Published:Updated:

கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கட்டணத்தை மருத்துவமனை தீர்மானிப்பதால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்மை தர மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை!

பிரீமியம் ஸ்டோரி
டந்த சில மாதங்களாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் பிரபலமாகி வருகிறது கோவிட்-19 இன்ஷூரன்ஸ் பாலிசி.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஒருவர் ஆட்படும்பட்சத்தில், பல லட்ச ரூபாயைச் செலவு செய்துதான் மருத்துவ சிகிச்சை பெற முடியும். இந்தச் செலவைத் தவிர்க்கவே குறிப்பிடத்தகுந்த அளவு பிரீமியத்தைச் செலுத்தி, இந்தப் பாலிசியை எடுக்கிறார்கள் பலர்.

கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஆனால், சமீப காலமாக அடிக்கடி காதில்படும் செய்தி, கோவிட்-19 பாலிசிக்கான இழப்பீடு முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதுதான். கோவிட்-19 இன்ஷூரன்ஸ் பாலிசியில் இழப்பீட்டை முழுமையாகப் பெறுவதில் என்ன சிக்கல்..?

அத்தியாவசிய செலவு நிராகரிப்பு!

பொதுவாக, கோவிட்-19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற பிறகு, காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உபயோகப்படுத்தும் பி.பி.இ கிட் (PPE Kit) மற்றும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் சில உபகரணங்களுக்கு க்ளெய்ம் தருவதைத் தவிர்க்கின்றன. இந்த நிராகரிப்பைத் தவிர்ப்பதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத தருணத்தில் மட்டுமே க்ளெய்மை வழங்குகிறது. பி.பி.இ கிட் மற்றும் சில மருத்துவச் செலவுகளை நுகர்பொருளாகக் குறிப்பிடுவதன் மூலம் மொத்த க்ளெய்மில் 50 - 70% வரை க்ளெய்மை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன.

கோவிட்-19 என்பது மிகப்பெரிய தொற்று நோய். ஆகவே, இந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆபத்துக்குள்ளாக்குவதால் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். தவிர, அனைத்து சுகாதார நிபுணர்களும் பி.பி.இ கிட் கருவிகள் மற்றும் முகமூடிகளுக்குக் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் செலவுகளைத் திருப்பித் தர மறுப்பதால், க்ளெய்ம் தொகையிலிருந்து பெரும் தொகை பாலிசிதாரர்களுக்குக் கிடைக்காமலே போவது பெரிய இழப்பாகவே இருக்கிறது.

கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நியாயமான முறையில் திருப்பிச் செலுத்துதல்

மருத்துவக் காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனத்துக்கும் ஒரு காப்பீட்டாளருக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தமாகும். இது காப்பீட்டாளரால் ஏற்படும் மருத்துவச் செலவுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில் மருத்துவ மனையோ, எந்த வகையிலும் இடம் பெறவில்லை. ஆகவே, காப்பீட்டாளருக்கு நியாயமாகச் சேர வேண்டிய தொகையை இழக்க முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஒரு மருத்துவரின் கட்டணத்தைத் தீர்மானிப்பது அந்த மருத்துவரின் அனுபவம் மற்றும் அவரின் படிப்புதான். மேலும், மருத்துவமனை கொடுக்கும் வசதிக்கேற்ப மருத்துவமனையின் கட்டணம் மாறுபடும். இதை அந்தந்த மருத்துவமனைகளே தீர்மானிப்பதால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்மைத் தர மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றே கருதலாம்.

மேலும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ (இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்), கோவிட்-19-ல் வரும் மொத்த க்ளெய்மையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இத்தகைய தருணங்களில் பாலிசிதாரரைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவசியமான பொருள்களின் பயன்பாடு!

ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்போது நுகர்பொருள்கள், செலவழிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் ஒரு நோயாளியின் தொற்று மற்றொரு நோயாளிக்குப் பரவாது. எனவே, அத்தகைய பொருள்களின் பயன்பாடு முறையானது என்பதுடன் அவசியமானதும்கூட. காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் செலவுகளுக்கான பணத்தைத் தர முடியாது எனத் தன்னிச்சையாக முடிவெடுப்பதை அனுமதிக்க முடியாது. இந்தப் பிரச்னை தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, இந்தப் பொருள்களுக்கான பணம் காப்பீட்டாளர்களுக்குக் கிடைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் நீதியைப் பெற முடிந்தது.

கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

சமீபத்தில் ஒரு வழக்கில், நர்சிங் மற்றும் மருத்துவமனைகளின் பயன்பாடுகள், ஆபரேஷன் தியேட்டரில் பயன் படுத்தப்படும் நுகர்பொருள்கள், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மருந்தகம் மற்றும் மருந்துகள் மற்றும் தொழில்முறைக் கட்டணங்களுக்கான தொகையைக் காப்பீட்டாளருக்குத் தர முடியாது என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொன்னது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காப்பீட்டாளர். நுகர்வோர் நீதிமன்றம், இன்ஷூரன்ஸ் நிறுவனம் தர மறுத்த தொகையைத் திரும்பத் தரச் சொன்னது.

காப்பீட்டளர்கள் என்ன செய்யவேண்டும்?

கோவிட்-19 பாலிசியை எடுக்கும் முன் விஷயங்களைக் கவனிக்க வேண்டியவை...

  • மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னால் அந்த மருத்துவமனை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மருத்துவமனையா என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ள மருத்துவ மனையில் மட்டுமே பணமில்லா சிகிச்சை பெற முடியும்.

  • மருத்துவமனையின் இன்ஷூரன்ஸ் பிரிவைத் தொடர்புகொண்டு க்ளெய்முக்கு பதிவு செய்ய வேண்டும்

  • சிகிச்சை முடிந்தவுடன் க்ளெய்ம் தொகையும் மருத்துவமனையில் கொடுக்கப் பட்ட பில்லின் தொகையும் சமமாக இருப்பின் வேறு எதுவும் செய்ய வேண்டாம். இதுவே மருத்துவமனையின் பில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தனியாக ஒரு க்ளெய்ம் படிவம் அனுப்பி க்ளெய்ம் கோரலாம்.

  • இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்மை தராதபட்சத்தில், அவர்கள் கூறும் விளக்கம் தெளிவில்லாத தருணத்தில், இன்ஷூரன்ஸ் கிரிவன்ஸ் செல்க்கு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பி விளக்கம் கேட்கலாம். இதன்மூலமும் உரிய தீர்வு கிடைக்காதபட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி விளக்கம் கேட்கலாம்.

  • முதலில் வழங்கப்பட்ட அசல் பாலிசியில் எந்த விலக்குகளும் இல்லாதபட்சத்தில், பாலிசி புதுப்பித்தலின்போது விலக்குகளைச் சேர்க்க முடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு