Published:Updated:

இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் தள்ளுபடி தந்திரம்! - ஐ.ஆர்.டி.ஏ.ஐ எச்சரிக்கை..!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

ஏதாவது சந்தேகம் வந்தால் நிறுவனத்தின் அருகிலுள்ள கிளையில் விசாரிக்க வேண்டும்..!

பிரீமியத்தில் அதிக தள்ளுபடி, மருத்துவமனைக் கட்டணத்தில் அதிக தள்ளுபடி எனச் சொல்லி பாலிசி எடுக்கச் சொல்லும் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் மற்றும் நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்திய காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தள்ளுபடி பிரீமியத்தில் தருவதாகச் சொல்லி சில போலி இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மற்றும் ஏஜென்டுகள் ஏமாற்றியிருப்பதாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் கவனத்துக்கு வந்திருக்கிறது.இதை அடுத்து அது இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

எனவே, பாலிசி எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்களை அணுகும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யில் பதிவு செய்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பிறகே, எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏதாவது சந்தேகம் வந்தால் அருகிலுள்ள அந்த நிறுவனத்தின் கிளையில் விசாரிக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் தள்ளுபடி தந்திரம்! - ஐ.ஆர்.டி.ஏ.ஐ எச்சரிக்கை..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எந்தக் காரணம் கொண்டும் பாலிசிக்கான பிரீமியத்தை ரொக்கப் பணமாகக் கொடுக்கக் கூடாது. மேலும், ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யிலிருந்து பேசுகிறோம், இந்த பாலிசி இவ்வளவு லாபம் தரும் என்ற அழைப்புகளையும் நம்ப வேண்டாம். காரணம், ஐ.ஆர்.டி.ஏ.ஐ எந்த பாலிசியையும் விற்பனை செய்வதில்லை. மேலும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ பாலிசிதாரருக்குத் தேவையில்லாமல், போன் செய்யாது.