Published:Updated:

பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ்... வாசகரின் கசப்பான அனுபவம்..!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ்... வாசகரின் கசப்பான அனுபவம்..!

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஷூரன்ஸ்

தனியார் வங்கிகள் முதல் தேசிய வங்கிகள் வரை வீட்டுக் கடன் வழங்க குறைந்த வட்டி விகிதம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன. அதே நேரம் “வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் வழங்கும் வங்கி அதிகாரிகள், அதில் நமக்குத் தெரியாமலே பல விஷயங் களையும் சேர்த்து நமக்கு தந்துவிடுகிறார்கள். கவனமாக இருங்கள்” என்று எச்சரிக்கிறார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நாணயம் விகடன் வாசகர் ஒருவர்.

அரசு ஊழியர் என்பதால் தன் அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாத அவர், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நம்மிடம் கூற ஆரம்பித்தார்.

“சிவகங்கை மாவட்டத்துல உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியொன்றில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தேன். அந்த வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி அதிகமாக இருந்ததால், தேசியமயமாக்கப்பட்ட வேறொரு வங்கிக்குக் கடனை மாற்ற முடிவு செய்தேன்.

வீட்டுக் கடன் பெற புதிதாக அணுகிய வங்கியின் மேனேஜர், ‘வீட்டுக் கடனை மாற்றும்போது பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸை யும் மாற்றித் தர வேண்டும்’ என்றார். அதனால் பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான விவரங்களை நான் ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கிய வங்கிக் கிளை மேனேஜரைச் சந்தித்துக் கேட்டேன். ‘உங்கள் வீட்டு முகவரிக்கு இன்ஷூரன்ஸ் டாக்குமென்ட் வந்திருக்குமே...’ என்றார். வரவில்லை என்றேன்.

வீட்டுக் கடன் தொடர்பாக என்னுடைய இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களைத் தருவதற்கு ஒரு வாரம் அலையவிட்டு, பிறகு ரெண்டு பக்க பேப்பரைத் தந்தார்கள். 10 வருடம் திருப்பிச் செலுத்தும் வகையில் வீட்டுக் கடன் வாங்கியிருந்த எனக்கு 20 வருடத்துக்கு பிரீமியம் செலுத்தும் வகையில் பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் போட்டிருந்தது. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 வருடத்துக்குள் கடனைக் கட்டிமுடிக்கும் எனக்கு எதற்காக 20 ஆண்டுகளுக்கு பாலிசி போட வேண்டும், தேவை இல்லாமல் எதற்கு கூடுதலாக 10 வருடம் பிரீமியம் செலுத்த வேண்டும்? இதைப் பற்றி பேங்க் மேனேஜரிடம் கேட்டால், சமாளிக்கும் விதமாகப் பேசினார்.

பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ்... வாசகரின் கசப்பான அனுபவம்..!

முன்னணி வங்கியின் துணை நிறுவனத்தில் தான் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. என் வீட்டு முகவரியை மாற்ற அந்த நிறுவனத்தின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள அவர்களின் டோல் பிரீ நம்பருக்கு போன் செய்தேன். 30 நிமிடங்கள் கழித்துதான் தொடர்பு கிடைத்தது. அவர்கள் என் மெயில் ஐடியைக் கேட்டார்கள். இவ்வளவு நாள்களாக இன்ஷூரன்ஸ் பாலிசியை அனுப்பாததற்கு ஏதேதோ காரணங் களைச் சொன்னார்கள்.

தொடர்ந்து மெயில் அனுப்பிய பிறகு, என் முகவரியைத் மாற்றித் தந்தார்கள். அதைத் தொடர்ந்து என் பிராப்பர்ட்டியின் முகவரியை மாற்றவும் பல மெயில்கள் அனுப்பினேன். டோல் பிரீ நம்பரில் பல முறை தொடர்புகொண்டு பேசியும் எந்தப் பயனும் இல்லை. பிறகுதான் வங்கியில் வேலை செய்யும் அலுவலர்களே பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகவும் இருக்கிறார்கள் என்பதும், அவர் களுக்கு டீம் லீடராக பேங்க் மேனேஜரே இருப்பதும் தெரிந்தது. இவர்களுக்கு நோடல் மேனேஜர் ஒருவர் இருக்கிறார். இப்படி பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளாக வங்கி ஊழியர்களே இருந்தும் அதைப் பற்றி தெரியாதது போல் நடந்துகொள்வது ஏன்?

10 வருடங்களில் முடியும் பாலிசிக்கு 20 வருஷம் ஏன் இன்ஷூரன்ஸ் போட்டீர்கள் என்கிற கேள்வியை நான் தொடர்ந்து கேட்க, அதற்குரிய பதிலைச் சொல்லாமல், ‘வேண்டுமென்றால், நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். ‘இது உங்களின் தவறு. நீங்களே மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், ரூ.23,000 செலுத்தியுள்ளேன். இதுவே 10 ஆண்டுகள் எனில், ரூ.12,000-தான் வரும். இது அவர்கள் செய்த தவறு. தேவை இல்லாமல் இன்ஷூரன்ஸுக்கு ஏன் அதிக பணம் கட்ட வேண்டும்? வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்று சொன்னால், கவனமாக இருங்கள். இன்ஷூரன்ஸ் கமிஷனுக்காக நமக்குத் தெரியாமல் விண்ணப்பங்களில் இஷ்டத்துக்கு கையெழுத்து வாங்கி நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள் சில வங்கி அதிகாரிகள். பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாகக் கேளுங்கள். எல்லா விவரங்களையும் எழுத்தில் சரியாக தந்தபின்பே பாலிசியை வாங்குங்கள்” என்று பேசி முடித்தார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism