Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பிரீமியம் அதிகரிப்பால் பாதிப்பா? - நீங்களும் பரிசீலிக்கலாம்..!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

HEALTH INSURANCE

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பிரீமியம் அதிகரிப்பால் பாதிப்பா? - நீங்களும் பரிசீலிக்கலாம்..!

HEALTH INSURANCE

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ந்தியக் காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ அண்மையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் விதிமுறை களை மாற்றி அமைத்தது. இந்த மாற்றத்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பிரீமியம் அதிகரித்திருக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ, அறிக்கை ஒன்றை வெளிட்டிருக்கிறது.அதில், ‘விலக்குகளைத் தரநிலைப்படுத்தலுக்காக (standardization of exclusions) தற்போதுள்ள திட்டங்களின் பிரீமியத்தை 5% வரை அதிகரிக்கவோ, 5% வரை குறைக்கவோ மட்டும் அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி, மொத்தமுள்ள 388 ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில், பொது மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் 55 திட்டங்களில் 5% வரை மட்டுமே பிரீமியம் அதிகரிக்கப்பட்டிருகிறது” என ஐ.ஆர்.டி.ஏ.ஐ விளக்கம் அளித்துள்ளது.

இதனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பிரிமீயம் தொகை பெரிய அளவில் உயராது. எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனவே, ஆபத்துக்கு உதவும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!