எஸ்.ஶ்ரீதரன் நிதி ஆலோசகர், Wealthladder.co.in

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க ஆயுள் காப்பீடு மட்டும் அளிக்கும் பாலிசி. பாலிசி தாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் தருவாயில் பாலிசிதாரரின் குடும்பத்துக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்வகை பாலிசிகளில் பிரீமியம் குறைவு, காப்பீடு தொகை அதிகம். இந்த பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி களுக்கான பதிலைப் பார்ப்போம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் யாருக்குத் தேவை?

“டேர்ம் இன்ஷூரன்ஸ் ஒவ்வொரு வருமானம் ஈட்டும் நபருக்கும் தேவை. ஒரு குடும்பத்தின் வரவு / செலவு மற்றும் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்வது வருமானம் ஈட்டும் நபரையே சார்ந்து இருக்கும். இந்தத் தருணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் தருவாயில், அந்தக் குடும்பத்தின் நிதிநிலையைச் சீர்செய்ய டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ் எப்போது எடுக்க வேண்டும்?

“ஒவ்வொரு வருமானம் ஈட்டும் நபரும், அவருடைய குடும்பம் அவருடைய நிதியைச் சார்ந்திருக்கும் நிலையில் டேர்ம் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியமாகும். உதாரணத்துக்கு, ஒருவருக்குத் திருமணமான பிறகு அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் வருமானம் ஈட்டும் நபரை சார்ந்து வாழ்வதால், அவர் கண்டிப்பாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, குறைந்த வயதுள்ள போதே எடுத்துக்கொண்டால் பிரீமியம் குறைவாக இருக்கும்.”

டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?

“டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பாலிசிதாரரின் வயது, பாலிசியின் காலம், காப்பீட்டுத் தொகையின் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும். உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒரு ஆணுக்கு 1 கோடி டேர்ம் இன்ஷூரன்ஸ் 30 வருட பாலிசிக்கு ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.15,000-ஆக இருக்கும். இது மாதத்துக்கு ரூ.1,250. ஒரு நாள் கணக்கில் பார்த்தால் ரூ.40. இது ஒரு நல்ல ஹோட்டலில் காபி குடிக்கும் செலவுக்கு சமம்.”

டேர்ம் பாலிசிகளின் நன்மைகள் என்ன?

“டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியமான நன்மை அதிக காப்பீடு, குறைந்த செலவு, பாலிசியின் காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது வாழ்க்கையின் முக்கியத் தருணங்களான திருமணம், குழந்தை பிறப்பின்போதோ அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி, தீவிர வியாதிகளான இதய நோய், சிறுநீரக நோய்களுக்கு அதிக காப்பீடு வசதி, விபத்தினால் உண்டாகும் இறப்பு அல்லது உடல் உறுப்புகள் இழந்தால் ஒரு தொகையை வழங்கும் வசதி, வருமான வரிச் சலுகை போன்ற பல நன்மைகள் உள்ளன.

ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்?

“ஒவ்வொரு வருமானம் ஈட்டும் நபரின் ஆண்டு வருமானத்தைபோல, குறைந்த பட்சம் 10 மடங்கோ, அதிகபட்சமாக 20 மடங்குக்கு மிகாமல் டேர்ம் பாலிசி எடுத்திருப்பது மிகவும் அவசியமாகும்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் ஒரு வருடம் கழித்து பிரீமியம் மாறுமா?

“ஒருவர் பாலிசி எடுக்கும்போது எவ்வளவு பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த பிரீமியம் பாலிசிக் காலம் முடியும் வரை மாறாது. ஆனால், அரசாங்க வரிகள் மட்டும் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்துக்கு, முன்பு 15% இருந்த சேவை வரி, ஜி.எஸ்.டி வந்தபிறகு 18 சதவிகிதமாக மாறியது. இத்தருணத்தில் பாலிசியின் மொத்த பிரீமியத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது.”

வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

“என்.ஆர்.ஐ மற்றும் இரு நாட்டு குடி உரிமை கொண்ட நபர்களுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படும். இவர் களுக்கான பிரத்தியேக படிவம் மற்றும் என்.ஆர்.ஐக்கான ஆதாரம் கொடுப்பதன் மூலம் இவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள முடியும்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தபிறகு ஒருவர் என்.ஆர்.ஐ ஆகிவிட்டால் என்ன செய்வது?

“பாலிசி எடுத்தபின் ஒருவர் என்.ஆர்.ஐ-ஆன பின்னும் அந்த பாலிசியைத் தொடரலாம். ஆனால், இந்த மாற்றத்தைக் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்காவிட்டால், உங்கள் டேர்ம் பாலிசி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகாது என்பதை நினைவில் கொள்க. உங்களுடைய அனைத்து பாலிசிகளிலும் உங்கள் கே.ஒய்.சி-யில் என்.ஆர்.ஐ மாற்றத்தைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யத் தவறினால், உங்கள் பாலிசியின் பிரீமியத்தைப் புதுப்பிக்க முடியாது.’’

புகை பிடிப்பவர்கள் அல்லது புகையிலை போன்ற பழக்கங்கள் இருக்கும்பட்சத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

“புகையிலையை எந்த விதத்தில் உபயோகித்தாலும், பாலிசிதாரர் பாலிசி எடுக்கும்முன் பாலிசியின் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மேலும், பாலிசிதாரர் புகையிலை பயன்படுத்தும் பட்சத்தில், பாலிசிதாரரின் பிரீமியம் தொகை சாதாரண பாலிசியின் தொகையைவிட 40 - 60% வரை அதிகமாக இருக்கும்.”

விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்துக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

“விபத்துக் காப்பீடு என்பது விபத்தினால் உண்டாகும் உயிர் இழப்புக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இந்த வகையான பாலிசிகளின் பிரீமியம் மிக குறைவாக இருக்கும். மேலும், இந்த வகையான பாலிசிகளில் பாலிசிதாரர் தற்செயலாக உயிரிழந்தால் காப்பீடுத் தொகை கிடைக்காது. இதுவே டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை விபத்தினாலோ, நோய் வாய்ப்பட்டு அல்லது தற்செயலாக உயிரிழப்பு நேரும் அனைத்து விதமான உயிரழப்புக்கும் காப்பீடு கிடைக்கும்.”

இரண்டு வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

“இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் டேர்ம் இன்ஷூரனஸ் எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு எடுக்கும்பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் தருவாயில் இரண்டு நிறுவனங்களிலும் காப்பீட்டு தொகையை க்ளெய்ம் செய்யவேண்டும். மேலும், இரண்டாவது நிறுவனத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் தருவாயில் முதலில் எடுத்த பாலிசியின் தகவல்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகைகள் உண்டா?

“டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் வருமான வரிப் பிரிவு 80சி-யின் படி வருமான வரிச்சலுகை பெறலாம்.’’

பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கு டேர்ம் இன்ஷூரன்சில் க்ளெய்ம் செய்ய முடியுமா?

“பயங்கரவாதத் தாக்குதலால் உண்டாகும் மரணத்துக்கு கண்டிப்பாக க்ளெய்ம் வழங்கப் படும். ஆனால், தற்கொலையால் ஏற்படும் மரணத்துக்கு பாலிசி எடுத்த முதல் ஆண்டு க்ளெய்ம் கிடைக்காது.”

டேர்ம் பாலிசிகளில் க்ளெய்ம் பெறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

“பொதுவாக, பாலிசி க்ளெய்ம் படிவத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்ததில் இருந்து 15 - 20 நாள்களில் க்ளெய்ம் கிடைத்து விடும். இதுவே பாலிசி எடுத்து முதல் மூன்று ஆண்டுகளில் விபத்தில் இறக்காமல், தற்செயலாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ சிறிது அதிகமாக விசாரணை செய்து இறப்பின் காரணத்தை ஊர்ஜிதம் செய்த பிறகு க்ளெய்ம் கிடைக்கும்.’’

பிட்ஸ்

ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிகள் மூலம் வரும் பிரீமியம் கடந்த ஜனவரியில் 6.7% அதிகரித்து ரூ.18,488 கோடியாக இருக்கிறது. கடந்த இதே காலத்தில் ரூ.17,333 கோடி மட்டுமே பிரீமியம்.