Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 6 புதிய ரைடர் பாலிசிகள்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 6 புதிய ரைடர் பாலிசிகள்..!

சந்தைக்குப் புதுசு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த திட்டங்களில் ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ள, 6 புதிய ஹெல்த் ரைடர் பாலிசிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தமது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களான ஆக்டிவ் ஹெல்த், ஆக்டிவ் அஸ்யூர், ஆக்டிவ் கேர் போன்ற திட்டங்களில் சுலபமாக இணைக்கும் ஆறு புதிய ரைடர் பாலிசிகளை அறிமுகம் செய்துள்ளது.

ஹெல்த்  இன்ஷூரன்ஸ்... 6  புதிய  ரைடர்  பாலிசிகள்..!

ரைடர் பாலிசிகள் என்பவை முதன்மையாக எடுக்கும் பாலிசிகளுடன் கூடுதல் நன்மைகளைத் தரும் துணை பாலிசிகள் ஆகும். இந்த ரைடர் பாலிசிகளைப் பெற அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை என்றாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் பலன் அளப்பறியதாக இருக்கும்.

சிகிச்சையின்போது மருத்துவ உபகரணங்கள் அல்லாத பிற செலவுகளுக்கான கட்டணம், அதிகரிக்கும் மருத்துவச் செலவு மற்றும் பணவீக்கத்தைச் சமன் செய்யும் வகையில் காப்பீட்டை ஆண்டுதோறும் உயர்த்தும் வசதி இந்தத் திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தடுப்பூசிகளுக்கான காப்பீடு, கேன்சர் சிகிச்சைக்கு கூடுதல் காப்பீடு, விபத்து காப்பீடு வசதியும் இதில் உள்ளது. ஏற்கெனவே உள்ள வியாதிகளுக்கான காத்திருப்புக் காலத்தைக் குறைக்கும் வசதியும் இதில் உண்டு.

வீட்டிலிருந்தபடியே தொலைபேசி மூலம் சிகிச்சை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை இந்த ரைடர் பாலிசி எடுத்துக்கொள்வதன் மூலம் வாடிக்கை யாளர்கள் பெறலாம்.

பாலிசி எடுப்பவர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப ரைடர் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது.

ஆதித்ய பிர்லா காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய ரைடர் பாலிசிகளைத் தமது காப்பீட்டில் இணைத்துக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism