Published:Updated:

தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி... 2021 ஏப்ரல் 1 முதல்..! - என்னென்ன அம்சங்கள்..?

காப்பீட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
காப்பீட்டு

INSURANCE

டந்த வாரம் ஐ.ஆர். டி.ஏ.ஐ (இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) பொதுக் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான அறிவுறுத்தலை செய்துள்ளது. அதில், எளிய வடிவிலும் அனைத்து மக்களுக்கும் புரியும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசிகளை வரும் 2021 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வடிவமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சிக்கலான பாலிசிகள்...

தற்போது காப்பீட்டுச் சந்தையில் பல்வேறு வகையான தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசிகள் உள்ளன. ஒவ்வொரு பாலிசியும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. சாதாரண மக்கள் ஒவ்வொரு பாலிசியையும் ஆராய்ந்து பார்த்து தனக்குத் தகுந்த ஒரு தனிநபர் விபத்து பாலிசியைத் தேர்ந்தெடுப்பது சவாலாகவே உள்ளது.

சாதாரண மக்களும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் எந்த விதமான கூடுதல் பிரிவுகள் இல்லாமலும் எளிய வகை தனிநபர் பாலிசியை உருவாக்க ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்.ஸ்ரீதரன்  நிதி ஆலோசகர், Wealthladder.co.in
எஸ்.ஸ்ரீதரன்  நிதி ஆலோசகர், Wealthladder.co.in

ஏழு அம்சங்கள்...

தனிநபர் விபத்து பாலிசி என்பது, விபத்தால் நடக்கும் மரணம் அல்லது விபத்தால் ஏற்படும் நிரந்தரமாக ஏற்படும் உடல் இழப்பு போன்றவற்றை கவர் செய்யும் வகையில் இருக்கும் பாலிசி ஆகும். புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள இந்த எளிய பாலிசி கீழ்க்காணும் குறைந்தபட்ச அம்சங் களைக் கொண்டவாறு இருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.

1. பாலிசி ஒரு வருட காலம் அமலில் இருக்குமாறும் ஒவ்வொரு நடைமுறையும் புதுப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

2. பாலிசி எடுத்து ஒரு வருடத் துக்குள் பாலிசிதாரர் விபத்தில் இறந்துவிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டால், கவரேஜ் தொகை 100% வழங்கப்பட வேண்டும்.

3. நிரந்தர ஊனம் என்பது இரு கண்களை இழப்பதையோ, இரு கைகள் அல்லது இரு கால்களை இழப்பதையோ குறிக்கும். இந்தக் காரணத்தால் பாலிசிதாரர் வேலைக்குப் போக முடியாத நிலையில் பாலிசிதாரருக்கு முழு கவரேஜ் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்.

4. பாலிசிதாரருக்கு விபத்தால், உடலின் ஒருபாகம் (உதாரணத்துக்கு ஒரு கண் அல்லது ஒரு கால் அல்லது ஒரு கை) இழந்து அவதிப்பட்டால் அவருக்கு காப்பீட்டுத் தொகையில் 50% இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

காப்பீட்டு
காப்பீட்டு

5. விபத்து காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 10% வரை இழப்பு வழங்க வேண்டும்.

6. பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு (2 குழந்தைகள் வரை) காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை வழங்க வேண்டும்.

7. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சமாகவும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடிக்கு மிகாமலும் இந்த வகை பாலிசிகள் இருக்க வேண்டும்.

2021 ஏப்ரல் முதல்...

இந்த பாலிசிகள் 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்தத் தனிநபர் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒவ்வொரு சாமானியனும் புரிந்துகொண்டால், எளிதில் எடுக்க உதவியாக இருக்கும்.