அனைவருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி... அதிரடி நடவடிக்கையை எடுக்குமா ஐ.ஆர்.டி.ஏ.ஐ?

Insurance
சி.கேசவன் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்
கடந்த பத்தாண்டுகளில் மெடிக்ளெய்ம் பாலிசிகளின் வளர்ச்சியும் மெடிக்ளெய்ம் இன்ஷூரன்ஸ் (Standalone Health insurance Companies) கம்பெனிகளின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதிலும், குறிப்பாக இந்த நோய்த்தொற்று காலத்தில் மெடிக்ளெய்ம் பாலிசிகளின் வளர்ச்சியும் கம்பெனிகளின் வளர்ச்சியும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் (2020-2021) நவம்பர் வரை 45 லட்சம் காப்பீடுகளை வழங்கி, ரூ.5,600 கோடி ரூபாயை பிரீமியமாக ஈட்டியிருக்கிறது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் ரூ.10,000 கோடி பிரீமியத்தை இலக்காக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. இதிலிருந்து மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தையும் தேவையையும் நாம் உணர முடியும்.
மெடிக்ளெய்ம் பாலிசிகளைப் பொதுக் காப்பீட்டிலிருந்து (General Insurance) பிரித்து, தனிக் காப்பீடாக வழங்க தனிக் காப்பீட்டு நிறுவனம் (Standalone Health Insurance Companies) ஒன்றைத் தொடங்கி நடத்த ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) அனுமதி தந்ததே இதற்கு முக்கியமான காரணம்.
அதேபோல், ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பானது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீடுகளைத் தனியாகப் பிரித்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் மட்டும் வழங்கும் வழிமுறைகளை உருவாக்கி, அதற்கென தனி நிறுவனங்களை அனுமதித்து, ஊக்குவித்து பொது மக்கள் பயன்பெற வழி செய்ய வேண்டும்.
இதைக் கேட்பதற்கு நமக்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும் முதன் முதலாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் மட்டும் வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டபோதும் இப்படித்தான் அனைவருக்கும் தோன்றியது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதன்மூலம் பொதுமக்கள் எப்படிப்பட்ட நன்மைகளை அடை வார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலே இது எந்த அளவுக்கு முக்கியமான மாற்றமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக் கின்றன. உதாரணமாக, வருமானச் சான்று கட்டாயம், குறைந்தபட்ச படிப்பு மற்றும் நாட்டின் சிலபகுதிகள் நெகட்டிவ் லொகேஷனாக இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பெறும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
டேர்ம் இன்ஷூரன்ஸுக்காக தனியான க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ இதுவரை கிடையாது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த அதாவது, இறப்புக் கேட்பு (Death Claim), முதிர்வுப்பலன் (Maturity Benifit) எல்லாம் இணைந்தே தரப்படுகிறது. தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் நிறுவனங்கள் வரும்போது க்ளெய்ம் ரேஷியோ தெளிவாகத் தெரியவரும். அதன் அடிப்படையில் வாடிக்கை யாளர்கள் சரியான முடிவை எடுக்கமுடியும்.
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் தரப்படும்போது முகவர்களாலும் (Agents), தரகர்களாலும் (Brokers), இணையதள விற்பனையாளர் களாலும் (Online Sales), வங்கிகளாலும் (Bank Assurance) வாடிக்கையாளர்கள் பல்வேறு சமயங்களில் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். டேர்ம் இன்ஷூரன்ஸ் மட்டும் வழங்கும் தனி நிறுவனங்கள் வந்தால், இந்த குளறுபடிகள் முற்றிலும் குறைந்து வாடிக்கையாளர்கள் சரியான சேவையைப் பெற வசதியாக இருக்கும்.
மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குவதற்கென தனி நிறுவனங்கள் உருவாகும்போது போட்டி உருவாகி பிரீமியங்கள் குறைந்து பொதுமக்கள் பயன்பெற ஏதுவாக இருக்கும்.
சாதாரண ஆட்டோ ஓட்டுனரும், ஒப்பந்த பணியாளரும் தினக்கூலி வேலைசெய்பவரும்கூட அவர்களது தேவைக்கேற்ப டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் நிலைவரும்.
செய்யுமா ஐ.ஆர்.டி.ஏ.ஐ?