யூலிப் என்கிற யூனிட் லிங்க்டு இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் காப்பீடுடன்கூடிய முதலீட்டுத் திட்டமாகும்.

ஐந்து வருட லாக் இன் காலத்துடன்கூடிய இந்த பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு 80சி-யின்கீழ் வரி விலக்கு உண்டு. இதன் முதிர்வுத் தொகைக்கும் வரி கிடையாது.

வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் இ.எல்.எஸ்.எஸ்ஸில் (3 வருட லாக் இன், 80சி வரிச் சலுகை) நீண்டகால மூலதன ஆதாய வரி, ஒரு நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு கிடையாது. அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 10% வரி உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் போலவே, யூலிப் பாலிசி களுக்கும் வரி விதிக்க வேண்டும் என ஆம்ஃபி கூட்டமைப்பு, நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வகையில் இப்போது யூலிப் பாலிசிகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

வருகிற 2021-22 பட்ஜெட்டில், 2021 பிப்ரவரி 1 அல்லது அதற்குப் பிறகு எடுக்கப்படும் யூலிப் பாலிசிகளில் ஆண்டு பிரீமியம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வரி குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவந்த பின்பே இதனால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாகத் தெரியும்!