Published:Updated:

மோட்டார் இன்ஷூரன்ஸ்... சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய 10 அம்சங்கள்!

மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

உங்கள் வாகனத்துக்கு பாதுகாப்பு!

மோட்டார் இன்ஷூரன்ஸ்... சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய 10 அம்சங்கள்!

உங்கள் வாகனத்துக்கு பாதுகாப்பு!

Published:Updated:
மோட்டார் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் இன்ஷூரன்ஸ்

MOTOR INSURANCE

நாம் நம்முடைய வாகனத்தைக் கண்ணும் கருத்துமாக எப்படிப் பார்த்துக்கொள்கிறோமோ, அதே போல நம்முடைய வாகனத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்பாராத சூழல்களில் வாகனத்தால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் சிறந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வாகனக் காப்பீடு என்பது நம்முடைய நிதிப் பாதுகாப்புக்கும் நம்முடைய வாகனத்துக்குச் செலவாகும் தொகையையும் ஈடு கட்ட உதவியாக இருக்கும். ஆனால், சரியான வாகனக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

அதற்கு முக்கியமான 10 விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. பாதுகாப்பற்ற நிர்ணய மதிப்பு

பாதுகாப்பற்ற நிர்ணய மதிப்பு என்பது நம்முடைய வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு. வாகனம் திருட்டுப்போனாலோ விபத்துக்கு உள்ளாகி சேதாரமானாலோ நம்மால் அதிகபட்சம் பெற முடிகிற தொகை ஆகும். இந்த மதிப்பு என்பது வாகனத்தின் உற்பத்தியாளர் பட்டியலிட்டுள்ள விற்பனை விலையிலிருந்து வாகனத்தின் சேதாரத்தைக் கழித்த பிறகு வரும் தொகையாகும்.

ஒருவேளை, கார் புதியதல்ல எனில், அதன் மதிப்பு குறைக்கப்படும். காப்பீடு நிறுவனம் இந்த மதிப்பு குறைப்புக்கான சில வழிமுறைகளை வகுத்திருக்கும். அதன்படி, வாகனத்தின் தற்போதைய மதிப்பு என்பது கணக்கிடப்படும். வாகனம் ஐந்து வருடங்கள் பழையது எனில், இந்தத் தொகை வாகனத்தின் நிலையைப் பொறுத்து காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு எடுத்தவரும் இணைந்து சமரச ஒப்புதலின்படி நிர்ணயிக்கப்படும்.

2. இன்ஷூரன்ஸ் கவரேஜ்

இது இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன. மூன்றாம் நபர் கவரேஜ் இது நம்முடைய வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்பை காப்பீடு செய்வதாகும். உதாரணத் துக்கு நம்முடைய வாகனம் விபத்துக்குள்ளாகி யாரேனும் உயிரிழந்து இருந்தால், நீதிமன்றம் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடும். உரிமையாளரிடமிருந்து பாதிக்கப் பட்ட குடும்பத்துக்கு அந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நம்முடைய வாகனக் காப்பீடு திட்டத்தில் மூன்றாம் நபர் காப்பீடு என்ற பகுதியிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும்.

இரண்டாவது, வாகன உரிமை யாளரின் விருப்பப்படி எடுத்துக் கொள்ளப்படும் சுய பாதுகாப்புக் காப்பீடாகும். அது விபத்து, திருட்டு போன்ற சமயங்களில் நம்முடைய வாகனத்துக்கான பழுது செலவு மற்றும் நம்முடைய இழப்புக்கான செலவுகளைக் காப்பீடு செய்வதாகும். தீ விபத்து, வெடி விபத்து, கலவரம், வேலைநிறுத்தம் அல்லது வேறு ஏதேனும் தீவிரவாதச் செயல், இயற்கைச் சீற்றம் போன்ற நிகழ்வு களால் ஏற்படும் இழப்புகளை இந்தக் காப்பீட்டுத் திட்டம் கவரேஜ் செய்யும்.

3. கூடுதல் சலுகைகள்

இது கூடுதலாகச் செலுத்தும் பிரீமியம் மூலம் பெறப்படும் கூடுதல் சலுகைகள் ஆகும். இந்தக் கூடுதல் சலுகைகள் நமக்குக் கூடுதல் பலன் களைத் தரக்கூடியது. உதாரணமாக, இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகும்போது அதனுடைய மதிப்பு குறையும். வாகனக் காப்பீட்டில் கூடுதலாக இன்ஜினுக்கும் கவரேஜ் எடுத்திருந்தால் இன்ஜினில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யும் செலவு இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும். மேலும், 24/7 சாலை அசிஸ்டன்ஸ் உதவியும் வழங்கப்படும். இதுபோல, நமக்குக் கூடுதல் சலுகைகள் தேவை எனில், காப்பீடு நிறுவனத்திடம் கூடுதல் பிரீமியம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ஆதித்ய சர்மா  பிசினஸ் ஹெட் - மோட்டார், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்.
ஆதித்ய சர்மா  பிசினஸ் ஹெட் - மோட்டார், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்.

4. எவற்றுக்கெல்லாம் கவரேஜ் கிடையாது

வாகனக் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியது நம்முடைய கடமையும் உரிமையும் ஆகும். அதாவது, இந்தக் காப்பீட்டில் எவற்றுக்கெல்லாம் கவரேஜ் உண்டு எவற்றுக்கெல்லாம் கிடையாது என்ற விவரங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் வாகனக் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். காப்பீடு எடுப்பதற்கு முன்னே தேவையான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

5. காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்

காப்பீடு நிறுவனம் எந்தெந்த வாகன பரிசோதனை நிலையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எந்தெந்த வாகனச் சேவை நிறுவனங்களுடன், மையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களில் நாம் பழுது பார்ப்பது, சேவை பெறுவது காப்பீட்டுக்கான கவரேஜ் தொகையை எளிதாகவும் விரைவாகவும் க்ளெய்ம் பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

6. க்ளெய்ம் பெறும் வசதிகள்

காப்பீட்டு கவரேஜ் க்ளெய்ம் பெறுவதை எளிதாகவும் விரைவாகவும் மாற்றுவதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. மொபைல் செயலிகள் மூலம் இருந்த இடத்திலிருந்தே நாம் நம்முடைய காப்பீட்டுக்கான க்ளெய்ம் பெற முடியும். இந்த வசதிகள் மூலம் நம்முடைய பழுதான விபத்துக்கு உள்ளான வாகனத்தின் புகைப்படங் களையும் வீடியோக்களையும் எடுத்து செயலிகள் மூலம் பதிவேற்றம் செய்து இணையம் மூலமாகவே நமக்கான க்ளெய்முக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், க்ளெய்ம் தொகையும் நம்முடைய கணக்குக்கு இணையம் மூலமாகவே வழங்கப்படும். சில நிமிடங் களிலேயே இந்தப் பரிவர்த்தனையை நிகழ்த்த முடியும். இதுபோன்ற தொழில் நுட்ப வசதிகளைக் காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறதா என்பதைப் பார்த்து அவற்றைப் பயன்படுத்தி பலன் அடையத் தெரிந்துகொள்ள வேண்டும்.

7. காப்பீட்டுத் திட்டத்தின் பிராண்ட் மதிப்பு

நம்முடைய வாகனத்தின் பிராண்டுக்கான மதிப்பையும் நம்பிக்கையையும் நாம் எப்படிக் கருத்தில் எடுத்துக்கொள் கிறோமோ, அதேபோலவே நம்முடைய வாகனத்தின் காப்பீட்டுக்கான பிராண்ட் மதிப்பையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு நல்ல பிரபலமான நன்மதிப்பு பெற்ற நிறுவனம் வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களும் நல்ல மதிப்புடன் இருக்கும். எனவே, விலை குறைவாகக் கிடைக்கிறது என்று பாலிசித் திட்டங்களை தேர்ந்தெடுக்காமல் நல்ல மதிப்புடைய விரைவாகவும் எளிதாகவும் க்ளெய்ம் தரக்கூடிய மிகவும் மதிப்புகொண்ட பிராண்ட் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றிடம் காப்பீட்டுத் திட்டங்களை எடுப்பது நன்மை தரும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்களின் கருத்துகள், பின்னூட்டங்கள் சேவை குறித்த கருத்துகள் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

8. க்ளெய்ம் கழிவுகள்

நம்முடைய வாகனக் காப்பீட்டுத் திட்டத்தில் க்ளெய்ம் பெறும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை நம்முடைய சொந்த செலவில் இருந்து வழங்க வேண்டி வரலாம். இந்தத் தொகையானது 1500சிசி-க்குக்கீழே உள்ள வாகனங்களுக்கு ரூ.1,000 எனவும் அதற்குமேல் சிசி பவர் கொண்ட வாகனங்களுக்கு ரூ.2,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அந்தக் கழிவுத் தொகையை அதிகரித்துக் கொள்வதற்கான வசதியும் உண்டு. அதன்மூலம் நாம் செலுத்தும் பிரீமியம் தொகையைக் குறைக்க முடியும். ஆனால், க்ளெய்ம் தொகையைப் பொறுத்தவரை, நமக்கு சாதக மான வகையில் தேர்வுகளை எடுப்பது சரியானதாக இருக்கும்.

