Published:Updated:

ஆன்லைன் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மோசடி

Published:Updated:
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

அக்‌ஷய் தந்த், நியமன ஆக்சுவரி, கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்

டிஜிட்டல் தொழில்நுட்ப மானது இந்தியப் சந்தைப் படுத்துதல் துறையை முற்றிலும் மாற்றியிருக்கிறது. ஆயுள் காப்பீட்டு முகவர்கள் அல்லது வங்கிக் கிளைகள் மூலமாக நீண்ட காலமாகப் பாரம்பர்ய வழிமுறைகளில் காப்பீட்டுத் திட்டங்கள், விநியோகிக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக, பாரம் பர்ய வழிகளைத் தாண்டி இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வாங்குவது அதிகரித்து வருகிறது.

அக்‌ஷய் தந்த் 
நியமன ஆக்சுவரி, கனரா ஹெச்.எஸ்.பி.சி 
ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்
அக்‌ஷய் தந்த் நியமன ஆக்சுவரி, கனரா ஹெச்.எஸ்.பி.சி ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்

ஆன்லைன் மூலம் ஆயுள் காப்பீட்டு பாலிசி

இந்த மாற்று முறையான ஆன்லைன் மூலம் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இந்த முறையில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக உள்ளது. அதிக அலைச்சல் இல்லாமல், இருந்த இடத்திலிருந்தே பாலிசிகளை எடுக்க முடிகிறது. மேலும், இணையதளங்கள், பல்வேறு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எளிதாக மதிப்பிடு கிறது; பல்வேறு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டுக்காட்டுகிறது. இதன் மூலம் ஒரு சிறந்த பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது.

இருப்பினும், ஆன்லைன் மூலம் இன்ஷூ ரன்ஸ் எடுப்பவர்கள் தேவையற்ற பாலிசியை எடுக்கவும், மோசடியில் சிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆன்லைன் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பாலிசி எடுக்கப்போகும் நபர் போதுமான அளவுக்கு கவனமாக இல்லாவிட்டால் அவர் எளிதில் குழப்பமடையக்கூடும்; இறுதியில் தவறான முடிவை எடுக்கலாம் அல்லது மோசடியில் சிக்கலாம். ஆன்லைன் மோசடி செய்பவர்களிடம் மாட்டி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கக்கூடநேரிடும்.எனவே, ஆன்லைன் மூலம் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும்போது சில அம்சங்களை மனதில்கொள்வது மிக முக்கியமாகும்.

நம்பகத்தன்மை மிக முக்கியம்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொந்த இணையதளம் அல்லது இணைய ஒருங்கிணைப் பாளர்கள் (Web Aggregators) அல்லது விநியோகஸ்தர்கள் மூலமாக மட்டுமே ஆன்லைன் மூலம் ஆயுள் காப்பீட்டு பாலிசி களை வாங்க வேண்டும். இவர்கள் நம்பகமான வர்களாக இருப்பது மிக முக்கியம். இவர்கள் இந்தியக் காப்பீட்டுத் துறையை நெறிப்படுத்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பிடம் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

உங்களின் மற்ற ஆன்லைன் ஷாப்பிங் போல் அல்லாமல், தெரியாத இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது போலியாக பாலிசி எடுப்பதற்கு ஒப்பாகும். இதனால், பண இழப்பு ஏற்படுவதுடன், அவசரக் காலத்தில் இழப்பீடு கோரும்போது போலியான பாலிசி எனத் தெரிய வந்தால், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், நிம்மதியும் பறிபோகும்; இழப்பீடும் கிடைக்காது. அதாவது, உங்களுக்குக் காப்பீட்டுத் திட்டத்தைப்போல் தோன்றும் பத்திரம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் உங்களுக்குத் தரப் பட்டது போலியான பாலிசியாக இருக்கும். ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு ஏஜென்ட் மூலம் பிரீமியம் கட்டினாலும், ஏதாவது ஒரு நிறுவனம் மூலம் ஆன்லைன் வழியாக பிரீமியம் கட்டினாலும், உங்களுக்கான பாலிசிப் பத்திரம் காப்பீட்டு நிறுவனம் மூலம்தான் வர வேண்டும்.

மோசடி நிறுவனங்கள் உஷார்

மேலும், உங்களுக்கு வரும் மெயில் தகவல்கள், எஸ்.எம்.எஸ்கள் எல்லாம் அந்தக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்திடமிருந்துதான் வர வேண்டும். ஏஜென்டுகள் அல்லது விநியோகஸ்தர்கள், தனிப்பட்ட நிறுவனங்களின் மெயில் ஐ.டி-கள், போன் நம்பர்கள் மூலம் தகவல் வந்தால், அது போலியான பாலிசி என்பதை அறிந்து உஷாராகிவிட வேண்டும். இல்லையெனில், நீங்கள் தொடர்ந்து பிரீமியம் கட்டி வருவீர்கள். இழப்பீடு கோரிக்கை வைக்கும்போதுதான், உங்களுக்கு விநியோகிக்கப்பட்டது போலி பாலிசி, அந்த நிறுவனமும் போலி என்கிற தகவல் தெரியவரும்.

மேலும், நீங்கள் பாலிசி எதுவும் எடுக்காத நிலையில் உங்களுக்கு காப்பீட்டு பாலிசியை விநியோகிப்பதாக வரும் மெயில்கள், எஸ்.எம்.எஸ்களுக்கு ஒருபோதும் பதில் அளிக்கக் கூடாது. காரணம், இவை உங்களின் தனிப்பட்ட தகவல்கள், ஆன்லைன் பாஸ்வேர்டுகளைத் திருடும் நோக்கத்துடன் அனுப்பப்படுபவை ஆகும்.

க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் முக்கியம்

ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும்போது, பிரீமியம், வருமானம் ஆகியவற்றை மட்டும் பார்க்காமல், வாங்கப்படும் காப்பீட்டுத் திட்டம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கவனிப்பது மிக முக்கியம்.

உதாரணமாக, முழுக்க முழுக்க உயிர் பாதுகாப்பு கவரேஜ் (Pure Protection Products) மட்டுமே அளிக்கும் டேர்ம் பிளான் பாலிசிகளில், பிரீமியம் தொகை மிகக் குறைவாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் டேர்ம் பிளானுக்கான பிரீமியம் மற்ற நிறுவனங்களைவிட மிகக் குறைவாக இருக்கக்கூடும். ஆனால், அதன் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தைச் சரிபார்ப்பது நல்லது. இது பெரும்பாலும் மிகவும் மோசமாக இருக்கலாம்.

க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் என்பது இழப்பீடு கேட்டு எத்தனை கோரிக்கைகள் வந்தன, அதில் எத்தனை கோரிக்கை களுக்கு இழப்பீடு வழங்கப் பட்டன என்கிற சதவிகிதமாகும். இது எப்போதும் அதிகமாக இருக்க வேண்டும். கடந்த 5, 10 ஆண்டுகளில் இந்த விகிதம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் மட்டுமே அந்த நிறுவனத்தின் பாலிசியை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

யூலிப் பாலிசி எடுக்கும்போது...

பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டங் களை அதாவது, யூலிப் பாலிசிகள் (Unit-Linked Insurance Plans – ULIPs) வாங்கும்போது, வருமானத்தை மட்டும் பார்க் காமல், நிறுவனத்தின் உண்மை யான கடந்த கால ஃபண்ட் வருமானச் செயல்பாட்டையும் பார்ப்பது முக்கியம்.

மேலும், பாலிசியின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனை களையும் கூர்ந்து படித்துப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இதனால் ஒருவர் எடுத்திருக்கும் பாலிசி பற்றி மிகவும் முழுமையாக அறிய முடியும் என்பதுடன், அவரின் தேவையை நிறைவேற்றும் மிகவும் பொருத்தமான பாலிசியை அவர் வாங்கியிருக்கிறார் என்ப தாகும்.

உதாரணமாக, மிகப் பெரிய பணக்காரர் ஒருவருக்கு ஆயுள் காப்பீடு என்பது மிக முக்கிய மில்லை என்கிற நிலையில், அவர் முதலீடு மற்றும் காப்பீடு இணைந்த எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளை எடுப்பதில் தவறு இல்லை. இதுவே, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர், தான் இல்லையெனில், தன் குடும்பத்தைக் கவசம் போல் பாதுகாக்கும் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் பாலிசியை எடுப்பதுதான் சரியாக இருக்கும். எண்டோவ் மென்ட் அல்லது யூலிப் பாலிசி எடுப்பது சரியாக இருக்காது.

முன்மொழிவுப் படிவத்தை முழுமை யாக நிரப்புங்கள்

பாலிசி எடுக்கும்போது கேட்கப் படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பது முக்கியம். எப்போதும் முன்மொழிவுப் படிவத்தை (Proposal Form) முழுமையாக நிரப்ப வேண்டும். பிரீமியம் செலுத்தும் முன் பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவுப் படிவம் உங்களின் இ-மெயிலுக்கு வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரீமியம் செலுத்தும் முன் சரியான இணையதளம்தானா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.

தற்போதைய சூழலில், ஆயுள் காப்பீட்டு பாலிசியை விற்கும் ஓர் இணையதளத்துக்குள் நுழையும்போதே பெயர், வயது, இ-மெயில் ஐ.டி, தொலைபேசி எண் ஆகியவை கேட்கப்படும். இந்த நிலையில், காப்பீடு பாலிசி எடுப்ப தற்கான விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்பிக் கொண்டிருக்கும்போது அல்லது இடையில் ஏதாவது தடை ஏற்பட்டு மேற்கொண்டு பாலிசி எடுக்கும் பணியை நிறுத்தி வைத்திருக்கும்போது, அந்த இணையதளத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அப்போது அவர்கள் சில பாலிசிகளைக் குறிப்பிட்டு, அதை எடுக்கச் சொல்லலாம். அப்போது உங்களுக்கு என்ன விதமான பாலிசி தேவை என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. இல்லையெனில், தவறான பாலிசி எடுக்கும் சூழல் ஏற்படக்கூடும். இதனால் உங்கள் தேவை நிறைவேறாமல் போவதுடன், பணமும் வீணாகும். எனவே, ஆன்லைனில் பாலிசி எடுக்கும் முன் அந்தக் குறிப்பிட்ட பாலிசியை நன்கு அலசி ஆராய்ந்து அதன் பிறகே எடுக்க வேண்டும். சந்தேகம் ஏதாவது இருந்தால், காப்பீட்டு நிபுணர்கள் அல்லது காப்பீட்டு நிறுவன அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்திக் கொண்டு அதன் பிறகு, பாலிசி எடுப்பது நல்லது.

ஆன்லைனில் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும்போது, மேற்கூறிய விஷயங்களில் கவனமாக இருப்பது மிக முக்கியம். இதனால் அவர்கள் எந்த மோசடியிலும் சிக்க மாட்டார்கள் மற்றும் சரியான பாலிசியை எடுக்க முடியும்.

விழிப்புணர்வு மிக அவசியம்

பாலிசிதாரர்களுக்கு விவரங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காப்பீட்டு நிறுவனங்கள், இணையம் மூலம் காப்பீட்டுத் திட்டங்களை விநியோகிப்பவர்கள், காப்பீட்டுத் துறையை நெறிப்படுத்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆகியோரின் பொறுப்பாகும்.

கூடவே இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களும் விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism