Published:Updated:

பிரீமீயம் ரூ.25, காலம் 6 மாதங்கள்... Sachet பாலிசிகள் - ஓர் அறிமுகம்

Sachet பாலிசி
Sachet பாலிசி

Sachet: இந்த வகையான பாலிசிகள், தற்போது நடைமுறையிலுள்ள சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு (எண்டோவ்மென்ட் திட்டம், மணிபேக் திட்டம், குழந்தைகள் திட்டம், டேர்ம் திட்டம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டம்) மாற்றாகக் கருத முடியாது.

சாஷே கலாசாரம் இன்று சகல இடங்களிலும் வியாபித்திருக்கிறது. நேற்றுவரை பொருள்களை பேக்கிங் செய்ய மட்டுமே பயன்பட்டுவந்த இந்த சாஷே மாடல், இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையிலும் நுழைந்துவிட்டது.

பொதுவாக, இன்ஷூரன்ஸ் என்பது மனிதன் மற்றும் மனிதனின் சொத்துகளுக்கு, இயற்கை மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உருவாகும் அபாயங்களால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் நிதிப் பாதுகாப்புக் கருவி.

இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒருவர் வாங்கும்போது பாலிசியைத் தேர்வு செய்தல், விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல், பிரீமியம் செலுத்துதல், இன்ஷூரன்ஸ் கம்பெனி விண்ணப்பப் படிவத்தை ஆராய்ந்து சரியாக இருக்கும்பட்சத்தில் அனுமதியளித்து பாலிசி பத்திரத்தை வழங்குதல் போன்ற செயல்களுக்கு சில நாள்கள் தேவைப்படுகின்றன.

இவ்வளவு வேலைகளையும் செய்ய இந்தக் காலத்து மில்லினியல் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் சட்டென்று எடுத்துப் பயன்படுத்துவதுபோல தற்போது சாஷே இன்ஷூரன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாஷே பாலிசிகள், குறுகியகால இடைவெளியில் ஏற்படும் அபாயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் கவரேஜ் நிதிப் பாதுகாப்பைத் தருகின்றன. இத்தகைய பாலிசிகளுக்கு பாலிசிதாரர் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை மிகக் குறைவு.

சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் துணைகொண்டு சில க்ளிக் மற்றும் சில வார்த்தைகளை டைப் செய்து எளிதாகவும் விரைவாகவும் வாங்கலாம். விண்ணப்பப் படிவத்தை இங்கு பாலிசிதாரர் பயன்படுத்தவில்லை. பாலிசிகளை வாங்குவதற்கு எளிதாகச் செயல்படக்கூடிய இந்த முறையே சாஷே பாலிசிகளின் வெற்றிக்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

பாலிசி
பாலிசி

இந்த வகையான பாலிசிகள், தற்போது நடைமுறையிலுள்ள சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு (எண்டோவ்மென்ட் திட்டம், மணிபேக் திட்டம், குழந்தைகள் திட்டம், டேர்ம் திட்டம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டம்) மாற்றாகக் கருத முடியாது. ஏனென்றால், இந்த பாலிசி மூலம் ஒருவருக்கு முழுமையான இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்காது.

இந்தச் சிறிய வகையான பாலிசியை முதன்முறையாக வாங்கிய பாலிசிதாரர், தன் வாழ்வில் தோராயமாக ஏற்படக்கூடிய வெவ்வேறு வகையான அபாயங்களைக் கண்டுபிடிக்கிறார். அதற்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பைத் தரக்கூடிய சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பின்னர் வாங்குகிறார்.

எதிர்காலத்துக்கு முழுப் பாதுகாப்பைத் தரும் சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வாங்குவதற்கு சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. சாஷே பாலிசியின் காப்பீட்டுக் காலம் அதிகபட்சம் ஒரு வருடம் வரை இருக்கும். தேவை தொடர்ந்து இருக்குமானால், பாலிசியை ஒவ்வொரு தடவையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது பாலிசிதாரரின் கடமை. ஒரு பாலிசி காலாவதி ஆகும் முன்னரே பாலிசியைப் புதுப்பிக்க வேண்டும்; தவறும் தருணத்தில், அசம்பாவிதம் ஏதும் நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது.

உதாரணமாக, பயணங்களின்போது முதுகில் மாட்டிச் செல்லும் பை, லேப்டாப் பை தொலைந்து போனால் அவருக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும்; இதற்குரிய பிரீமீயம் ரூ.25, பாலிசி காலம் ஆறு மாதங்கள்.

> ரூ.25, ரூ.189-லிருந்து தொடங்கும் சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் முழுமையாக அறிய வழிகாட்டும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > இளைஞர்கள் விரும்பும் சாஷே பாலிசிகள்..! - விரிவான தகவல்கள்..! https://bit.ly/3emK6tD

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

இளைஞர்கள் விரும்பும் சாஷே பாலிசிகள்..! -  விரிவான தகவல்கள்..!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு