Published:Updated:

ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு!

Post Office ( Photo: Ashok kumar.D / Vikatan )

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ரூ.399-ல் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம்! - அஞ்சல்துறை அறிவிப்பு!

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

Published:Updated:
Post Office ( Photo: Ashok kumar.D / Vikatan )

விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகமாகி பல ஆண்டுகளானாலும், இன்னும் சாமானிய மனிதர்களை சென்று இந்த திட்டம் சேரவில்லை. இத்திட்டம் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமும் மிகக் குறைந்த பிரீமியம் தொகையில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தபால் நிலையம் - மாதிரி புகைப்படம்
தபால் நிலையம் - மாதிரி புகைப்படம்

இந்த திட்டம் குறித்து சென்னை வடக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் லெக்ஷ்மணன் பிள்ளை தெரிவித்திருப்பதாவது,

"இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தை டாடா ஏஜஜி ஜெனரல் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா போஸ்டல் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் இணைய அஞ்சலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போனில் விரல் ரேகை பதிந்து 5 நிமிடங்களிலேயே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். விபத்து காப்பீட்டுத் திட்டத்தில், 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம்.

ஆண்டிற்கு ரூ.399 அல்லது ரூ.396 பிரீமியம் செலுத்தி ரூ. 10 லட்சம் கவரேஜ் பெறலாம்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
insurance

இந்த காப்பீடு திட்டத்தில்...

  • விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்கப்படும்.

  • விபத்தினால் ஏற்படும் உள்நோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60,000 வரையிலும், புறநோயாளி மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30,000 வரையிலும் வழங்கப்படும்.

  • விபத்தினால் மரணம், ஊனம் அல்லது பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.

  • விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு, தினப்படி தொகையாக ஒரு நாளைக்கு ரூ.1000 என 9 நாட்களுக்கு வழங்கப்படும்.

  • விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினருக்கு பயண செலவாக அதிகபட்சம் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

  • விபத்தினால் உயிரிழந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.