Published:Updated:

ஆயுள் காப்பீடு... 42% அதிகரித்த புதிய பிரீமிய வசூல்!

ஆயுள் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் புதிய வணிகப் பிரீமியம் (new business premium- NBP) கடந்த நவம்பர் மாதத்தில் 42% அதிகரித்து ரூ. 27,177 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம், குரூப் ஒற்றை பிரீமிய பாலிசிகள் அதிக எண்ணிக்கையில் நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகும்.

இந்தியாவில் தற்போது 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், எல்.ஐ.சி மட்டும் பொதுத்துறை நிறுவனமாகும்.

கடந்த நவம்பரில் தனியார் நிறுவனங்களின் புதிய வணிக பிரீமியம் 58.63% உயர்ந்து, ரூ.11,209.75 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், எல்.ஐ.சி-யின் புதிய வணிக பிரீமியம் 32% உயர்ந்து, 15,967.51 கோடியாக உள்ளது.

ஆயுள் காப்பீடு... 42% அதிகரித்த புதிய பிரீமிய வசூல்!

தனியார் துறையில் மிகப் பெரிய நிறுவன மான எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸின் வளர்ச்சி 150% அதிகரித்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப், மேக்ஸ் லைஃப் மற்றும் மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் புதிய வணிக பிரீமிய வளர்ச்சி நவம்பர் மாதத்தில் 25 சதவிகி தத்துக்குமேல் அதிகரித்துள்ளது.

புதிய வணிகப் பிரீமியத்தில் எல்.ஐ.சி-யின் சந்தைப் பங்குகளிப்பு 63 சதவிகிதமாக இருக் கிறது. பாலிசிகளின் எண்ணிக்கையில் இதன் பங்களிப்பு 71.84 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், காப்பீட்டு கவரேஜ் தொகையின் அடிப்படையில் பார்த்தால் எல்.ஐ.சி-யின் பங்கு 18 சதவிகிதமாகவும், 23 தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 82 சதவிகிதமாக இருக்கிறது.

கோவிட் காரணமாக மூடிக் கிடந்த அல்லது குறைவான பணியாளர்களுடன் இயங்கிய பல நிறுவனங்கள், முழு மூச்சுடன் இயங்க ஆரம்பித்திருப்பதே 2021 நவம்பர் மாதத்தில் குரூப் ஒற்றை பிரீமிய பாலிசிகளின் பிரீமிய வசூல் அதிகரிக்க முக்கியமான காரணமாகும்!