Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

Published:Updated:
BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
BIZ பாக்ஸ்

24 வயதில் 5 பில்லியன் டாலர் : ரித்தேஷின் சாதனை!

ஒயோ (OYO) நிறுவனத்தைத் தொடங்கிய ரித்தேஷ் அகர்வால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறார். 2013-ல் அவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் மதிப்பு இன்றைக்கு சுமார் 5 பில்லியன் டாலருக்குப் பக்கத்தில். ஹோட்டல் அறைகளை ஆன்லைன் மூலம்  தேடித் தரும் சேவையைச் செய்துதருகிறது இந்த நிறுவனம். வருகிற 2023-ல் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆன்லைன் ஹோட்டல் சேவை தரும் நிறுவனமாக இது இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை பெரிய அளவில் நிறுவனத்தை வளர்த்திருக்கும் ரித்தேஷின் வயது வெறும் 24 மட்டுமே!

BIZ பாக்ஸ்

டூவீலர் விற்பனை மந்தம்... பெட்ரோல் விலை காரணம்!

பெட்ரோல் விலை கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி விகிதம் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்களின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்திலேயே இருந்துவந்தது. கடந்த 2015-ல் இரு சக்கர வாகனங்களின் வளர்ச்சி விகிதம் 25.06 சதவிகிதமாக இருந்தது. இது 2016-ல் 11 சதவிகிதமாகக் குறைந்து, தற்போது இந்த வளர்ச்சி விகிதம் வெறும் 6.77 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி இன்னும்  குறையுமோ என்னவோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

BIZ பாக்ஸ்

ஸ்டார்ட்டபிரீனர்... இன்குபேட்டர்களுக்கு ரூ.10 கோடி!

ஸ்டார்ட்டபிரீனர்கள் என்பது ஸ்டார்ட்அப் + ஆந்த்ரபிரினர் என்கிற இரு வார்த்தைகளின் கலவை. அதாவது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி நடத்தும் தொழில்முனைவர்களைக் குறிக்கிற வார்த்தை இது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பாக தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ சென்னையில் ஒரு நாள் கருத்தரங்கினை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ், ‘‘தமிழகத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. தமிழக அரசு தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 இன்குபேட்டர்களுக்கு (Incubators) ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது’’ என்றார். கல்லூரி மாணவர்கள் இந்தத் தகவலை கவனிக்கத் தவறக்கூடாது!

BIZ பாக்ஸ்

டந்த ஓராண்டு காலமாக ஒரு நாளைக்கு ரூ.300 கோடி வீதம் சம்பாதித்து வருகிறாராம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ரூ.3.71 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் இருக்கிறார் அம்பானி என பர்க்லேஸ் ஹூரன் இந்தியா ரிச் அறிக்கை சொல்கிறது!

BIZ பாக்ஸ்

ஒடிசா கான்க்ளேவ் 2018...  பங்கேற்ற பிசினஸ்மேன்கள்!

அதிவிரைவில் நடைபெறவிருக்கும் ‘மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2018’ நிகழ்ச்சியின்   முன்னோட்டமாக ஒடிசா மாநில அரசு, சென்னையில் முதலீட்டாளர்கள் நிகழ்வை  நடத்தியது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இதில் கலந்துகொண்டார். முன்னணி தொழில் அதிபர்கள் எம்.எம்.முருகப்பன், டாஃபே தலைவர் மல்லிகா சீனிவாசன், எம்.ஏ.எம்.ஆர் முத்தையா, பி.ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ஆர்.தியாகராஜன் ஆகியோர் ஒடிசா முதல்வரை சந்தித்துப் பேசினர். தமிழகத்தைச் சேர்ந்த 350 நிறுவனங்களின் பிசினஸ் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது!

கூகுளுக்கு இப்போது 20 வயது. 1998-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி கூகுள் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 27-ம் தேதிதான் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டும் தனது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட பல திட்டங்களை அறிவித்துள்ளது கூகுள்!

விமானப் பாதுகாப்பு... இந்தியா படுமோசம்!

விமானப் பாதுகாப்பு விஷயத்தில்  இந்தியா உலக அளவில் மிக மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்து எப்படி இருக்கிறது என ஒரு சர்வே எடுக்கப் பட்டது. இதில் இந்தியாவைவிட 160 நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் இந்தோனேஷியா, மலேசியா நாடுகள் நம்மைவிட சிறப்பான விமானப் பாதுகாப்பை அளித்து வருகிறது. இந்த விஷயத்தில் பக்கத்து நாடான பங்களாதேஷைவிட இந்தியா மோசமாக இருப்பதுதான் கொடுமை!

BIZ பாக்ஸ்

ஹாட் ஸ்டார் டு ஃபேஸ்புக்... அதிர்ஷ்ட அஜித் மோகன்!

ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த அஜித் மோகன், ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பதவி ஏற்கவிருக்கிறார்.

ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த உமங் பேடி கடந்த ஆண்டு அந்தப் பதவியிலிருந்து விலகினார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் அந்தப் பதவியில் யாரையும் நியமிக்காமலே இருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த நிலையில், உலக அளவில் இந்தியா மிக முக்கியமான மார்க்கெட் என ஃபேஸ்புக் நிறுவனம் கருதுவதால், தற்போது அஜித் மோகனை நியமித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism