Published:Updated:

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி வழங்கும் சலுகைகள்..!

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

இன்ஷூரன்ஸ்

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி வழங்கும் சலுகைகள்..!

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பலர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர் ஊரடங்கு காரணமாகப் பல பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு பிரீமியத்தை சரிவர செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு எல்.ஐ.சி நிறுவனம் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகை அக்டோபர் 22-ம் தேதி வரை செல்லுபடியாகும். கடைசி பிரீமியம் செலுத்தி ஐந்து வருடத்துக்குள் காலாவதியான பாலிசிகளை எல்.ஐ.சி-யின் இந்தப் புதிய சலுகையின் மூலம் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு பாலிசிகளைப் புதுப்பிக்கும்போது அபராதக் கட்டணம் விதிக்கப்படும். இந்த அபராதக் கட்டணத்திலும் சில சலுகைகளை எல்.ஐ.சி வழங்குகிறது. அதன்படி, பிரீமியத் தொகை ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அபராதத் தொகையில் 20% வரை அதிகபட்சம் ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

பிரீமியத் தொகை ரூ.3 லட்சத்துக்குள் இருந்தால், அபராதத் தொகையில் 25% வரை அதிகபட்சம் ரூ.2,500 தள்ளுபடி வழங்கப்படும். பிரீமியத் தொகை ரூ.3 லட்சத்துக்குமேல் இருந்தால் 30% வரை அதிகபட்சம் ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படும்.

இந்தச் சலுகை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் சில வகை அதிக ரிஸ்க் உடைய பாலிசிகளுக்குப் பொருந்தாது. சிலவகை மருத்துவக் காப்பீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். எல்.ஐ.சி நிறுவனத்தில் நீங்கள் பாலிசி வைத்திருந்து, அது காலாவதியாகி இருந்தால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, பாலிசியைப் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism