Published:Updated:

தென்னிந்தியாவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது குறைவு..! - என்ன காரணம்..?

டேர்ம் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டேர்ம் இன்ஷூரன்ஸ்

கோவிட்-19 மருத்துவச் செலவுக்கான தொகையைச் சேர்ப்பதில் தென் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்!

தென்னிந்தியாவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது குறைவு..! - என்ன காரணம்..?

கோவிட்-19 மருத்துவச் செலவுக்கான தொகையைச் சேர்ப்பதில் தென் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்!

Published:Updated:
டேர்ம் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டேர்ம் இன்ஷூரன்ஸ்
யுள் காப்பீட்டு விஷயத்தில் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி என்பது குறித்த சர்வேயை மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், கன்டார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெளியிட்டிருக்கிறது.

தென்னிந்தியர்கள், மிக அதிகமாக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை அதாவது, 78% (வட நாட்டுக்கு இணையாக) கொண்டிருக்கிறார்கள். கிழக்கு பிராந்தியத்தில் 77%, மேற்கு இந்தியாவில் 73% பேர் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 48% தென்னிந்தியர்கள் மட்டுமே பாதுகாப்பான மனநிலையில் (financial security levels) இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது, வடக்கு மற்றும் மேற்கில் 53%, கிழக்கு பிராந்தியத்தில் 52% பேரும் பாதுகாப்பான மனப்பான்மையுடன் இருப்பதாக உணர்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டேர்ம் இன்ஷூரன்ஸ்
டேர்ம் இன்ஷூரன்ஸ்

தென்னிந்தியாவில் டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகவும் குறைவாக உள்ளது. தென்னிந்தியர்களில் 34% மட்டுமே டேர்ம் பிளான் வைத்திருக்கிறார்கள். இது கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கைவிட குறைவாக உள்ளது. அங்கு முறையே 40%, 37% மற்றும் 35% பேர் டேர்ம் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். தென்னிந்தியர்கள் எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளை அதிக எண்ணிக்கையில் எடுத்திருக்கிறார்கள்.

கோவிட்-19 சிகிச்சை மற்றும் மருத்துவச் செலவுக்கான தொகையைச் சேர்ப்பதில் தென்னிந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது இந்த சர்வே மூலம் தெரிய வந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism