Published:Updated:

கொரோனா காலத்தில் பாலிசி பிரீமியம்... ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி அறிவிப்புகள்!

பாலிசி பிரீமியம்
பிரீமியம் ஸ்டோரி
பாலிசி பிரீமியம்

அனைத்து ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பாலிசி பிரீமியம்... ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி அறிவிப்புகள்!

அனைத்து ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது.

Published:Updated:
பாலிசி பிரீமியம்
பிரீமியம் ஸ்டோரி
பாலிசி பிரீமியம்
கொரோனா வைரஸ் காரணமாக, இரண்டு வகைகளில் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒன்று, ஊரடங்கால் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிக்கிடக்கும் நிலை. மற்றொன்று, வருமான இழப்பு மற்றும் அதன் காரணமாக அவசியச் செலவுகளைச் செய்வதில் தவிக்கும் நிலை.

இந்த பாதிப்பால், பலராலும் சரியான நேரத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியத்தைச் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பிரீமியம் கெடு தேதி நீட்டிப்பு!

இந்தியக் காப்பீட்டுத்துறையின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI), `கொரோனா பாதிப்பு காரணமாக, இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கான கெடு தேதியை பாலிசிதாரர்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும்’ என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. தேவைப்படும்பட்சத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியை 30 நாள்கள் அதிகமாக நீட்டிக்குமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஊரடங்கின்போது காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் இணையம் மூலம் இயங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதையொட்டி பாலிசிதாரர்களுக்குத் தேவையான தகவல்களை அவற்றின் இணையதளத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலமாகவும் முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அனைத்து ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான பிரீமியம் செலுத்துவதற்கான தேதியை மேலும் ஒரு மாதம் நீட்டித்திருக்கிறது. எல்.ஐ.சி அதன் டிஜிட்டல் பேமென்ட் முறையில் பிரீமியம் செலுத்த எந்தக் கூடுதல் சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என அறிவித்திருக்கிறது. மேலும், இணையதளத்தில் பாலிசிதாரர்கள் பதிவுசெய்யத் தேவையில்லை. பாலிசி எண், பிறந்த தேதி போன்ற சில அடிப்படை விவரங்களைக் கொடுத்தால் போதும்.

பாலிசி பிரீமியம்
பாலிசி பிரீமியம்

எல்.ஐ.சி-யின் மொபைல்ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பிரீமியம் செலுத்தலாம்!

பிரீமியம் செலுத்த வழக்கமான நெட் பேங்க்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுடன் பே டிஎம், கூகுள் பே, போன் பே ஆகியவற்றின் மூலமும் பணம் செலுத்த முடியும். ஐ.டிபி.ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளின் கிளைகள் மூலமும் பிரீமியம் செலுத்த முடியும். முன்னணித் தனியார் காப்பீட்டு நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பிரீமியம் கெடு தேதியை நீட்டித்துள்ளன. பாலிசிதாரர்கள் அவர்களின் ஏஜென்ட் அல்லது தொடர்புடைய நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.

யூலிப் பாலிசி

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அதிக வீழ்ச்சியைக் கண்டிருக்கும் நிலையில், பங்குச் சந்தை சார்ந்த யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் யூனிட் மதிப்பும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் இப்போது முதிர்வடையும் யூலிப் பாலிசிகளின் முதிர்வை மே 31 வரை தள்ளிவைக்க காப்பீட்டு நிறுவனங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள பாலிசிதாரர்களின் விருப்பத்தை ஏஜென்ட்டுகள் / தரகர்கள் பெற வேண்டும்.

கொரோனா மரணம்... எல்.ஐ.சி உடனடி இழப்பீடு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்தவர்கள் எல்.ஐ.சியில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது. இந்த இழப்பீடு அரசு அதிகாரிகள் அளிக்கும் பட்டியலின்படி அளிக்கப்பட்டுவருகிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும்...

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை போலவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் பாலிசியை ரத்து செய்துவிடாமல் ஒரு மாதம் கெடு தேதியை நீட்டித்து வழங்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ சொல்லியிருக்கிறது. மேலும், பாலிசிகள் காலாவதியாவதைத் தடுக்க, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களை முன்கூட்டியே தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்புக்கு இழப்பீடு!

`அனைத்து ஆரோக்கிய சஞ்சீவனி (Arogya Sanjeevani) பாலிசிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு வழங்கிய இழப்பீடுகளைக் காப்பீடு நிறுவனங்கள், அவற்றின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியிருக்கிறது. இந்த பாலிசியை, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விநியோகித்துவருகின்றன. இதுவரை 29 நிறுவனங்கள் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசிகளை விநியோகித்துள்ளன. விரும்புபவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்!