Published:Updated:

கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு பிரபலமாகும் ஓராண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ்..!

டேர்ம் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ்

வருண் குப்தா, தலைமை மற்றும் நியமன ஆக்சுவரி, பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ்

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, நிச்சயமற்ற ஓர் உணர்வு உலகம் முழு வதும் பரவியுள்ளது. இந்தத் தொற்று நோய், வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையை நமக்கு உணர்த்தி, தனிப்பட்ட மற்றும் நிதி நிலைகளில் எந்தவிதமான சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும் என நம்மை முன்கூட்டியே திட்டமிடத் தூண்டியிருக்கிறது.

வருண் குப்தா 
தலைமை மற்றும் நியமன ஆக்சுவரி, 
பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ்
வருண் குப்தா தலைமை மற்றும் நியமன ஆக்சுவரி, பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ்

நிதி ரீதியாகத் தயாராக இருப்பதற்கான முக்கியமான படிகளில் ஒன்று, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை முன்கூட்டியே எடுத்துக்கொள்வது. அந்த பாலிசி உங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப் பினர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க போதுமானதா என்பதை மதிப்பீடு மற்றும் உறுதி செய்துகொள்வதாகும். உலகம் எங்கும் நிலவும் நிச்சயமற்ற நிலை மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பது, சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதை இன்னும் முக்கிய மானதாக மாற்றியிருக்கிறது.

இந்தியாவில் பணிபுரிபவர்களின் பங்களிப் பில் 46% மில்லினியல்கள் (millennials) என்கிற இளைஞர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நாட்டின் குடும்ப வருமானத்தில்70 சதவிகி தத்தைப் பங்களிக்கிறார்கள்.

கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு 
பிரபலமாகும் ஓராண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ்..!

இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியாக நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் எப்போதும் காப்பீட்டு பாலிசிகளை எடுக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, இந்தத் தொற்று நோய்ப் பரவலின்போது முன்பைவிட அதிகமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுத்து வருகிறார்கள்.

ஆனால், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவ தற்கான செலவு, அதிக மற்றும் சிக்கலான ஆவண வேலைகள் (Complicated Paperwork), நேரமின்மை மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை முன்னுரிமைகள் (Lifestyle Priorities) உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவர் களால் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சுலபமாக எடுக்க முடிவதில்லை.

வீட்டு வாடகை, வீட்டுக் கடன் மாதத் தவணை, கார் கடன் மாதத் தவணை, கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற வற்றின் செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருப் பதால், இளம் நுகர்வோர்கள் பொதுவாக, நீண்ட கால நிதித் திட்டமிடலைக் காட்டிலும் குறுகிய கால நிதித் திட்டமிடலையே விரும்பு கிறார்கள். தற்போதைய தலைமுறையினர் காப்பீட்டின் அவசியத்தைப் புரிந்துகொண்டாலும், எதிர்கால நிச்சயமற்ற நிலையிலிருந்து தங்களையும் தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களையும் நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டங் களைத் தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீட்டு பாலிசியை எடுக்கும் முன், காப்பீட்டு பாலிசி மற்றும் அந்தக் காப்பீடு பாலிசியை அளிக்கும் நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்துகொள்வது அவசியம். பலரால் உடனடியாக நீண்ட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உதவுவதற் காக சிறந்த தீர்வாகப் புதுமையான ஓராண்டு டேர்ம் பிளான் (One-year-Term plan) சந்தைக்கு வந்திருக்கிறது.

முதல் முறையாக காப்பீடு எடுப்பவர்களுக்கு இது ஒரு பரிசோதனை பாலிசியாக கருதப்படுகிறது. இந்த பாலிசியில் ஒரு வருட கால திட்டத்தின் பலன்களை அவர்கள் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டபின், தேவைப்பட்டால் நீண்ட கால டேர்ம் இன்ஷூரன்ஸை அவர்கள் வாங்கலாம் அல்லது கூடுதலாக இன்னும் ஒரு வருட காப்பீட்டைத் தேர்வு செய்து, ஓராண்டுத் திட்டத்தை மேலும் தொடரலாம்.

கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்திருக்கும் நிலையில் வாழ்க்கையின் நிச்சயமற்றதன்மையை நமக்கு உணர்த்தியிருக்கும் தற்போதைய சூழலில், ஒரு வருட டேர்ம் பிளான் மிகவும் பொருத்த மான ஆயுள் காப்பீடு பாலிசியாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 30 வயதுடைய ஆண், புகை பிடிக்காதவருக்கு, ரூ.50 லட்ச பாலிசிக்கு (இழப்பீட்டுத் தொகை ஒரே தவணையில் மொத்தமாக வழங்குதல்) மாத பிரீமியம் ரூ.445 (வரி உட்பட) ஆகும்.

இதுவரை எந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுக்காதவர்கள் ஓராண்டு டேர்ம் பிளான் மூலம் அதை ஆரம்பிக்கலாம். அடுத்துவரும் ஆண்டுகளில் அதைத் தொடர்வதன்மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதிரீதியான முழுமை யான பாதுகாப்பை ஏற்படுத்தித் தரலாம். இன்றைய இந்தியா இளைஞர்களால் நிரம்பியிருக்கிறது. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரைக் காக்க ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியம்!