Published:Updated:

தனிநபர், கார் கடன் வாங்கியவர்களுக்கு `டேர்ம் இன்ஷூரன்ஸ்' உகந்தது... ஏன்?

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு முழுமையான ஆயுள் காப்பீடாகும். இந்த வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் குறைவாகவும் பாலிசியின் கவரேஜ் அதிகமாகவும் இருக்கும்.

தனிநபர் தேவைகள் அதிகமாகிவிட்டதால், தனிநபர் கடனாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்குவது சகஜம் ஆகிட்டது. இந்தக் கடனை செலுத்தும் கால அவகாசமும் ஒவ்வொருவரின் திரும்பச் செலுத்தும் திறனைப் பொறுத்து மாதாந்தரத் தவணை மற்றும் தவணை செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தத் தவணை செலுத்தும் காலம் 3 - 7 ஆண்டுகள் வரை, தனிநபர் கடன் அல்லது கார் கடனுக்கு தவணை செலுத்த வங்கிகள் மற்றும் வங்கிசாரா தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இதுவே, வீட்டுக் கடனைப் பொறுத்தவரை 10 - 20 ஆண்டுக் காலங்களுக்கு மாதத் தவணை செலுத்தவும் வழிவகுக்கின்றன.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

இவ்வாறு கடன் வாங்கி திரும்பச் செலுத்துவதால் ஒரு தனிமனிதரின் வருமானத்தில் 50% வரை தவணை செலுத்தவே சரியாகிவிடும். இந்தத் தருணத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு எதிர்பாராத விதத்தில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அந்தக் குடும்பத்தின் நிதி நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

இதைத் தவிர்க்க தனிநபர் கடனை வாங்கும் ஒருவர், அவர் வாங்கிய கடனுக்குத் தகுந்தவாறு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு முழுமையான ஆயுள் காப்பீடாகும். இந்த வகையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் குறைவாகவும் பாலிசியின் கவரேஜ் அதிகமாகவும் இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸை ஒருவர் எடுத்திருக்கும் பட்சத்தில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்தாலும், இழப்பீட்டின்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க முடியும்!

- ஒவ்வொருவரின் மாத வருமானம் மற்றும் தேவைகளைப் பொறுத்து தனிநபர் கடன், கார் கடன் அல்லது வீட்டுக் கடன் பெறுவது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது. இந்தக் கடன்கள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்புக் கவசத்தை உருவாக்குகிற மாதிரி எப்படி இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

> வீட்டுக் கடன் வாங்கியவர்கள் என்ன செய்யணும்? அவங்களுக்கான வழிகள் என்னென்ன இருக்கு?

> பிராப்பர்ட்டி இன்ஷூரன்ஸின் அவசியம் என்ன?

> என்னென்ன கவரேஜ் கிடைக்கும்?

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

- இப்படி முழுமையாக நமக்கு வழிகாட்டும் நாணயம் விகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > கடன் வாங்கியவர்கள் கலங்காதிருக்க, இன்ஷூரன்ஸ் கவசங்கள்! - பர்சனல் லோன் முதல் ஹோம் லோன் வரை..! https://bit.ly/3k3NfCc

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டுக்கால பொக்கிஷங்களிலும் வலம் வர... ரூ.1,499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு