Published:Updated:

உயரும் டேர்ம் இன்ஷூரன்ஸ்களின் பிரீமியம் கட்டணங்கள்? - பாலிசிதாரர்கள் கவனத்துக்கு!

Insurance (Representational Image)
News
Insurance (Representational Image) ( insurance )

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் காப்பீட்டு கோரிக்கையின் மதிப்பு மட்டும் ரூ.11.060.5 கோடி ஆகும். கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பல மரணங்கள்தான் காப்பீட்டு நிறுவனங்களை, பிரீமியம் தொகை அதிகரிக்கும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.

எதிர்பாராத இழப்புகளிலிருந்து நம்மையும் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள காப்பீடுகள் உதவுகின்றன. நம்முடைய தேவை சார்ந்து சந்தையில் பல்வேறு காப்பீடுகள் உள்ளன. அவற்றில் ஆயுள் காப்பீடும் ஒன்று.

ஒவ்வொருவரும் ஆயுள் காப்பீடு எடுப்பது மிக முக்கியம் ஆகும். வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரும்பட்சத்தில் நம் குடும்பத்தினருக்கு இந்த காப்பீட்டு தொகைத்தான் உதவியாக வந்து சேரும். இந்த கொரோனா காலத்தில் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் மருத்துவ செலவுகள் உயர்ந்து வரும் நிலையில் காப்பீடு க்ளெய்ம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் முழு ஆயுள் கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் பிரீமிய தொகையை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் நிதிச் சுமையிலிருந்து தற்காத்துகொள்ள இன்னொரு உலகளாவிய காப்பீட்டு நிறுவனத்தோடு மறுகாப்பீட்டு ஒப்பந்தம் போடும். தற்போது உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமிய தொகையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

உலகளாவிய மறுகாப்பீட்டாளர்கள் 45-50% தொகையை உயர்த்தியுள்ள நிலையில் காப்பீட்டாளர்கள் டேர்ம் பிளான் பிரீமியத்தை 15-30%-தான் உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, ஐ.சி.சி.ஐ.சி ப்ரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்கள் தங்களது டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance) பிரீமியம் தொகையை 10-30 சதவிகிதம் உயர்த்தியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய இரண்டு காப்பீடு நிறுவனங்கள் சராசரியாக 15% பிரீமியம் தொகையை உயர்த்தியுள்ளன. பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகையை 10-15% உயர்த்தியுள்ளது.

மேலும் டாடா ஏ.ஐ.ஏ லைஃப், ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ், மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும் இந்த மாதத்திற்குள் தங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸின் தொகையை உயர்த்த வாய்ப்புள்ளது.

மேலும் இந்த காலாண்டிற்குள் பிற நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் தொகையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Insurance
Insurance

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் டேர்ம் பிளானின் பிரீமிய தொகை அதிகரிக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவலினால் டேர்ம் பிளான் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பல காப்பீடு நிறுவனங்கள் தனது அண்டர்ரைட்டிங் ஸ்டாண்டர்ட்சையும் (underwriting standards) மாற்றி அமைத்துள்ளன.

அதன்படி பள்ளி படிப்பை முடித்தவர்கள் இந்த டேர்ம் காப்பீட்டை பெற இயலாது. அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்; மேலும் 1 கோடி ரூபாய் காப்பீட்டு திட்டம் பெறுவோரின் வருமான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்பொழுது பல காப்பீட்டு நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானை வழங்கி வருகின்றன. மேலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் நகரங்களை முன்னணி (Top) நகரம் மற்றும் முன்னணி அல்லாத (Non-top) நகரம் என பிரிக்கிறது.

அதன்படி காப்பீட்டு நிறுவனங்கள் முன்னணி நகரத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்ச டேர்ம் இன்ஷூரன்ஸூம் சுயதொழில் முனைவோர்களுக்கு 5 லட்ச ரூபாய் டேர்ம் இன்ஷூரன்ஸூம் வழங்கி வருகின்றன.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

இதே டேர்ம் இன்ஷூரன்ஸை முன்னணி அல்லாத நகரங்களில் தொழிலாளர்களுக்கு 3-5 லட்ச ரூபாய்க்கும் மற்றும் சுயதொழில் முனைவோர்களுக்கு 5-8 லட்ச ரூபாய்க்கும் வழங்கி வருகிறது .

தற்போது 1 கோடி ரூபாய்க்கு கீழ் டேர்ம் பிளான் எடுப்போரும் ஹெல்த் செக் அப் செய்யவேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் காப்பீட்டு கோரிக்கையின் மதிப்பு மட்டும் ரூ.11.060.5 கோடி ஆகும். கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பல மரணங்கள்தான் காப்பீட்டு நிறுவனங்களை, பிரீமியம் தொகை அதிகரிக்கும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.