Published:Updated:

``உலகின் சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பவர்கள் பட்டியல்" 20வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

ரிலையன்ஸ் அம்பானி ( reliance ambani )

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களா என்றும் கேட்கப்பட்டது. இதில் ஊழியர்கள் அளித்த மதிப்பின் அடிப்படையில், 800 நிறுவனங்கள் தரவரிசை படுத்தப்பட்டு, அந்த பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

``உலகின் சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பவர்கள் பட்டியல்" 20வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களா என்றும் கேட்கப்பட்டது. இதில் ஊழியர்கள் அளித்த மதிப்பின் அடிப்படையில், 800 நிறுவனங்கள் தரவரிசை படுத்தப்பட்டு, அந்த பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

Published:Updated:
ரிலையன்ஸ் அம்பானி ( reliance ambani )

உலகின் சிறந்த வேலை அளிப்பவர்களுக்கான பட்டியலில் 20 - ஆவது இடத்தை பிடித்துள்ளது, முகேஷ் அம்பானியின் `ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’. 

2022 - ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வேலை அளிப்பவர்களுக்கான தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் (Fobes) தயாரித்து வெளியிட்டது. அதில் 2,30,00,000 ஊழியர்கள் பணிபுரியும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 20 -ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

உலகின் சிறந்த வேலை அளிப்போர் தரவரிசை பட்டியலில், தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் முதலிடத்திலும், அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், மூன்று, நான்கு, ஐந்து ஆகிய இடங்களில் ஐபிஎம், ஆல்பாபெட், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது. 

மேலும் இந்த தரவரிசையில் 2 முதல் 12 இடங்கள் வரை, அமெரிக்க நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. 13-வது இடத்தில் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, 14வது இடத்தில் அமேசான் மற்றும் டெகாத்லான் 15வது இடங்களில் உள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் 100 இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த நிறுவனமும் இடம் பெறவில்லை. 

ஆனால் ஹெச்.டி. எஃப்.சி வங்கி 137வது இடத்திலும், பஜாஜ் 173வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குரூப் 240வது இடத்திலும், லார்சென் அண்ட் டௌப்ரோ 354வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 365வது இடத்திலும், ஹெச்.சி.எல் டெக்னாலஜி 455வது இடத்திலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 499வது இடத்திலும் உள்ளது.   

அதோடு அதானி எண்டர்பிரைசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டபிள்யூ.என்.எஸ். குளோபல் சர்விசஸ் ஆகிய நிறுவனங்களும், தொகுக்கப்பட்ட 800 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி - சித்தரிப்பு படம்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி - சித்தரிப்பு படம்

சந்தை மற்றும் நுகர்வோரின் தரவுகளைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனமான ஸ்டாடிஸ்டா (Statista) போர்ப்ஸ்க்காக இந்த ஆய்வை மேற்கொண்டது. 57 நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் சுமார் 1,50,000 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. 

அதில் ஊழியர்களிடம் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பொருளாதார செயல்திறன், திறன் மேம்பாடு, பாலின சமத்துவம், சமூகப் பொறுப்பு போன்றவற்றை மதிப்பிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதோடு தற்போது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களா என்றும் கேட்கப்பட்டது.  இதில் ஊழியர்கள் அளித்த மதிப்பின் அடிப்படையில், 800 நிறுவனங்கள் தரவரிசை படுத்தப்பட்டு, அந்த பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.