Published:Updated:

`காப்பீடு எடுத்துக்கொள்ளாதவர்களே எங்கள் கிராமத்தில் இல்லை!' - ஆச்சர்யப்படுத்தும் தமிழக கிராமங்கள்

பாராட்டு விழா
பாராட்டு விழா

இந்த இரண்டு கிராமத்திலும் மத்திய அரசின் திட்டங்களான அடல் பென்ஷன் ஓய்வூதியத் திட்டத்தில் 257 பேரும், பிரதம மந்திரி ஜீவன் ஜோதிபீமா திட்டத்தில் 497 பேரும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டத்தில் 584 பேரும் சேர்ந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள், அரசு அறிவித்த அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களையும் நூறு சதவிகிதம் எடுத்து, தாங்களும் பயனடைந்து மற்ற கிராமங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள்.

வாடிப்பட்டி அருகே டி. ஆண்டிபட்டி ஊராட்சியிலுள்ள சின்னமநாயக்கன்பட்டி, தும்பிச்சம்பட்டி கிராமங்களில் வசித்துவரும் அனைத்துக் குடும்பத்தினரும் மத்திய அரசின் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் முழுமையாக சேர்ந்துள்ளார்கள். இதனால், 100 சதவிகிதம் காப்பீடு செய்யப்பட்ட ஊராட்சியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு விழா
பாராட்டு விழா
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கூகுள் பே ஃபிக்சட் டெபாசிட் திட்டம்; இனி என்ன நடக்கும்?

இந்த இரண்டு கிராமத்திலும் மத்திய அரசின் திட்டங்களான அடல் பென்ஷன் ஓய்வூதியத் திட்டத்தில் 257 பேரும், பிரதம மந்திரி ஜீவன் ஜோதிபீமா திட்டத்தில் 497 பேரும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டத்தில் 584 பேரும் சேர்ந்துள்ளனர்.

இந்த மக்களைப் பாராட்டி டி.ஆண்டிப்படியில் நடந்த பாராட்டு விழாவில் கிராம மக்கள் அனைவரையும் பாராட்டி பேசிய மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், காப்பீட்டுத் திட்ட சான்றிதழ்களுடன் பரிசுகளையும் வழங்கினார்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து சமீபத்தில் பாம்பு கடித்து மரணமடைந்தவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடாக ரூ 2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

காப்பீடு செய்த மக்களுக்கு பாராட்டு
காப்பீடு செய்த மக்களுக்கு பாராட்டு
ஹெல்த் இன்ஷுரன்ஸ் இருந்தாலும் அவசர கால நிதி அவசியம்தான்... ஏன்? - ஆலோசகரின் அட்வைஸ்

இந்த இரண்டு கிராம மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டு அனைவரும் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டங்களில் இணைவதற்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்களும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும் யூனியன் வங்கி சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் வழங்கப்பட்டது.

காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பதைச் சொல்ல, இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சிறந்த உதாரணம் என்றே கூறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு