Published:Updated:

இளைஞர்கள் விரும்பும் சாஷே பாலிசிகள்..! - விரிவான தகவல்கள்..!

பாலிசி
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிசி

சாஷே பாலிசிகள், குறுகியகால இடைவெளியில் ஏற்படும் அபாயங்களுக்கு நிதிப் பாதுகாப்பைத் தருகின்றன.

து சாஷேக்களின் காலம். பல் விளக்கும் டூத் பேஸ்ட் முதல் எல்லாப் பொருள்களும் சாஷேவில் அடைத்து விற்கப்படும் காலம் இது. பயன்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருப்பதால், இந்த சாஷே கலாசாரம் இன்று சகல இடங்களிலும் வியாபித்திருக்கிறது.

நேற்றுவரை பொருள்களை பேக்கிங் செய்ய மட்டுமே பயன்பட்டுவந்த இந்த சாஷே மாடல், இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையிலும் நுழைந்துவிட்டது. பொதுவாக, இன்ஷூரன்ஸ் என்பது மனிதன் மற்றும் மனிதனின் சொத்துகளுக்கு, இயற்கை மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உருவாகும் அபாயங்களால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் நிதிப் பாதுகாப்புக் கருவி. இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒருவர் வாங்கும்போது பாலிசியைத் தேர்வு செய்தல், விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல், பிரீமியம் செலுத்துதல், இன்ஷூரன்ஸ் கம்பெனி விண்ணப்பப் படிவத்தை ஆராய்ந்து சரியாக இருக்கும்பட்சத்தில் அனுமதியளித்து பாலிசி பத்திரத்தை வழங்குதல் போன்ற செயல்களுக்கு சில நாள்கள் தேவைப்படுகின்றன. இவ்வளவு வேலைகளையும் செய்ய இந்தக் காலத்து மில்லினியல் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் சட்டென்று எடுத்துப் பயன்படுத்துவதுபோல தற்போது சாஷே இன்ஷூரன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இளைஞர்கள் விரும்பும் சாஷே பாலிசிகள்..! -  விரிவான தகவல்கள்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாஷே இன்ஷூரன்ஸ்

தற்போதைய இளைஞர்கள் தாங்கள் செய்ய விரும்பும் வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்ய விரும்புகிறார்கள். மேலும், அந்த வேலையை வேகமாகச் செய்து முடிக்க வேண்டும், வேலையின் முடிவும் தங்களுக்கு உடனடியாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை மனதில்கொண்டு டிஜிட்டல் தளங்களில் செயல்படும் இன்ஷூரன்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. இத்தகைய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பனை செய்கின்றன.

சாஷே பாலிசிகள், குறுகியகால இடைவெளியில் ஏற்படும் அபாயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் கவரேஜ் நிதிப் பாதுகாப்பைத் தருகின்றன. இத்தகைய பாலிசிகளுக்கு பாலிசிதாரர் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை மிகக் குறைவு. சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் துணைகொண்டு சில க்ளிக் மற்றும் சில வார்த்தைகளை டைப் செய்து எளிதாகவும் விரைவாகவும் வாங்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விண்ணப்பப் படிவத்தை இங்கு பாலிசிதாரர் பயன்படுத்தவில்லை. பாலிசிகளை வாங்குவதற்கு எளிதாகச் செயல்படக்கூடிய இந்த முறையே சாஷே பாலிசிகளின் வெற்றிக்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

பாலிசி
பாலிசி

சாஷே இன்ஷூரன்ஸ் - ஒரு கண்ணோட்டம்!

இதுவரை இன்ஷூரன்ஸ் மேல் ஆர்வம் இல்லாத இளைஞர்களை, சாஷே பாலிசியின் எளிதான நடைமுறை, குறைந்த பிரீமியம் போன்ற காரணங்களைச் சொல்லி இன்ஷூரன்ஸ் வாங்குவதற்கு ஊக்குவிக்கலாம். இந்த வகையான பாலிசிகள், தற்போது நடைமுறையிலுள்ள சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு (எண்டோவ்மென்ட் திட்டம், மணிபேக் திட்டம், குழந்தைகள் திட்டம், டேர்ம் திட்டம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டம்) மாற்றாகக் கருத முடியாது. ஏனென்றால், இந்த பாலிசி மூலம் ஒருவருக்கு முழுமையான இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்காது. இந்தச் சிறிய வகையான பாலிசியை முதன்முறையாக வாங்கிய பாலிசிதாரர், தன் வாழ்வில் தோராயமாக ஏற்படக்கூடிய வெவ்வேறு வகையான அபாயங்களைக் கண்டுபிடிக்கிறார். அதற்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பைத் தரக்கூடிய சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பின்னர் வாங்குகிறார்.

பாலிசி
பாலிசி

எதிர்காலத்துக்கு முழுப் பாதுகாப்பைத் தரும் சாதாரண இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வாங்குவதற்கு சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகள் தூண்டுகோலாக இருக்கின்றன.

சாஷே பாலிசியின் காப்பீட்டுக் காலம் அதிகபட்சம் ஒரு வருடம் வரை இருக்கும். தேவை தொடர்ந்து இருக்குமானால், பாலிசியை ஒவ்வொரு தடவையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது பாலிசிதாரரின் கடமை. ஒரு பாலிசி காலாவதி ஆகும் முன்னரே பாலிசியைப் புதுப்பிக்க வேண்டும்; தவறும் தருணத்தில், அசம்பாவிதம் ஏதும் நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாஷே பாலிசி வடிவங்கள்!

`சாஷே பாலிசி’ என்ற பெயர் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்; ஆனால், சாதாரணமாகக் கிடைக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் வடிவத்தில் சில மாற்றங்களுடன் சாஷே பாலிசிகள் கிடைக்கின்றன. இதுபோக, வேறு வகையான ரிஸ்க்குகளால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகளுக்கு இதன் மூலம் நிதிப் பாதுகாப்பு கிடைக்கிறது. சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிதாரருக்கு பயணங்களின்போது முதுகில் மாட்டிச் செல்லும் பை, லேப்டாப் பை தொலைந்து போனால் அவருக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும்; இதற்குரிய பிரீமீயம் ரூ.25, பாலிசி காலம் ஆறு மாதங்கள்.

பாலிசி
பாலிசி

கொசு மூலம் உருவாகும் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா வைரஸ், பிலரியாசிஸ் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும்போது ஆகும் செலவுகளை ஈடுகட்ட க்ளெய்ம் பெறலாம். இதற்கான வருட பிரீமீயம் ரூ.189-லிருந்து தொடங்குகிறது.

`சைக்கிள் இன்ஷூரன்ஸ்’ பாலிசியின்படி சைக்கிள் தொலைந்துபோனாலோ, விபத்தால் தனது வடிவத்தை இழந்து உடைந்துபோனாலோ சைக்கிளின் விலைக்குத் தகுந்தாற்போல க்ளெய்ம் பெறலாம். சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இறந்துபோனாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ ரூ.2 லட்சம் க்ளெய்ம் பெறலாம். இந்த பாலிசிக்கான வருட பிரீமியம் ரூ.225.

ரயிலில் பயணத்துக்கு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும்போது வெறும் 49 பைசா பிரீமீயம் செலுத்தி இன்ஷூரன்ஸ் கவரேஜ் பெறலாம். இத்தகைய பாலிசிதாரர் ரயில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு இறந்துபோனால் ரூ.10 லட்சம் இழப்பீடு பெறலாம். விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டால், ரூ.2 லட்சம் இழப்பீடு பெறலாம். விபத்தால் நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.7.5 லட்சம் க்ளெய்ம் பெற முடியும்.

உடல்நலம் பேண மைதானம் சென்று விளையாடுபவர்கள், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கென்றே பிரத்யேகமாக விளையாட்டு / ஃபிட்னெஸ் இன்ஷூரன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது, எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தால் நிரந்தரமாக உடல் ஊனம் அடைந்தால் இழப்பீடு கிடைக்கும். மேலும், மருத்துவமனை உள்நோயாளியாக இருக்கும் பட்சத்திலும் க்ளெய்ம் பெறலாம். இதற்கான வருட பிரீமீயம் மிகக் குறைவு.

இவ்வாறு வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் ஏற்படும் அபாயங்களால் உருவாகும் நிதி இழப்பை சாஷே இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஈடுசெய்கின்றன. குறுகியகாலத் தேவைக்கு, மிகச் சிறிய பிரீமியம் தொகையை விரும்புபவர்களுக்கு இந்த சாஷே பாலிசிகள் ஏற்றவை!