Published:Updated:

புதிய பகுதி : ஆயுள் காப்பீடு... பாலிசிப் பத்திரம் தொலைந்துவிட்டால்..?

இன்ஷூரன்ஸ் பற்றிய பதில்கள்..!

பிரீமியம் ஸ்டோரி

FAQ

யுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரனஸ்) எடுக்கும் போதும், எடுத்த பிறகும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கான பதில்கள் இதோ...

ஆயுள் காப்பீடு எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை கட்டாயமா?

‘‘ஒரு சில திட்டங்களில், பாலிசிதாரரின் வயது, பாலிசியின் முதிர்வு ஆண்டுகள், காப்பீட்டுத் தொகை, குடும்பத்தின் மருத்துவ வரலாறு மற்றும் தனிப்பட்ட மனிதரின் மருத்துவத்தன்மையைப் பொறுத்து, பாலிசிதாரர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டி வரலாம்.’’

எந்த மாதிரியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்?

‘‘பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயத்தின் செயல்பாடு ஆகியவற்றைப் பரிசோதிப்பார்கள். ஒரு பாலிசிதாரர் அதிக எடையுடன் இருந்தால், எலெக்ட்ரோ கார்டியோகிராம், சர்க்கரை நோய் சோதனை போன்ற மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படலாம். அதே நேரத்தில், எடை குறைந்த ஒருவருக்கு, மார்பின் எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் பரிசோதனை தேவைப்படலாம்.’’

இன்ஷுரன்ஸுக்கான பாலிசி பிரீமியத் தைக் கட்ட முடியாத நிலையில் பாலிசி என்னவாகும்?

‘‘ஒரு பாலிசி எடுத்து குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு பிரீமியம் கட்டிவிட்டு அதற்குமேல் பிரீமியம் கட்ட முடியாதபட்சத்தில் பாலிசி காலாவதி ஆகிவிடும். இத்தகைய பாலிசிகளை சில ஆண்டுகள் கழித்து பாலிசி பிரீமியம் கட்டும் சூழ்நிலை வந்த பிறகு, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நிலுவை பிரீமியம் மற்றும் அபராதம் கட்டி பாலிசியைச் செயல்பாட்டு கொண்டுவரும் வசதி உள்ளது. இது சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டும் சேர்ந்த எண்டோவ்மென்ட் பாலிசி களுக்குப் பொருந்தும்.’’

சு.ஸ்ரீதரன் Wealthladder.co.in
சு.ஸ்ரீதரன் Wealthladder.co.in

இனிமேல் எப்போதும் பிரீமியம் கட்டமுடியாத சூழ்நிலை உருவானால் பாலிசியின் நிலை என்னவாகும்?

‘‘பாலிசியின் பிரீமியத்தைக் கட்ட முடியாத சூழ்நிலை உருவானால், பாலிசிதாரர் அந்தப் பாலிசியை பெய்ட் அப் (Paidup) பாலிசியாக மாற்ற முடியும். இவ்வாறு மாற்றுவதால், இதுவரைக்கும் கட்டிய பிரீமியத்துக்கு ஏற்ப, பாலிசியின் முதிர்வுத் தொகையின் அளவு மற்றும் கவரேஜ் தொகை குறைக்கப்படும்.’’

ஆயுள் காப்பீட்டு பாலிசியின் சரண்டர் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

‘‘சரண்டர் மதிப்பு பாலிசியின் மொத்த பிரீமியம் செலுத்தும் காலம், பிரீமியம் செலுத்திய காலம் மற்றும் பிரீமியம் செலுத்தாமல் இருந்த காலம் மற்றும் பாலிசியின் முதிர்வுத் தொகை காரணியைப் பொறுத்தே சரண்டர் மதிப்பு கணக்கிடப்படும். பொதுவாக, பாலிசி எடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்யும்போது இதுவரை கட்டிய மொத்த பிரீமியத் தொகையை விடக் குறைவாகவே சரண்டர் மதிப்பு இருக்கும்.’’

ஆயுள் காப்பீட்டு பாலிசி பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா?

‘‘காப்பீடு மற்றும் சேமிப்பு அடிப் படையில் எடுக்கும் பாலிசிகளில் பாலிசிகளின் நிபந்தனைகள் கடன் வழங்க அனுமதித்தால் கடன் வாங்க முடியும். இந்தக் கடன் மதிப்பு, பாலிசியின் இன்றைய மதிப்பீட்டில் சுமார் 75-85 சதவிகிதமாக இருக்கும்.’’

பாலிசி முதிர்வடையும்போது முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

‘‘வழக்கமாக, காப்பீட்டு நிறுவனம் பாலிசியின் முதிர்வுத் தேதிக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே பாலிசிதாரருக்கு முதிர்வுத் தொகையைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்புவார்கள். அந்தக் கடிதத்தில் கையொப்பம் மற்றும் சாட்சி கையொப்பம், பாலிசிப் பத்திரம் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப் படையில், பாலிசியின் முதிர்வுத் தொகை பாலிசிதாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.’’

பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?

‘‘உங்கள் பிரீமியத்தைச் செலுத்த பொதுவாக பாலிசியின் பிரீமியம் செலுத்தும் தேதி யிலிருந்து 30 நாள்கள் வரை சலுகைக் காலம் கிடைக்கும். இந்தச் சலுகைக் காலத்துக்குப் பிறகும் உங்கள் பிரீமியத்தை நீங்கள் செலுத்தவில்லை என்றால், உங்கள் பாலிசி செயலிழந்துவிடும். மேலும், உங்கள் பாலிசியிலிருந்து எந்த நன்மைகளையும் கோர முடியாது.

இருப்பினும், பாலிசி நடை முறைகளின்படி, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களுக்கு உட்பட்டு நீங்கள் கால தாமதமாகக் கட்டிய பிரீமியங்கள் அனைத்தையும் அபராதத்துடன் செலுத்தி பாலிசியைப் புதுப்பிக் கலாம். அப்போது, நீங்கள் மீண்டும் பாலிசியின் நன்மை களைப் பெறத் தொடங்கு வீர்கள்.’’

பாலிசி முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

‘‘ஆயுள் காப்பீட்டு பாலிசியில், அதன் கவரேஜ் தொகையைவிட கட்டும் பிரீமியம் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில், முதிர்வுத் தொகைக்கு வரி கட்ட வேண்டும். மற்றபடி வரி கட்டத் தேவையில்லை.’’

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

பாலிசிப் பத்திரத்தைத் தொலைத்து விட்டால் முதிர்வுத் தொகையை க்ளெய்ம் செய்வது எப்படி?

‘‘பாலிசி பத்திரம் தொலைந்து விட்டால் ஒரு நோட்டரி வக்கீலை அணுகி பாலிசிப் பத்திரம் இழப்பு சான்று வாங்கி அதை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்து பாலிசியின் முதிர்வுத் தொகையை க்ளெய்ம் செய்யலாம்.’’

பாலிசிதாரர் இறக்கும்பட்சத்தில் இழப்பீடு பெற என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

‘‘பொதுவாக, தேவைப்படும் அடிப்படை ஆவணங்கள் இறப்புச் சான்றிதழ், க்ளெய்ம் படிவம் மற்றும் பாலிசி பத்திரம், மருத்துவ உதவியாளரின் சான்றிதழ், மருத்துவமனை சான்றிதழ், வேலை செய்து கொண்டிருந்தால் அந்த நிறுவனத் திலிருந்து ஒரு சான்றிதழ், போலிஸ் விசாரணை அறிக்கை, சில நேரங்களில் பிரேதப் பரிசோதனை அறிக்கை தேவை யிருந்தால் கேட்கப்படலாம். மேலும், இந்த விவரங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளெய்ம் படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும்.’’

ஒரு காப்பீட்டுத் திட்டத்தின் திட்ட விளக்க ஆவணம் (Proposal) மற்றும் வெளிப்பாட்டு (disclosure) ஆவணங்களின் முக்கியத்துவம் என்ன?

‘‘ஒரு பாலிசி எடுக்கும் முன் பாலிசிதாரர் திட்ட விளக்க ஆவணம் (proposal) மற்றும் திட்ட வெளிப்பாட்டு (disclosure) ஆவணங்களைப் பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.

இந்த ஆவணங்களில் பாலிசிதாரர் சரியான தகவல் களை அளிப்பது மிகவும் முக்கியமாகும். எனவே, ஏதேனும் தவறான தகவல்களை அளிக்கும் பட்சத்தில் பாலிசி க்ளெய்ம் செய்யும்போது, பாலிசியின் காப்பீட்டு தொகையை மறுக்க வழிவகுக்கும்.’’

இன்ஷூரன்ஸ் பாலிசியை அடமானம் வைத்து வாங்கிய கடனைக்கொண்டு வீட்டை வாங்கினால் அல்லது வீடு கட்டினால், திரும்பக் கட்டும் அசல் தொகை மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை கோர முடியுமா?

‘‘பாலிசியை அடமானம் வைத்து கடன் வாங்கும் தொகையைக் கொண்டு வீடு வாங்கினால், வீடு கட்டினால் அல்லது வீட்டைப் புதுப்பித்தால், இதற்கான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், பாலிசிகளுக்கு ஈடாக எடுக்கப் பட்ட கடன்களுக்கான வட்டி ‘வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்’ என்ற தலைப்பின்கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது.’’

பாலிசியை வாங்கும் முன்...

பாலிசியை வாங்க முடிவு செய்வதற்கு முன்பு எந்தெந்த விஷயங்களையெல்லாம் பார்க்க வேண்டும்?

‘‘பாலிசியின் தன்மை என்ன, உத்திரவாத வருமானம் கிடைக்கிறதா அல்லது பங்குச் சந்தை சார்ந்த வருமானமா என்பதை நீங்கள் சரிபார்த்து உங்களின் தேவைக்கேற்ப வாங்க வேண்டும். இவை தவிர, காப்பீட்டின் காலம், பிரீமியம் செலுத்த வேண்டிய காலம், பிரீமியம் தொகை என்ன என்றும் பிரீமியம் கட்ட முடியாத தருணத்தில் பாலிசியை புதுப்பிக்க என்ன வழி முறைகள் என்றும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும், பாலிசியின் கட்டணங்கள் மற்றும் பாலிசியில் மூலம் கடன் வாங்கும் வசதி உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.”

பிட்ஸ்

சீனத் தொழிலதிபர் ஜாக் மா, பேடிஎம்மில் செய்திருந்த முதலீட்டில் 30 சதவிகிதத்தை விற்க யோசித்து வருகிறது. பேடிஎம்மில் ஜாக் மா செய்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு 4.8 பில்லியன் டாலர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு