நடப்பு
Published:Updated:

இன்ஷூ ரன்ஸ் பாலிசிதாரர்கள் இனி ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்..!

இன்ஷூ ரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூ ரன்ஸ்

I N S U R A N C E - ஐ.ஆர்.டி.ஐ.ஏ-யின் ஆன்லைன் போர்ட்டல்...

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், vidurawealth.com

காப்பீட்டுச் சேவை குறைபாடு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு வசதியாக காப்பீட்டுத் தீர்ப்பாயம் விதிமுறைகள் 2017-ல் (Ombudsman Rules 2017) மத்திய அரசாங்கம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசி தாரரின் புகாருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தீர்வு தராவிட்டால் அல்லது அந்தத் தீர்வில் அதிருப்தி அடைந்தால், ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நுகர்வோர் விவகாரத்துறையின் குறைதீர்க்கும் பிரிவை அணுகலாம்.

புதிய விதிமுறைகளின்படி, பாலிசிதாரர்களின் புகார் நிலையை ஆன்லைனில் கண்காணிக்க இது உதவுகிறது. மேலும், ஆம்பூட்ஸ்மேன், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஷூ ரன்ஸ்
இன்ஷூ ரன்ஸ்

ஐ.ஆர்.டி.ஐ.ஏ-ன் ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். அதாவது, ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் முறை (ஐ.ஜி.எம்.எஸ்) மூலம் புகாரை https://www.policyholder.gov.in/Report.aspx#-ல் பதிவு செய்யலாம். மின்னஞ்சல் மூலம் complaints@irdai.gov.in என்ற முகவரிக்கு புகரை அனுப்பலாம். கட்டணமில்லா எண் 155255 அல்லது 1800425473-ல் அழைக்கலாம். புகாருடன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-க்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டு மானால், https://www.policyholder.gov.in/uploads/CEDocuments/complaintform.pdf என்கிற படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்!