Published:Updated:

காலாவதி பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி கால அவகாசம்..!

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

இன்ஷூரன்ஸ்

காலாவதி பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி கால அவகாசம்..!

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

பாலிசிதாரர்களின் பிரீமியம் வீணாகி விடக் கூடாது என்பதற்காகவும், பாலிசி யின் பலன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.

அவசர காலத்தில் நமக்கு கைகொடுக்கும் என்பதை உணர்ந்துதான் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம். ஆனால், பாலிசி எடுத்த சிலரால் பிரீமியத்தை நிர்வகிக்க முடிவதில்லை. சில சமயங்களில் எதிர்பாராத காரணங்களால் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தொடர்வதில் சிக்கல் வந்துவிடுகிறது. இதனால் அதுவரை செலுத்திய பிரீமியம் வீணாகிவிட வாய்ப்புண்டு.

காலாவதி பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி கால அவகாசம்..!

இந்த பிரச்னை பாலிசிதாரர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது எல்.ஐ.சி. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் ஏதேனும் காரணத்தால் பிரீமியம் தொகையைச் செலுத் தாமல் நிறுத்தி, பாலிசி காலாவதி ஆகியிருந்தால் அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யூலிப் (ULIP) அல்லாத பாலிசிகள் அனைத் தையும் பாலிசிதாரர்கள் குறைந்த அபராதத் துடன் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது.

எல்.ஐ.சி பாலிசிகள் காலாவதி ஆகியிருந்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்தப்பட்ட முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையில் பிரீமியம் செலுத்தாமல் காலாவதி ஆன பாலிசிகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதுப்பிக்கப்படும் பாலிசிகளுக்கான தாமத கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப் படும் எனவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.

இந்தச் சலுகை 25% முதல் 30% வரை இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. `மைக்ரோ’ காப்பீட்டுத் திட்டங்களுக்கு காலதாமத கட்டணத்தில் 100% தள்ளுபடி உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.