நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரி... கூடுதல் சுமை..! கவனிக்குமா ஜி.எஸ்.டி கவுன்சில்..?

சி.கேசவன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.கேசவன்

GST

சி.கேசவன், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர்,  ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்

காப்பீடு பாலிசிக்கான பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. பாரம்பர்ய பாலிசிகளுக்கு (Traditional policies) முதலாண்டு பிரீமியத்தில் 4.5% ஜி.எஸ்.டி-யும், இரண்டாம் ஆண்டிலிருந்து 2.25% ஜி.எஸ்.டி-யும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், டேர்ம் பாலிசிகளுக்கு (Pure Term Plans) அனைத்து ஆண்டுகளிலும் பிரீமியத்துக்கு 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.

சி.கேசவன் 
பிசினஸ் டெவலப்மென்ட் 
மேனேஜர், 
 ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்
சி.கேசவன் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர்,  ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்

முழுமையான காப்பீட்டுக்கு அனைத்து ஆண்டுகளிலும் 18% வரி வசூலிப்பது சாதாரண மக்கள் இந்த பாலிசிகளை எடுக்கவிடாமல் செய்கிறது. பணம் திரும்பப்பெறும் திட்டங்களில் பிரீமியம் அதிகமாக இருக்கும்; கவரேஜ் குறைவாக இருக்கும். எனவே, இந்த பாலிசிகளை எடுக்காமல் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் டேர்ம் பாலிசிகளையே பலரும் தேர்வு செய்கின்றனர். டேர்ம் பாலிசியைத் தேர்வு செய்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என நிபுணர்களும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாலிசிகளுக்கு அதிக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவது சரியா?

இப்படிச் செய்வதன்மூலம் அதிக கட்டணம் செலுத்தி குறைவான கவரேஜ் பெறும் திட்டங்களை நோக்கி அரசாங்கமே மக்களை மறைமுகமாகத் தள்ளுகிற மாதிரி இருக்கிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் அடுத்தமுறை கூடும்போது டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான ஜி.எஸ்.டி-யைக் குறைக்கும் என்று எதிர்பார்ப்போம்.