பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சந்தைக்குப் புதுசு! : தவணையில் பிரீமியம் செலுத்தலாம்! - காப்பீடு எடுப்பவர்கள் கவனத்துக்கு..!

காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
காப்பீடு

லிபர்ட்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘கிரிட்டிக்கல் கனெக்ட்’ என்ற ஹெல்த் பாலிசியை வெளியிட்டுள்ளது.

ந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள முதலீட்டு, காப்பீட்டுத் திட்டங்கள் சில...

ஆக்டிவ் இன்கம் பிளான்!

எடெல்வைஸ் டோக்கியோ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘ஆக்டிவ் இன்கம் பிளான்’ என்ற திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதை, பிறந்த குழந்தை முதல் 99 வயது வரை எடுத்துக்கொள்ளலாம். 75, 85, 95 ஆகிய வயதுகளில் நிச்சய வருமானம் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் போனஸ் ஆப்ஷனும் உண்டு. தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து இந்த பாலிசியை எடுக்கலாம்.

காப்பீடு
காப்பீடு

கிரிட்டிக்கல் கனெக்ட் இன்ஷூரன்ஸ்!

லிபர்ட்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘கிரிட்டிக்கல் கனெக்ட்’ என்ற ஹெல்த் பாலிசியை வெளியிட்டுள்ளது. இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசி, 60 நோய்களுக்கு க்ளெய்ம் செய்யும்படி அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புதிய திட்டம!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஆல்பா லோ வால் 30 இ.டி.எஃப் (ICICI Prudential Alpha Low Vol 30 ETF) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிஃப்டி ஆல்பா லோ வாலட்டிலிட்டி 30 இண்டெக்ஸில் (Nifty Alpha Low Volatility 30 Index) இடம்பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

காப்பீடு
காப்பீடு

கேரன்டீடு ஃபியூச்சர் பிளான்!

பி.என்.பி மெட்லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், `பி.என்.பி கேரன்டீடு ஃபியூச்சர் பிளான்’, `மீரா மெடிக்ளெய்ம் பிளான்’ மற்றும் `பி.என்.பி மெட்லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினம் ப்ளஸ்’ ஆகிய மூன்று இன்ஷூரன்ஸ் திட்டங்களை வெளியிட்டிருக்கிறது. இதில் கேரன்டீடு ஃப்யூச்சர் பிளான், வருடாந்தர பிரீமியம் தொகை மதிப்பில் 103% முதல் 245% வரை நிச்சய வருமானம் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலிசியுடன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பலன்களும் சேர்ந்து கிடைக்கும்.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் ‘ஹெல்த் கார்டு’!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘ஹெல்த் கார்டு’ என்ற பிரிவுக்கு பிரீமியம் தவணையில் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.12,000-க்குமேல் பிரீமியம் செலுத்துபவர்கள் இனி மாதந்தோறும், ரூ.6,000-க்கு மேல் எனில், காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒரு முறையும் நீண்டகாலத்துக்கு எனில், ஆண்டுக்கு ஒரு முறையும் பிரீமியம் செலுத்தலாம்.