மோட்டார் இன்ஷூரன்ஸ்
மோட்டார் இன்ஷூரன்ஸ்

9. காப்பீட்டைப் புதுப்பித்தல்

காப்பீட்டுத் திட்டங்கள் ஓராண்டுக்கானவை என்பதால், ஒவ்வொரு வருடமும் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய சூழலில் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பித்தலானது மிகவும் எளிதானதாக மாறி விட்டது. காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ, மொபைல் செயலி மூலமாகவோ, ஏஜென்டுகள் அல்லது டீலர்கள் மூலமாகவோ, நம்மால் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். காப்பீடு புதுப்பித்தலில் காப்பீட்டு நிறுவனம் எந்த அளவுக்கு முன்னேற்பாடாக விளங்குகிறது என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.

10. நோ க்ளெய்ம் போனஸ்

குறிப்பிட்ட காலத்தில் சரி யாகக் காப்பீட்டுத் திட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் காப்பீடு காலத்தில் க்ளெய்ம் பெறாதவர் களுக்குக் காப்பீட்டுத் நிறு வனங்கள் வழங்கும் தள்ளுபடி தான் இந்த நோ க்ளெய்ம் போனஸ். பாலிசி காலத்தில் எந்தவித க்ளெய்மும் பெறாமல் இருந்தால் ஒவ்வொரு வருடமும் நம்முடைய போனஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தள்ளுபடி 20-50% வரை இருக்க வாய்ப்புள்ளது. எத்தனை வருடங்கள் நாம் க்ளெய்ம் செய்யாமல் இருக்கிறோமோ, அதைப் பொறுத்து இந்தத் தள்ளுபடி சதவிகிதம் மாறுபடும். இது நம்முடைய சொந்தக் காப்பீடு மீதான பிரீமியத்தில் தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை, நாம் புதிய வாகனம் வாங்குவதாக இருந்தால் நம்முடைய பழைய வாகனத்தில் இருக்கும் சேமிக்கப்பட்ட நோ க்ளெய்ம் போனஸ் தொகையை புதிய காருக்கு மாற்றிக் கொள்ள முடியும். வாகனத்தில் ஐந்து வருடங்களுக்கு எந்த க்ளெய்மும் பெறாமல் இருந்தால், அந்தப் பழைய காரை மாற்றி புதிய கார் வாங்கும்போது நம்முடைய புதிய காருக்கான காப்பீடு மீது 50% தள்ளுபடி பெற முடியும்.

மூன்றாம் நபர் காப்பீடு அவசியம்!

சாலை விபத்துகள் நடப்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது நம்முடைய வாகனத்துக்கும் பயணிப்பவர்களுக்கும் எதிர்பாராத விபத்து காரணமாக சேதாரம் உள்ளாக வாய்ப்புள்ளது. எனவேதான், மூன்றாம் நபர் காப்பீடு என்பது வாகனங்களுக்கு எடுக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மூன்றாம் நபர் காப்பீடு என்பது நம்முடைய வாகனத்துக்கோ நமக்கோ சேதாரம் ஆகும்போது அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவாது. எனவே, அதற்கென நாம் தனியாகக் காப்பீடு எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதன்மூலம் எதிர்பாராத இழப்புகளைத் தவிர்க்க முடியும். விபத்துக்குள்ளான வாகனத்தைச் சரிசெய்யும் செலவுகளையும் காப்பீட்டின்மூலம் மேற்கொள்ள முடியும்.!

பிட்ஸ்

ங்கம் விலை உச்சத்தைத் தொட்டு, இப்போது சற்று ஏற்ற இறக்கமாக இருப்பதால், கடந்த நவம்பரில் மட்டும் ரூ. 141 கோடிக்கு முதலீடு திரும்ப எடுக்கப்பட்டு உள்ளது!