Published:Updated:

ஹெல்த் இன்ஷூ ரன்ஸ்... சிகிச்சை காலத்தில் இறந்தால் இழப்பீடு கிடைக்குமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

Q & A - கேள்வி பதில் - நாமினி - வாரிசு... யாருக்குக் கிடைக்கும்?

சிவா, சென்னை - 13

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் நிலையில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை யின்போது அவர் இறந்துவிட்டால் சிகிச்சைக்கான செலவு இழப்பீடாகக் கிடைக்குமா, அந்தத் தொகை யாருக்குப் போய்சேரும்... நாமினிக்கா, வாரிசுகளுக்கா?

அனிதா மோகன், நிதி ஆலோசகர், www.investmentsolution.co.in

“நீங்கள் சொல்கிற மாதிரியான ஓர் ஏற்பாடு மருத்துவக் காப்பீட்டுக் திட்டத்தில் கிடையாது. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் சில திட்டங்களில், விபத்து ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார் எனில், கவரேஜ் தொகையை அவர் நியமித்த நாமினிக்கு வழங்குகிறது.

அந்த நாமினி அவரின் துணைவர் (கணவர்/ மனைவி), மகன், மகள், உறவினர், நண்பர் என யாராக வேண்டு மானாலும் இருக்கலாம். அவர்களுக்கு முழு கவரேஜ் தொகை அளிக்கப்படும். இந்த அம்சம் அனைத்துத் திட்டங் களிலும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.”

க.மணிமாறன், அம்பத்தூர்

நான் சென்னை புறநகரில் வீட்டுமனை ஒன்று வாங்கப் போகிறேன். அந்த மனையில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது, எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்க்க வேண்டும்?

டி.ஜீவா, வழக்கறிஞர்

“சொத்து குறித்த பரிமாற்றங்களை அறிய சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் (பத்திரப் பதிவு) அலுவலகத்தில் வில்லங்கச் சான்று கோரி மனு செய்து அறிந்துகொள்ளலாம். குறைந்தது 20 ஆண்டுகளுக் காவது வில்லங்கம் பார்க்க வேண்டும்.

தாய்ப்பத்திரம் முதலிய னவும் வில்லங்கப் பதிவில் வரும்படி வாங்கிப் பார்ப்பது நல்லது. இவை தவிர, அந்தச் சொத்தில் வேறு யாருக்காவது உரிமை இருக்கிறதா, அவர்கள் சொத்து விற்க சம்மதிக்கிறார்களா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், தேர்ந்த வழக்கறிஞ ரிடம் சட்ட ஆலோசனை பெறுவதும் நன்று.”

அனிதா மோகன்,  டி.ஜீவா, த.முத்துகிருஷ்ணன்
அனிதா மோகன், டி.ஜீவா, த.முத்துகிருஷ்ணன்

சீனிவாசன், கோவை

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். என் வயது 61. முதலீட்டுக் காலம் ஏழு ஆண்டுகள். எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் முதலீடு செய்ய வேன்டும்?

த.முத்துகிருஷ்ணன், சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்

“உங்கள் வயது மற்றும் முதலீட்டுக் காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், உங்களுக்கு ஈக் விட்டி ஹைபிரிட் ஃபண்டுகள் தான் பொருத்த மானதாக இருக்கும். உங்களின் முதலீட்டுத் தொகையை எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி & பாண்ட் ஃபண்டுகளில் சமமாகப் பிரித்து முதலீடு செய்து வரவும்.”

லதா முருகன், புதுக்கோட்டை

ஒரு நிறுவனம் போனஸ் பங்குகள் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த இலவசப் பங்கு லாபகரமாக இருக்குமா?

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிச்சர்ச் அனலிஸ்ட்

“ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளருக்கு/பங்கு தாரருக்கு இலவசமாகக் கூடுதல் பங்குகள் வழங்குவது போனஸ் பங்குகள் எனப்படும்.

போனஸ் பங்குகளை வழங்குவது பங்குதாரர் களுக்கு நிறுவனத்தின் லாபத்தை விநியோகிப்பதற் கான ஒரு வழியாகும். இதனால் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு அதிகரிக் கும். நிறுவனத்துக்கு நல்ல தரக்குறியீடு வழங்கப்படும். பொதுவாக, போனஸ் பங்கு களை வழங்கும் நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாக இருக்கும். எனவே, அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது நீண்டகாலத்தில் லாபகரமாக இருக்கும்.”

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், அருள்சிவம், வி.தியாகராஜன்
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், அருள்சிவம், வி.தியாகராஜன்

வி.சேகர், பாளையங்கோட்டை

கடந்த பத்தாண்டுகளாக எண்டோவ்மென்ட் பாலிசி ஒன்றில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரீமியம் கட்டி வருகிறேன். அண்மையில் வீடு மாறும்போது, அந்த பாலிசிக்கு உரிய டாக்குமென்ட்டை எங்கோ தவறவிட்டுவிட்டோம். பிரீமியம் கட்டிய ரசீது இருக்கிறது. இதை வைத்து வேறு டூப்ளிக்கேட் பாலிசி வாங்க முடியுமா? அதற்கான நடைமுறை என்ன?

அருள்சிவம், ஆயுள் காப்பீடு ஆலோசகர், சேலம்

“டூப்ளிகேட் பாலிசி பத்திரம் வாங்க, பாலிசி பத்திரம் எந்தச் சூழ்நிலையில் காணாமல் போனது என்பதை கிளை மேலாளருக்கு விண்ணப்பக் கடிதம், பாலிசி பணம் கட்டிய ரசீது, ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகிய வற்றுடன் எந்தக் கிளையில் பாலிசி எடுத்தீர்களோ, அந்தக் கிளையில் சம்பந்தப்பட்ட துறையில் கொடுக்க வேண்டும். அவர்கள் டூப்ளிகேட் பாலிசிப் பத்திரம் வாங்கத் தேவையான விண்ணப்பப் படிவங்களைத் தருவார்கள்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ரூ.100 பத்திரத்தில் டைப் செய்து, பாலிசி எடுத்திருக்கும் நிறுவனத்தின் இரண்டு முகவர்கள் சாட்சி கையெழுத்திட வேண்டும். பிறகு அட்வகேட் நோட்டரி யிடம் கையொப்பம் வாங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் அதற்குரிய கட்டணத்தைக் கட்டச் சொல்வார்கள். சிலநாள்கள் கழித்து டூப்ளிகேட் பாலிசி பத்திரம் கொடுப்பார்கள். பாலிசிப் பத்திரத்தை பத்திரமாக வைக்க வேண்டும் இல்லையெனில் பண விரயம், நேர விரயம் ஆகும்.”

அண்ணாதுரை, மதுரவாயல், சென்னை

ரூ.5 லட்சம் கல்விக் கடன் வாங்கிப் படித்தேன். இப்போது வேலையில் சேர்ந்துவிட்டேன். அடுத்த மாதம் முதல் இந்தக் கடனைக் கட்ட உள்ளேன். திரும்பக் கட்டும் கல்விக் கடனுக்கு ஏதாவது வரிச் சலுகை உண்டா?

வி.தியாகராஜன், ஆடிட்டர்

“கடன் தொகையை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்போது, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டித் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80E-ன்படி தங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

இதற்கு எந்த அதிகபட்ச தொகை வரைமுறையும் கிடையாது. இந்த வருமான வரிச் சலுகையை, கடனை எடுத்து திரும்பச் செலுத்து பவர், அதாவது தந்தை அல்லது மகன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வருமான வரிச் சலுகையை, கடனைத் திரும்பச் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து எட்டு ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரும்பச் செலுத்தும் கடனின் அசல் தொகைக்கு வருமான வரி விலக்கோ, கழிவோ கிடையாது. வட்டித் தொகைக்கு மட்டுமே உண்டு.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com