவக் காப்பீடு பிரசவத்துக்கு முன்பு, பிரசவத்துக்குப் பிறகு மற்றும் மருத்துவ மனை செலவுகளுக்கு எதிராக, தாய் மற்றும் குழந்தை இருவரையும் உள்ளடக்கியது. பிரசவம் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் இதில் அடங்கும். இதற்குக் காத்திருக்கும் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.”

கட்டும் பிரீமியத்துக்கு ஏதாவது வருமான வரிச் சலுகை உண்டா?

“செலுத்தும் பிரீமியத்தின் மீது வருமான வரிச் சட்டத்தின் 1961 படி 80D பிரிவின்கீழ் வரி விலக்கு உண்டு.

தனிநபர் மற்றும் குடும்பம்: நிதி ஆண்டில் ரூ.30,000 வரை வரிச் சலுகை உண்டு. பெற்றோருக்கு கட்டும் ரூ.30,000 பிரீமியத்துக்கும் வரிதாரர் வரிச் சலுகை பெறலாம். மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தில் வரிச் சலுகை ரூ.50,000 ஆகும்.”

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் எவை?

“ஏற்கெனவே, ஏதாவது நோய் வாய்ப்பட்டு இருந்தால் பாலிசி எடுக்கும்போது அதை மறைக் காமல் தெரிவிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் க்ளெய்ம் செய்யும் போது, எந்தவொரு சிக்கலும் இல்லாமல் க்ளெய்ம் தொகை கிடைக்க உதவும்.

பொருந்தும் துணை வரம்புகளைத் தெரிந்துகொள்ளவும் (அறை வாடகை, மருத்துவர்களின் கட்டணங்கள், மருத்துவப் பரிசோதனை செலவுகள் முதலிய செலவுகளுக்கான தொகை வரம்பு).”

டாப்அப் மருத்துவக் காப்பீடு பாலிசி என்றால் என்ன?

“டாப்அப் மருத்துவக் காப்பீடு என்பது குழுக் காப்பீடு அல்லது தற்போதுள்ள தனிநபர் திட்டத்தின் கீழ் வரையறுக்கப் பட்ட மருத்துவக் காப்பீடு கூடுதல் காப்பீடு அம்சமாகும்.

அடிப்படை பாலிசியுடன் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அதில் இருக்கும் கவரேஜ் தொகையைவிட க்ளெய்ம் அதிகமாகப் போகும் போது மட்டுமே இந்த டாப்அப் பாலிசியைப் பயன்படுத்த முடியும்.

டாப்அப் பாலிசியின் பிரீமியம் மிகக் குறைவு. தனி நபர் மற்றும் குடும்பம் என இதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைய வாழ்க்கை முறை யின் தேவைக்கு ஒருவர் குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருப்பது அவசியம். 2 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு அடிப்படை பாலிசியையும், 3 லட்சம் ரூபாய்க்கு டாப்அப் பாலிசியும் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களின் க்ளெய்ம் 3 லட்சம் ரூபாய் வரும்போது அடிப்படை பாலிசியில் 2 லட்சம் ரூபாயும், டாப்அப் பாலிசி யிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும் க்ளெய்ம் வாங்கிக் கொள்ளலாம்.

தற்போதுள்ள காப்பீட்டு வரம்பு குறைவாக இருந்தால், ஒரே நோயினால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய இது முயற்சி செய்கிறது.”

க்ளெய்ம் இல்லை என்றால், எவ்வளவு நோ க்ளெய்ம் போனஸ் தொகை கிடைக்கும்?

“முந்தைய ஆண்டில் ஒரு நபர் எந்தவொரு சிகிச்சைக்காகவும் க்ளெய்ம் செய்யவில்லை என்றால், நோ க்ளெய்ம் போனஸ் நன்மையாக அளிக்கப்படுகிறது. நோ க்ளெய்ம் போனஸாக இலவச உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படு கின்றன. அல்லது பிரீமியம் குறைக்கப் படலாம். அல்லது கவரேஜ் அதிகரித்து வழங்கப்படும்.”

இன்றைய வாழ்க்கை முறையின் தேவைக்கு ஒருவர் குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருப்பது அவசியம்.